கிழிந்த போட்டோவை குளியல் அறையில் வைக்காதீங்க.. பாத்ரூம் டைல்ஸ் அழுக்கா இருக்கா? இந்த வாஸ்து பாருங்க
சென்னை: உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில், வாஸ்து குறைபாடுகள் இருப்பதாக தெரிந்தால், அதை முதலில் சரிசெய்துவிட வேண்டுமாம். அந்தவகையில், குளியல் அறையில் சில பொருட்களை வைக்கவே கூடாது என்றும், சில பொருட்களை கட்டாயம் வைக்க வேண்டும் என்றும் வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளது. அதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
சில பொருட்களை தெரியாமல்கூட குளியலறையில் வைக்கக்கூடாது என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.. குறிப்பாக, கிழிந்த மற்றும் பிய்ந்துபோன செருப்புகளை குளியலறையில் வைக்கக்கூடாதாம்.. இதனால், எதிர்மறை ஆற்றல் வீட்டுக்குள் அதிகரித்து, குடும்பத்தில் மேலும் குழப்பமும், வறுமையும் சூழ்ந்துவிடும் என்கிறார்கள்.

குளியலறையில் ஈரமான துணிகளை நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடாது. துவைப்பதாக இருந்தால் மட்டுமே துணிகளை ஊறவைத்து, துவைத்து, உடனே காய வைத்துவிட வேண்டும். ஈரத்துணிகளை வைத்திருப்பது, துர்சக்திகளை வீட்டுக்குள் அழைத்து வருவதற்கு சமமாகிவிடுமாம். அதேபோல, உடைந்த கண்ணாடிகள், உடைந்த பக்கெட்டுகளை வைத்திருக்கக்கூடாது. அந்த பக்கெட்டுகளையும் காலியாக வைக்காமல் தண்ணீர் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.
குளியலறை குழாய்கள்:
குளியலறை குழாய்களை அடிக்கடி சரிசெய்து கொள்ள வேண்டும். தண்ணீர் வராமலும் இருக்கக்கூடாது. தண்ணீர் சிந்திக்கொண்டே இருக்கக்கூடாது.. இவையாவுமே துரதிருஷ்டத்தின் அறிகுறியாகும்..
எப்போதுமே குளியலறை ஈரத்தன்மை இல்லாமல் உலர்ந்திருக்க வேண்டும். பாத்ரூம் டைல்ஸ் அழுக்காக இருந்தால் வீட்டில் பணப்பிரச்சனை அதிகமாகிவிடுமாம். எனவே, டைல்ஸை தினமும் சுத்தப்படுத்த வேண்டும்.
பரிகாரம் பெஸ்ட்:
அதேபோல கிழிந்த போட்டோக்களையும் குளியலறையில் ஒட்டி வைக்கக்கூடாது.. வேண்டுமானால் குளியலறையில் படிகாரம் ஒன்றை வைக்கலாம். இதனால் பூச்சிகள் குளியலறைக்குள் நுழையாமல் இருக்கும்.. வாஸ்துதோஷத்தையும் நீக்கும். ஆனால் இந்த பரிகாரத்தை யாரும் பார்த்திராத இடத்தில் தான் வைக்க வேண்டுமாம்.
அதேபோல, குளியலறையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் நிறங்களும் முக்கியமானவை.. கருப்பு வாளியை வைக்க கூடாது என்பார்கள்.. இதனாலும் குடும்பத்தில் சிக்கல்கள் வருமாம்.. கருப்புக்கு பதிலாக, பச்சை நிறத்தில் பக்கெட்டுகளை பயன்படுத்தினால் சனி மற்றும் ராகுவின் தோஷங்களிலிருந்து பாதுகாக்கப்படலாம். மேலும், இந்த பச்சை நிறம் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது.
நிறங்கள் முக்கியம்:
அதேபோல, சுவர்கள் நீல நிறத்தை பூசுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.. ஒருவேளை டைல்ஸ் பதிவதாக இருந்தாலும், அதையும் நீல நிறத்திலேயே பதியலாம்.. பச்சை நிறம் பயன்படுத்த முடியாத சூழலில், பக்கெட்டுகள், மக்குகளை, நீலநிறத்திலேயே பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்துகிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications