கடகம் ராசியின் மகத்துவம்.. நீங்க சூப்பர் கேரக்டர்.. பலவீனம் இதுவே.. கடக ராசிக்காரர் முத்து அணியலாமா?
சென்னை: கடகம் ராசியின் அதிபதி சந்திரன் ஆகும்.. அதாவது, சந்திரன் வளர்ந்து தேய்வதுபோலவே, இந்த ராசிக்காரர்களும் தங்கள் குணாதிசயங்களை அடிக்கடி மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.. அதேசமயம், உணர்ச்சிகளை சரியாக கையாள தெரிந்தவர்கள் கடக ராசிக்காரர்கள். குழந்தைத்தனம் மிக்க கடக ராசிக்காரர்களின் மற்ற குணநலன்களையும், பொதுப்பலன்களையும் இங்கே பார்க்கலாம்.
கடக ராசி நண்டை ராசி சின்னமாக பெற்றுள்ளது.. நண்டுகளை போலவே சிறிது சுயநலமானவர்கள்.. அதேபோல, தங்கள் எல்லைகளை ஆக்ரோஷமாக நண்டுகள் பாதுகாப்பதுபோல, கடக ராசிக்காரர்களும், யாராவது தங்களது எல்லையை தொட்டால், அவர்களை தாக்கவும் தயங்க மாட்டார்கள்.

அதேபோல, உயர்ந்த லட்சியங்களைக் கொண்டவர்கள்.. தோழமையுடன் இயலபாக அனைவரிடமும் பழகக்கூடியவர்கள்.. மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதில் உறுதியானவர்கள்.. யாருக்காகவும், எதற்காகவும் தங்களது மகிழ்ச்சியை விட்டுத்தர மாட்டார்கள்.
இதுதான் பிளஸ் பாயிண்ட்
கடக ராசியில் பிறந்தவர்கள் மிகவும் பலசாலிகள், தைரியசாலிகள், அறிவாளிகள்.. தன்னம்பிக்கையாளர்கள்.. அன்பு செலுத்தக்கூடியவர்கள்.. தங்களை தாங்களே ஊக்கப்படுத்தி கொள்பவர்கள்.. சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள்.. எல்லோரிடத்திலும் சகஜமாக பழகக்கூடியவர்கள். இவர்களது துணிச்சல் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.. நகைச்சுவையோடு பேசி பிறரை கவர்ந்து விடுவார்கள் .. சிரிப்பு, அழுகை எதுவானாலும் குரலை அதிகப்படுத்தாமல் வெளிப்படுத்துவார்கள்..
கடக ராசிக்காரர்கள் மிகவும் மென்மையானவர்கள் என்பதால்தான் எளிதில் உடல்ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் காயப்பட்டு விடுவார்கள்.. சின்ன சின்ன விஷயத்துக்குகூட கோபித்து கொள்வார்கள்.. கோபத்தையும் அமைதியாகவே காட்டுவார்கள்.. ஆனால், கோபம் வந்துவிட்டால், வருஷக்கணக்கில்கூட சம்பந்தப்பட்டவர்களிடம் பேசாமல் இருந்துவிடுவார்கள்..
மிஸ்யூஸ் - இளகிய குணம்
ஒருவரிடம் குறைகள் இருந்தாலும் அதை பெரிதுபடுத்தாமல், பழகக்கூடியவர்கள்.. ஆபத்து காலத்தில் உடனிருந்து உங்களை காப்பார்கள். உங்களது சூழல் அறிந்து பேசுவார்கள், உதவுவார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்து, அதன்மூலம் மகிழ்ச்சி அடைபவர்கள். யாரிடமும் எதையும் பிடுங்கி கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். ஆனால் இந்த கனிவான குணத்தை யாராவது மிஸ்யூஸ் செய்வார்கள் என்றால், இளகிய குணத்தை கடினமாக்கி கொள்ளவும் தயங்க மாட்டார்கள்.
கடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை பெற்றிருப்பார்கள்.. எதையுமே எளிதில் கிரகித்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள்.. ஜலராசி என்பதால் கற்பனை திறன் வளம் மிக்கவர்கள்.. தண்ணீர் இருக்கும் பகுதியில் அதாவது, நதிக்கரையோரம், கடற்கரையோரம் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இங்கு வாழவும் பிரியப்படுவார்கள்..
கற்பனை திறன் அதிகம்
கடக ராசிக்காரர்களுக்கு, மற்ற ராசிக்காரர்களைவிட ஞாபக சக்தி இருக்கும்.. எததனை வருட நிகழ்வானாலும் நினைவில் வைத்து கொள்வார்கள். இவர்களில் பெரும்பாலும், எழுத்தாளர்களாக, அரசியல்வாதிகளாக, தையல், ஓட்டல் தொழில் செய்பவர்களாக, மரைன் என்ஜினியர்களாக, புத்தக வியாபாரிகளாக ஜொலிப்பார்கள். கற்பனை திறன் அதிகமாக இருக்கும் என்பதால், கவிஞர்கள், எழுத்தாளராகளாகவும் ஜொலிப்பார்கள். அதாவது, தான் சார்ந்த, தன்னுடைய குடும்பம் சார்ந்த தொழில் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.
அதிர்ஷ்டம், துரதிஷ்டம் இரண்டுமே மாறி மாறி இவர்களுக்கு வரும்.. விடாமுயற்சியே இவர்களது வெற்றியின் ரகசியமாகும். முன்கோபம் கொண்டவர்கள் என்பதால், இதற்காகவே நட்புகள் விலகி செல்லவும் வாய்ப்பு உள்ளது.
புலம்பி தள்ளுவார்கள்
ஒருவர் காட்டும் அன்பை, அதை விட அதிகமாக திருப்பி காட்டுவார்கள்.. பிறர் மீது லேசான பொறாமையும் கடக ராசிக்காரர்களுக்கு வரலாம். அதற்காக பிறரின் மகிழ்ச்சியை கெடுக்க மாட்டார்கள்.. தெளிவான கருத்தை சொன்னாலும், அதை குரலை உயர்த்தி சொல்ல மாட்டார்கள்..
தங்களை பற்றியே அதிகமாக கவலைப்பட்டு கொள்வார்கள்.. சில சமயம் தங்களையே தாழ்வாக நினைத்து கவலைப்பட்டு புலம்புவார்கள்.. அதுபோன்ற நேரங்களில், துணைகளோ, நண்பர்களோ தங்களை தேற்ற வேண்டும், பாராட்ட வேண்டும் என்றெல்லாம் கடக ராசிக்காரர்கள் எதிர்பார்ப்பார்கள்.
ஆடம்பர செலவுகளை செய்துவிடுவார்கள். சிக்கல்கள், பிரச்சனைகள் இருந்தாலும், அதை திறமையுடன் கையாள கூடியவர்கள்.. தவறு செய்துவிட்டால், அதை நேர்மையாக ஒப்புக் கொண்டு, மன்னிப்பும் கேட்டுவிடுவார்கள்.. எக்காரணம் கொண்டும், தன் தவறை மறைக்க முயற்சியோ, வாதமோ செய்ய மாட்டார்கள்.
உடன்பிறப்புகள் - அதிர்ஷ்டசாலி
பலரது கருத்துக்களை கேட்டுக் கொண்டு, கடைசியில் தங்கள் எண்ணப்படியே நடந்துகொள்வார்கள். எதையுமே உடனே நம்பமாட்டார்கள்.. வசதி படைத்தவர்களுடன் விரும்பி பழகுபவர்கள்.
கடக ராசிக்காரர்களின் உடன்பிறந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.. காரணம், கண்ணில் வைத்து உடன்பிறப்புகளை தாங்குவார்கள்.. பொத்தி பொத்தி பாதுகாப்பார்கள்.. கண்கலங்காமல் உடன்பிறப்புகளை வைத்து கொள்வார்கள். அதிலும் மூத்தவராக பிறந்தால், உடன்பிறப்புகளுக்கு அனைத்து கடமைகளையும் தவறாமல் செய்துவிடுவார்கள்.. குடும்பத்தின் மீது நிறைய பாசம் வைத்திருப்பார்கள். தாய்ப்பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.. இதனால் தாய்மை உணர்வு கடக ராசிக்காரர்களிடம் அதிகம் இருக்கும்.
வாழ்க்கை துணை
கடக ராசிக்காரர்களுக்கு 5ம் இடமான விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கை துணையாக அமைந்தால், பொருத்தமானவர்களாக இருப்பார்கள், வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.. அதேபோல, கடக ராசிக்கு சமசப்தமமான மகர ராசிக்காரர்களும் பொருத்தமான ஜோடிகளாக அமைவார்கள்.. இதனால், இருவரிடமும் அன்னியோன்யம் பெருகும். கடக ராசி பெண்களுக்கு கன்னி, மகரம், ரிஷபம் உள்ளிட்ட ராசிகளில் பிறந்தவர்களுடன் திருமணம் நடைபெற்றால், மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
கடக ராசி பெண்கள்
கடக ராசி பெண்கள் அமைதியான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். அறிவில் கூர்மையானவர்கள்.. எதையுமே எளிதில் கிரகிக்கக்கூடிய தன்மை கொண்டவர்கள்.. பெரும்பாலும் அலுவலக வேலைக்கு செல்லாமல், வீட்டிலேயே பிடித்தமான செயல்களை செய்ய முனைவார்கள்.. பொறுப்புகளை தாமாகவே சுமந்து, அதை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்.. வாழ்க்கையை முழுவதுமாக கணவருக்காகவே அர்ப்பணிக்க விரும்புவார்கள்..
பெரும்பாலும் கடக ராசி பெண்கள், அப்பாவிகளாக இருப்பார்கள்.. உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதால், யாரிடமும் வாதம் செய்ய மாட்டார்கள்.. அதனாலேயே பிறரிடம் எளிதாக ஏமாந்துவிடுவார்கள்..
நல்ல யோகம் - அணிய வேண்டிய அணிகலன்
14, 26, 30 வயதுகளில் நல்ல யோகம் பெறும் வாய்ப்பு உண்டு. பணத்தை சம்பாதிக்க பாடுபட்டாலும், பணத்தை சேமித்தாலும், பணத் தட்டுப்பாடு இருந்து கொண்டேயிருக்கும்.
கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டிய அணிகலன் முத்து.. கடக ராசியின் அதிபதி சந்திரன் என்பதால், சந்திரனை பிரதிபலிக்கும் முத்துக்கள் கடக ராசிக்காரருக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியது. முத்து அணிகலனை நெக்லஸ், காதில் கம்மல், விரலில் மோதிரமாக அணிந்து கொள்ளலாம். இதனால், மன அமைதி, அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது நம்பிக்கையாகும். ஆனால் எக்காரணம் கொண்டும், கடக ராசிக்காரர்கள் நீலக்கல், மற்றும் பவளம் ஆகியவற்றை அணியக்கூடாது என்பார்கள். அதேபோல, புத்தர் சிலைகளை வீட்டில் வைத்து வணங்கலாம்.
கடக ராசிக்கு அதிர்ஷ்ட எண் 2 ஆகும். 7 எண்ணும் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்ணாகும். இவர்களுக்கு 2ன் கூட்டு எண்களான 2, 11, 20, 29, 38, 47 மற்றும் 7ன் கூட்டு எண்களான 16, 25, 34, 43, 52, 61, 70 ஆகியவை அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. ஆனால், 4 அசுபம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications