7 நாளில் நடக்கும் அதிசயம்.. பணம் கொட்ட, கடன் திரும்பிவர, மகிழ்ச்சி பொங்க, 7 ஏலக்காய் தரும் ஆச்சரியம்
சென்னை: வீட்டில் பணம் தட்டுப்பாடாக உள்ளது என்றாலோ, அல்லது கொடுத்த பணம் திரும்ப வராமல் நின்றுவிட்டாலோ அல்லது நிதி நெருக்கடி அதிகமாகி விட்டாலோ, அனைத்துக்குமே எளிய பரிகாரங்கள் கை கொடுக்கின்றன. நம்பிக்கையுடன் இந்த பரிகாரங்களை செய்யும்போது, பெருத்த பலனும் கிடைக்கிறது. அந்தவகையில், ஒருசில குறிப்புகளை பார்ப்போம்.
வீட்டில் பெண்கள் எப்போதுமே மங்களகரமாக இருக்க வேண்டும். நெற்றியில் பொட்டு வைக்காமல் பெண்கள் பூஜை செய்யக்கூடாது... அதேபோல, கைகளில் வளையல் அணியாமல், யாருக்கும் உணவு பரிமாறக் கூடாது.

மூக்குத்தி, வளையல், மெட்டி போன்ற ஆபரணங்களை அணிந்தே இருக்க வேண்டும்.. கிழிசல் துணிகளை உடுத்தக்கூடாது. கிச்சனில் கல்உப்பு, அரிசி, பருப்பு எந்நேரமும் இருக்கும்படி பார்த்து கொள்வதுடன், அவைகள் தரையில் சிந்தாமலும் பார்த்து கொளள வேண்டும்.
செவ்வரளி மலர்கள் - பரிகாரம்
செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட்டு வரும்போது நிதி நெருக்கடி சீராகும்.. அதேபோல, கோவிலில் மகாலட்சுமி மீது வைக்கப்பட்ட, தாமரை மலரை வீட்டுக்கு கொண்டு வந்து, பச்சை பட்டில் வைத்து மடித்து பணப்பெட்டியில் வைக்க வேண்டும். இதனால் மெல்ல நிதி நிலைமை சீராகும்.. அதேபோல, செவ்வாய்கிழமையில் செவ்வரளி மலரைக் கொண்டு, முருகப்பெருமானை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம் பெருகும்.
பாசி பருப்பை வெல்லம் கலந்த நீரில் ஊற வைத்து, அதனை பறவைகளுக்கும், பசுமாட்டிற்கும் உணவாக தந்துவந்தால் பணத்தடைநீங்கும். அதேபோல, வீட்டின் வடகிழக்கு திசையில் ஒரு சிறிய பாத்திரத்தில் கல் உப்பை வைத்துவிட வேண்டும். இந்த கல் உப்பை வாரம் ஒருமுறை மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். இதனாலும் பணப்பிரச்சனை தீரும்.
வெட்டிவேர் தீபம்
அதேபோல, விநாயகருக்கு வெட்டிவேர், ஏலக்காயில் எளிய பரிகாரம் செய்வதாலும், நினைத்த காரியம் வெற்றி பெற்று, வீட்டின் பணப்பிரச்சனையும் தீரும் என்பார்கள்.. இதற்கு, விநாயகர் சிலை முன்பு, காமாட்சி அம்மன் விளக்கில் நெய் விட்டு, பஞ்சு திரியுடன் வெற்றிவேரையும் சேர்த்து தீபமேற்ற வேண்டும். பிறகு, "ஓம் கணபதியே நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை, தொடர்ந்து 7 நாட்களுக்கு சொல்லி வழிபட வேண்டும்.
7 ஏலக்காய் - பரிகாரம்
முதல் நாள் ஒரு ஏலக்காய், மறுநாள் 2வது ஏலக்காய் என, ஒவ்வொரு நாள் வழிபடும்போதும், ஊசி நூலில் ஏலக்காய்களை கோர்க்க வேண்டும். 7 நாளும், 7 ஏலக்காய்களை கட்டி, விநாயகருக்கு அணிவிக்க வேண்டும். உங்கள் வேண்டுதல் நிறைவடைந்ததும், இந்த ஏலக்காய் மாலையை ஓடும் நீரில் அல்லது மனிதர்கள் கால்படாத இடத்தில் போட்டுவிடலாம். இந்த பரிகாரம் செய்வதால், நீங்கள் கொடுத்த கடன் விரைவில் உங்களை வந்து சேரும் என்பது நம்பிக்கையாகும்.
அதேபோல, ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல், புதன்கிழமைகளில் அன்னதானம் செய்தல், புதிய உடைகளை தானம் செய்தல், புதனின் ஆசிகளை தருவதுடன், நல்ல தொழில், மேன்மையான வாழ்க்கையை கொடுக்கும் என்பார்கள்.












Click it and Unblock the Notifications