Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கங்கை புஷ்கர விழா..ஹரித்துவார், வாரணாசியில் கொண்டாட தயாராகும் பக்தர்கள்..ஆன்மீக பயணத்திற்கு தயாரா?

Subscribe to Oneindia Tamil

ஹரித்துவார்:

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9ஆம் தேதி சனிக்கிழமை ஏப்ரல் 22ஆம் தேதி குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் கங்கா நதியில் புஷ்கர விழா ஏப்ரல் 22,2023 முதல் மே 03,2024 வரை நடைபெற உள்ளது. ஹரித்துவாரில் உள்ள பிர்லாகாட் பகுதியில் கங்கைக்கு ஆரத்தி நடைபெற உள்ளது.

பிரம்மாவின் கையில் உள்ள தீர்த்தமே புஷ்கரம் எனப்படும். குரு பகவான் கடும் தவமியற்றி பிரம்மாவிடமிருந்து இதனைப் பெற்றுள்ளார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மீனம் ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு குரு பெயர்ச்சி அடைவதைத் தொடர்ந்து மேஷ ராசிக்குரிய நதியான கங்கையில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

Ganga Pushkaram 2023 Haridwar, Varanasi prepares for Pushkaram festival

இந்தியாவில் பாயும் முக்கியமான 12 நதிகள் 12 ராசிக்கு உரியவையாக சொல்லப்பட்டுள்ளன. மேஷ ராசிக்குரிய நதியாக கங்கை, ரிஷபத்துக்கு நர்மதை, மிதுனத்துக்கு சரஸ்வதி, கடகத்துக்கு யமுனை, சிம்மத்துக்கு கோதாவரி, கன்னிக்கு கிருஷ்ணா, துலாமுக்கு காவிரி, விருச்சிகத்துக்கு தாமிர பரணி, தனுசுக்கு சிந்து, மகரத்துக்கு துங்கபத்ரா, கும்பத்துக்கு பிரம்மபுத்திரா, மீனத்துக்கு பிரணீதா என வரையறுக்கப்பட்டுள்ளது.

கங்கை புஷ்கர விழா

12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார் குரு பகவான். கங்கை நதியில் புஷ்கர விழா கொண்டாட பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வாரணாசி, ஹரித்துவாரில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாடு முழுவதிலும் இருந்து காசி, ஹரித்துவாருக்கு லட்சக்கணக்கானோர் புனித நீராட வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தங்குவதற்கு தேவையான அறைகள், சுகாதார அறைகள், புனித நீராடிவிட்டு உடை மாற்றுவதற்கான அறைகள், குடிநீர் வசதிகள், மருத்துவ குழுவினர் போன்ற பல்வேறு ஏற்பாடுகளை செய்ய மாநில நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு மேஷ ராசியில் குரு பெயர்ச்சியான போது கங்கை நதியில் மகா புஷ்கர விழா நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மகா புஷ்கர விழா நடைபெற உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என சாதுக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கங்கை பூமிக்கு வந்த புராண கதை

சூரிய குலத்தில் பிறந்த திலீபன் என்பவரின் மகன் பகீரதனின் முயற்சியால் சிவனின் தலையில் இருக்கக் கூடிய கங்கையை மேலோகத்திலிருந்து பூலோகத்திற்குக் கொண்டு வரப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன. ஸ்ரீராமனின் முன்னோர்களில் ஒருவர் சகரன். அவர் ஒருமுறை யாகம் ஒன்றை நடத்தினார். யாகக் குதிரையானது திக் விஜயம் புறப்பட்டது. அப்போது விரோதிகள் சிலர், அந்தக் குதிரையைக் கவர்ந்து சென்று, கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் கட்டிவைத்தனர். குதிரையைத் தேடிப் புறப்பட்ட சகர குமாரர்கள், ஒருவழியாக கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் குதிரை இருப்பதைக் கண்டறிந்தனர்.கபில முனிவரே குதிரையைக் கவர்ந்து வந்திருக்க வேண்டும் என்று தவறாகக் கருதினார்கள். ஆத்திரத்தில், முனிவரைத் தாக்க முயன்றார்கள். அதனால் கபில முனிவர் ஆவேசமானார். தன் பார்வையிலேயே சகரனின் புதல்வர்களை எரித்து சாம்பலாக்கினார். அவர்களுக்குப் பிறகு திலீபன் எனும் அரசன் வரையில் சகர வம்ச சந்ததியினர் பலரும், கபிலரால் எரிந்து சாம்பலாகிப்போன தங்களின் முன்னோர் நற்கதி அடைவதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால், அவர்களது எண்ணம் ஈடேறவே இல்லை.

Ganga Pushkaram 2023 Haridwar, Varanasi prepares for Pushkaram festival

பகீரதன் செய்த தவம்

திலீபனின் மைந்தனான பகீரதன், கங்கையானது பூமிக்கு வந்தால், தன் முன்னோர்கள் நற்கதி அடைவார்கள் என உறுதியாக நம்பினார். அதையடுத்து கங்காதேவியை நோக்கி கடும் தவம் செய்தார். இதையடுத்து அவரின் தவத்தில் மகிழ்ந்த கங்கையும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். ஆனால், பொங்கிப் பாய்ந்து வரும் தன்னைத் தாங்கும் சக்தி பூமிக்கு இல்லை என்பதை பகீரதனுக்கு உணர்த்தினாள் கங்கா தேவி. சிவபெருமானை நினைத்து தவமிருந்தால்தான் இவை அனைத்தும் சாத்தியம் என அறிவுறுத்தினாள். உடனே பகீரதன் சிவபெருமானை நினைத்து, கடும் தவம் இருந்தார். சிவனார் மனம் குளிர்ந்து பகீரதனுக்கு அருள் புரிய சம்மதித்தார். வான் உலகத்தில் பிரவாகமெடுத்து பெருவெள்ளமென பூமியை நோக்கி பாய்ந்து வந்த கங்கையை தன் சடையில் தாங்கி அவளின் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். பூமிக்கு வந்த கங்கையால் பகீரதனின் முன்னோர் நற்கதி அடைந்தனர் என்கிறது புராணம். கங்கா தேவி பூமிக்கு வரக் காரணம் பகீரதன் என்பதால், கங்காதேவிக்கு 'பாகீரதி' என்றும் ஒரு பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.

அட்சய திருதியை நாளில் வந்த கங்கை

கங்கா தேவி பூமிக்கு வந்த நாள் அட்சய திருதியை நாள் என்றும் புராணங்கள் சொல்கின்றன. அதே நேரத்தில் வைகாசி மாத வளர்பிறை சப்தமி நாளில் கங்கா தேவி பூமிக்கு வந்தடைந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே கங்கா சப்தமி கொண்டாடப்படுகிறது. மற்றொரு கதைப் படி கங்கா தேவி 'நிர்ஜல ஏகாதசி' எனப்படும் சர்வ ஏகாதசி திதி அன்று வந்ததாக குறிப்பிடப்படுகிறது. எவர் ஒருவர் கங்கா சப்தமி நாளில் கங்கையை நினைத்து நீராடி வழிபடுகிறார்களோ அவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும்.

Ganga Pushkaram 2023 Haridwar, Varanasi prepares for Pushkaram festival

கங்கையின் ஆசி கிடைக்கும்.

கங்கை வந்த புனித நாளை கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள ஹரிதுவார், வாரணாசி ரிஷிகேஷ் மற்றும் அலகாபாத் நகரில் இந்த விழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். கங்கா சப்தமி நாளிலும் கங்கை நதியில் பக்தர்களும், சாதுக்களும் புனித நீராடுவார்கள். அர்ச்சகர்கள் காங்கைக்கு ஆரத்தி காட்டுவார்கள். இதனை ஏராளமானோர் கண்டு தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு அட்சய திருதியை நாளும் குரு பெயர்ச்சியும் இணைந்து வருவது மிக சிறப்பான நாள் இந்த நாளில்தான் கங்கையில் புஷ்கர விழா கொண்டாடுகின்றனர். கங்கையில் புனித நீராட நேரில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே தாமிரம் அல்லது வெள்ளி செம்பில் நீரை எடுத்து மஞ்சள் தூள் சேர்த்து கங்கையாக நினைத்து வணங்கி நீராடலாம். கங்கை அன்னையின் ஆசி கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+