திருவண்ணாமலையில் வெறும் காலுடன் கிரிவலம்.. அண்ணாமலையாரை குடும்பத்தோடு வணங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி
திருவண்ணாமலை: தமிழக ஆளுநர் ஆர் என்.ரவி திருவண்ணாமலையில் குடும்பத்துடன் கிரிவலம் வந்து சாதுக்களை வணங்கினார். அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் மனமுருகி வேண்டிக்கொண்டார்.
நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் நெருப்பு தலமாக போற்றப்படுகிறது. இங்கு கார்த்திகை தீப திருவிழா ஆண்டுதோறும் கார்த்திகை மாத பவுர்ணமி நாளில் நடைபெறும். இந்த ஆலயத்திற்கு எத்தனையோ பிரபலங்கள் வந்து வழிபட்டுள்ளனர். தினசரியும் ஏராளமானோர் இங்கு வந்து கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுகின்றனர். பவுர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளார். நேற்று முதல் நிகழ்வாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாதுக்கள் மற்றும் ஆன்மிக குருக்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். திருவண்ணாமலை ஆன்மீக பூமி. சிவன் வாழும் பூமி. நினைத்தாலே முக்தி தரும் பூமி. அருணாசலேஸ்வரர் மண்ணில் கால் வைத்தது பெருமையாக நினைக்கிறேன்.
நமது நாட்டில் ரிஷிகளாலும் சாதுக்களின் தவத்தாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட நாடு. நாம் அனைவரும் அவர்களின் குழந்தைகள். சனாதன தர்மம் என்பது தனிமனிதனுக்கானதல்ல பாரத தேசத்திற்குரியது ஆகும். பறந்து விரிந்த பிரார்த்தனையே சனாதன தர்மம் ஆகும்.
இந்த நாடு 1947 இல் உருவாக்கப்பட்டதல்ல 1947ஆம் ஆண்டில் விடுதலை மட்டுமே அடைந்தோம், பாரத நாட்டின் ஆன்மீக தலைநகர் இந்த மாநிலம் என்பது எனக்குத் தெரிந்தது. ரிஷிகள் சாதுக்கள் நாம் யார் என்பதை உணர்த்தியுள்ளார்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்பதே சனாதன தர்மம் ஆகும். நமது ஆன்மீக வளர்ச்சி நமக்கு மட்டுமானது அல்ல உலகிற்கே ஆனது. மற்ற நாடுகள் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டவை ஆகும். ஆனால் நமது நாடு ரிஷிகளாலும் சாதுக்களின் தவத்தாலும் உருவாக்கப்பட்ட நாடு.
பாரத நாட்டின் ஆன்மீக தலைநகராக தமிழ்நாடு உள்ளது என்பது எனக்கு தெரியவந்துள்ளது. ரிஷிகள், சாதுக்கள் அனைவரும் நாம் யார் என்பதை உணர்த்தியுள்ளார்கள். ஆன்மீகத்தை தவிர்த்து மற்றதில் கவனம் செலுத்தினால் மேற்கிந்திய நாடுகள் போல நம் நாடு ஆகிவிடும். முழுமையான முன்னேற்றத்தை நோக்கி நாடு நடை போடுகிறது. நமது ஆன்மீக வளர்ச்சி நமக்கு மட்டுமல்ல உலகத்திற்கே ஆனது ஆகும்.
போர் இயற்கை சீற்றம் ஆகியவைகள் மனிதனின் எதிர்மறை விளைவுகளால் வந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் அமைதியான பூமி. கிரிவலம் வருவது மன நிம்மதியை தரக்கூடியது. உலக அளவில் இந்தியா ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை உடைய நாடு. கிரிவலப் பாதையில் தங்கியுள்ள சாதுக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
ஆன்மீகவாதிகள் ஆசிரமத்தை வைத்துக்கொண்டு சேவை செய்வதை விட மற்றவர்களுக்கும் சேவை செய்ய முன்வர வேண்டும். கிரிவலப் பாதையில் அசைவ உணவகம் இருப்பதற்கு அனுமதி கிடையாது. இதை அகற்ற முடிந்தவரை நான் நிறைவேற்றி தருவேன் என்றும் கூறினார். இதனையடுத்து, சாதுக்கள் மற்றும் ஆன்மிக குருக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உணவு பரிமாறினார்.
பயணத்தின் ஒருபகுதியாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ரன்.ரவி மண்பாண்ட கலைஞர்களுடன் மண்பாண்டங்களை செய்து அவர்களை ஊக்கப்படுத்தினார்.
தமிழகத்தின் மண்பாண்டக்கலை மிகவும் பழமை வாய்ந்ததாகும். கைத்திறனுடன் வண்ணம் கூட்டி மண்பாண்டம் செய்வதே ஒரு கலையாகும்.
முதுமக்கள் தாழிகளை மண்ணில் செய்யப்பட்டவை என்பது அறியத்தக்கதாகும், மண் சார்ந்த தொழில்களை மேற்கொள்வோரை மணிமேகலைக் காப்பியம் மண்ணீட்டாளர் என்று குறிப்பிடுகிறது. அந்த மண்பாண்ட கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி மண்பாண்டம் செய்யும் கலைஞர்களை சந்தித்து உரையாடி ஊக்குவித்தார்.
அதோடு, ஆளுநர் ரவி திருவண்ணாமலையைச் சேர்ந்த விவசாயிகளின் இயற்கை சிறுதானியங்கள் மற்றும் வேளாண் சார் பதப்படுத்தப்பட்ட தயாரிப்புகள் இடம்பெற்ற ஸ்டால்களை பார்வையிட்டார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்துடன் இரண்டாவது நாளான இன்று காலை 7 மணி அளவில் அண்ணாமலையார் கோவில் சாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருமஞ்சன கோபுர வீதி வழியாக கோவிலுக்கு உள்ளே சென்ற ஆளுநர் ஆர்.என். ரவி தனது குடும்பத்துடன் உள்ளே சென்றார். கோவிலுக்கு உள்ளே சென்ற ஆளுநருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொடிமரம் அருகே உள்ள சம்பந்த கணேசன் ஆலயத்தில் தரிசனம் செய்து அண்ணாமலையார் கருவறைக்குள்ளே சென்ற ஆளுநர் சிறப்பு தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து வைகுந்த வாயில் வழியாக உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு சென்று சிறப்பு தரிசனத்தை முடித்துக் கொண்டு பின்னர் நவகிரக சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்தார்.
சாமி தரிசனத்திற்கு வருகை புரிந்த ஆளுநர் ரவிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து அண்ணாமலையார் படத்தை வழங்கினர். இதனைத் தொடர்ந்து 7. 40 மணியளவில் 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் மூன்றாவது லிங்கமான நிருதி லிங்கத்திலிருந்து ஆளுநர் ரவி தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் கிரிவலத்தை தொடங்கினார்.
கால்களில் செருப்பு அணியாமல் வெறும் காலுடன் கிரிவலப் பாதை முழுவதும் நின்றிருந்த சாதுக்களை வணங்கியவாறு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே கிரிவலம் வந்தார். கிரிவலப் பாதையில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் அருகில் கிரிவலத்தை முடித்துக் கொண்டு மீண்டும் செங்கம் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications