குரு வக்ர பெயர்ச்சி 2022..குரு பார்வையால் யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது தெரியுமா?
சென்னை: மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள குரு பகவான் விரைவில் பின்னோக்கி வக்ர கதியில் பயணம் செய்வார். ஜூலை 29 முதல் நவம்பர் 24 வரையிலும், நான்கு மாத காலம் குருபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே வக்ரத்தில் செல்கிறார். இந்த பயணத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குருபகவான் இப்போது மீன ராசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். அடுத்த மாதம் வக்ர கதியில் பயணப்பட போகிறார். குருவின் மாற்றத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சில அதிசய மாற்றங்கள் ஏற்படப்போகிறது. யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். குரு பகவானின் பார்வை கிடைத்தாலே போதும் கோடி நன்மைகள் ஏற்படும் என்பது பலரது வாழ்வில் நிரூபிக்கப்பட்ட உண்மை. துலாம் ராசி முதல் மீன ராசி வரை பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குரு பகவான் பொன்னவன். திருமணம், குழந்தைப்பேறு, நல்ல வேலை கிடைப்பது குருபகவானின் அருளினால்தான். குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம் என்பதனால்தான் குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்கிறார்கள். குரு பலன் வந்து விட்டாலே அதிர்ஷ்டம் தேடி வரும் வாழ்க்கையில் வசந்தம் வீசும். நிறைய பண வரவு வரும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குரு வக்ர பெயர்ச்சியால் மேஷம் மற்றும் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் குரு பகவான் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். சுப விரையம் ஏற்படும். சொத்து விற்பனையில் லாபம் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். குடும்பத்தில் உறுப்பினர்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். திடீர் பயணம் ஏற்படும்.

வாகன யோகம் உண்டாகும்
மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வை நான்காம் வீட்டின் மீது படுகிறது. வண்டி வாகனங்களை மாற்றலாம். புது வண்டி வாகனம் வாங்க நல்ல நேரம் வந்து விட்டது. புது வீடு வாங்கும் யோகம் வந்து விட்டது. ஆறாவது வீட்டின் மீது குருவின் பார்வை விழுகிறது. வங்கிக் கடன் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து விட்டு புதிய கடன்களை வாங்குவீர்கள். வழக்கு பிரச்சினைகள் நீங்கும்.

சுப காரியம் கைகூடும்
எட்டாவது வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் சொத்து, பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். உங்கள் ஜாதகத்தில் குரு சாதகமாக இருந்தால் குருவினால் நன்மைகள் உண்டாகும். உங்களின் எதிர்பார்ப்புகள் நல்லவிதமாக முடிவுக்கு வரும். திருமணம் சுப காரியத்திற்காக முயற்சி செய்யலாம். வக்ர காலங்களில் சுப காரியங்கள் எளிதில் கை கூடி வரும். குருவின் பார்வையால் நிறைய சாதகமான சம்பவங்கள் நடைபெறும்.

ரிஷபம்
குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் 11ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். குரு பகவான் லாப வீட்டில் வக்ர மடைந்தாலும் யோகம்தான். திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். பொருளாதார ரீதியான பலன்கள் அதிகரிக்கும். மூத்த சகோதரர்கள் வகையில் பதவியும் அதிகாரமும் கிடைக்கும். குருவின் பார்வையால் வசதியும் அதிகாரமும் அதிகரிக்கும். இளைய சகோதரர்களுக்கு திருமணம் சுபகாரியம் நடைபெறும்.

திருமணம் கைகூடும்
புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். திருமணமாகி குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளால் நல்ல செய்தி தேடி வரும். குருவின் ஒன்பதாவது பார்வை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டின் மீது விழுவதால் திருமண யோகம் கை கூடி வருகிறது. காதலிப்பவர்களுக்கு திடீர் திருமண யோகம் கை கூடி வரும். தடைகளைத் தாண்டி வெற்றிகளை குவிப்பீர்கள். ரிஷப ராசி ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கப்போகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications