வாசலில் இதை கட்டினால் நடக்கும் அதிசயம்.. அதிர்ஷ்டம் தரும் குதிரை லாடம்! துளசி வேர்கள் வாஸ்து டிப்ஸ்
சென்னை: எந்த வீடு தெய்வீகத் தன்மையுடன் காணப்படுகிறதோ, அங்கே சுபீட்சம் நிறைந்து காணப்படும் என்பார்கள்..தெய்வீகத் தன்மை அதிகரித்து காணப்பட காணப்பட வேண்டுமானால், வீட்டில் எந்த துர்சக்தியும் நெருங்கக்கூடாது. அனைத்துவிதமான பாசிடிவ் விஷயங்கள் மட்டுமே வீட்டில் நுழைய வேண்டும். எனவேதான், ஒவ்வொரு வீட்டிற்கும் வாயில் என்பது மிகவும் முக்கியமானதாகிறது.. இதைதான் வாஸ்துவிலும் சொல்லப்பட்டுள்ளது. அந்தவகையில், நுழைவாயிலில் வைக்க வேண்டிய 2 முக்கிய பொருட்களை பார்ப்போம்.
வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்யும்போது, வாசற்படிகளையும் சுத்தம் செய்து, மஞ்சள் குங்குமம் பூசவேண்டும்..

ஆனால் சிலர், வெள்ளிக்கிழமைநிலைவாசல் கதவில் சந்தனம், குங்குமத்தை இடுவார்கள். இதனை தவிர்த்து, ஒருநாள் முன்கூட்டியே, வியாழக்கிழமைகளில் அதுவும் சாயங்கால நேரத்தில் நிலைவாசலுக்கு குங்குமம் வைப்பது சரியானதாகும்.. இதனை தவிர, கதவில் சுவஸ்திக், திரிசூலம், ஓம் போன்ற சின்னங்களை வரைந்து வைக்கலாம்.
நிதி நிலைமை
நிதி நிலைமையில் சிக்கி தவிப்பவர்கள், ஒரு பருத்தி துணியை மஞ்சளில் தோய்த்து எடுத்து கொள்ள வேண்டும், பிறகு பூஜையறையில் பூஜை செய்யப்பட்ட ஒரு தேங்காயை, அந்த மஞ்சள் துணியில் வைத்து அதனுடன் சிறிது நாணயங்களையும் வைத்து கட்டி, முடிச்சு போல கட்டி வீட்டு வாயிற்படியில் கட்டி வைக்கலாம். இதனால் பொருளாதார பிரச்சனை சீராகும்.
பொருளாதார சிக்கல்
வீட்டிற்குள் கெட்ட சக்திகள் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக, சிலர், தலை வாசலில் சங்கு பதிப்பார்கள்.. அதிலும், 5 வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு உரிய வசிய பூஜை செய்த வலம்புரி சங்கை, வீட்டின் வாசற்படியில் பதிப்பதால், கஷ்டமில்லாத வாழ்க்கை அமையும் என்பார்கள். அதுபோல, மரத்தினால் அல்லது மண்ணால் செய்யப்பட்ட யானை பொம்மைகளையும் வைப்பார்கள்.
இதுபோல, வீட்டிலுள்ள துர்சக்திகளை விரட்டி, வீடடில் மங்கலம் உண்டாகவும், லட்சுமி தேவி, அந்த வீட்டிற்குள் நிரந்தரமாக தங்கியிருந்து அருள் புரியவும், 2 வகையான பொருட்களை நிலைவாசலில் வைக்கலாம்.
இதில் முதலாவதாக துளசி வேர்களை பற்றி சொல்லலாம். ஏனென்றால், துளசியில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள்... இந்த வேரில் எளிய பரிகாரம் செய்வதன்மூலம் உங்களை சுற்றியுள்ள தடைகள் நீங்கும்..
துளசி வேர் தரும் நன்மை
இதற்கு சிறிது துளசி வேரினை, கங்கை நீரில் கழுவி சுத்தம் செய்து, முறையாக வழிபட வேண்டும். பிறகு மஞ்சள் நிற துணியில், அந்த வேரினை கட்டி வீட்டு வாசலில் கட்டிவிட்டால் போதும். நிதி தொடர்பான இன்னல்களிலிருந்தும் விடுபடலாம். வீட்டிடிலுள்ள எதிர்மறையான ஆற்றல்கள் வெளியே விரட்டும் சக்தி துளசிக்கு உண்டு..
அதேபோல சிலருக்கு ஜாதகத்தில் ஏதாவது கிரக தோஷம் இருக்கலாம்.. அப்படி கோளாறுகள் இருந்தால், துளயின் சிறிது வேர மற்றும சிறிது அரிசி இரண்டையும், சிவப்பு நிற துணியில் கட்டி, வாசலில் கட்டிவிடலாம். இதனால், கிரக தோஷங்களில் இருந்து மெல்ல விடுபட முடியும் என்கிறார்கள்.
எப்போதும் நான்கைந்து சுத்தமான துளசியை, நீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும்.. குழப்பமான மனநிலை, தெளிவின்மையால் தடுமாறும்போதும், இந்த தண்ணீரை வாசலில் தெளித்தால் போதும்.. மனம் தெளிவுபெறும், அமைதி பெறும்.
குதிரை லாடம்
அடுத்ததாக அதேபோல, வீட்டு நிலைவாசல் படியின் மீது, குதிரைப்படம் மாட்டி வைக்கலாம். ஆனால், 1 அல்லது ஏழு குதிரைகள் இருப்பது போன்ற படங்களாக இருந்தால் நல்லது. அதேபோல, குதிரையின் காலில் கழண்ட, பழைய குதிரை லாடத்தையும் வாசலில் மாட்டி வைக்கலாம்.
அப்படி லாடத்தை மாட்டி வைப்பதானால், அதை வாங்கியதும், முதலில் பூஜையறையில் வைத்து சந்தனம், குங்குமம், பூ வைத்துவிட்டு, ஊதுபத்தி காட்ட வேண்டும். அதற்கு பிறகே வாசலில் கட்ட வேண்டும்.. அல்லது குதிரை லாடத்தில் இருக்கும் ஒவ்வொரு ஓட்டையிலும் ஒவ்வொரு ஆணியை அடித்தும் மாட்டி வைக்கலாம்.. சிலரது வீட்டில் இரண்டு வாசற்படி இருந்தால், இரண்டிலுமே மாட்டி வைக்கலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications