வீட்டில் பணக்கஷ்டமா.. கடன் கழுத்தை நெரிக்கிறதா? பணம் கையை கடிக்கிறதா? இந்தாங்க சூப்பர் டிப்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டில் செல்வம் கொழிக்க ஏலக்காயை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு சிலரிடம் பணம் இருந்தால் அதை எதற்கு செலவு செய்ய வேண்டுமோ அதற்கு மட்டும் செலவு செய்துவிடுவார்கள். ஒரு சிலரிடமோ 10 ரூபாய் இருந்தாலும் அதை 10 வினாடிகள் கூட வைத்திருக்க மாட்டார்கள்.

How to become wealthy by using Yelakkai

இதற்குத்தான் சிலர் நம்மை ஓட்டைக்கை என அழைப்பார்கள். அதாவது காசு தங்காது என்பதையே சிலர் அவ்வாறு அழைக்கிறார்கள். 1ஆம் தேதி சம்பளம் வாங்கியதும் 10 தேதி கூட ஆகியிருக்காது, அதற்குள் வாங்கிய பணம் எல்லாம் காலியாகியிருக்கும்.

சிலருக்கு எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பணமே மிஞ்சாது. இதற்குத்தான் சில வாஸ்து டிப்ஸை நாம் பாலோ செய்யலாம். வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலால்தான் வீட்டில் பணம் இல்லாத நிலை ஏற்படுகிறது. பணம் தங்காமலும் செலவாகிறது. இதற்காக பணம் வைக்கும் அறைகளின் ஓரங்களில் ஏலக்காய் பொடியை தூவ வேண்டும்.

நீங்கள் பணியாற்றும் இடங்களிலும் இது போல் ஏலக்காயை வைத்துக் கொள்ளலாம். அரிசி உணவுகளில் ஏலக்காய் சேர்ப்பது செல்வம் செழிக்க வழிவகுக்கும் என வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. தினசரி டீ குடிக்கும் போது ஏலக்காய் சேர்ப்பது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

அது போல் வாஸ்துப்படி வீட்டில் செழிப்பை அதிகரிக்க தோட்டத்தில் ஏலக்காயை வைக்கலாம். தியானம் செய்யும் போதும் கையில் ஏலக்காயை வைத்திருப்பது பாசிட்டிவ் எனர்ஜியை உண்டாக்கும். வீட்டு வாசலில் ஏலக்காயை தொங்க விடுவதும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை போன்ற வாசனை பொருட்களை வைத்து சமையல் செய்ய வேண்டும். அப்போதுதான் மகாலட்சுமி நம் வீட்டில் வாசம் செய்வாள்.

நாம் வைக்கும் பணப்பெட்டியில் சிறிதளவு பச்சை கற்பூரம், கொஞ்சம் சோம்பு, 4 கிராம்பு, இரு ஏலக்காயை பொடித்து ஒரு கிண்ணத்தில் வைத்துவிட வேண்டும். அதை மூடி போட்டெல்லாம் மூட தேவையில்லை. இப்படி செய்வதாலும் பணம் செழிப்பாக இருக்கும். அது போல் வீட்டில் தினமும் இரு ஏலக்காயை விநாயகருக்கு நெய்வேத்தியமாக வைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

அப்போது மலை போல் இருக்கும் பிரச்சினையும் கரைந்து போகும். செவ்வாய்க்கிழமைகளில் விநாயகருக்கு பிரார்த்தனை செய்து கொண்டு பச்சை கற்பூரத்தை பர்சில் வைத்தால் போதும், அது பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. இதையெல்லாம் நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+