மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆச்சரியம்.. உண்டியல் காசை பார்த்தீங்களா.. திருத்தணி வசூல் அதுக்கு மேல
சென்னை: புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.. அந்தவகையில், மதுரை மீனாட்சி அம்மன், திருத்தணி கோயில்களிலும் வழிபாடுகள் நடந்த நிலையில், கோயில் உண்டியல் எண்ணும் பணிகள் நடைபெற்றன.. அதுகுறித்த விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி அம்மன் உலகப்புகழ் பெற்றது.. இங்கு சுவாமியை தரிசனம் செய்ய தினமும் வெளிநாட்டவர்கள், வெளிமாநிலத்தவர், வெளி மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

கடந்த மாதம் நடந்த சட்டசபையில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியிருந்தார்.. அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்திருந்தார்.
மீனாட்சி அம்மன்: அதில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 63 பணிகள் நடைபெறுகிறது. அதில் 40 பணிகள் உபயதாரர்கள் மூலம் நடைபெறுகிறது. கோயிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் 2018-ல் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் சீரமைப்பு பணி நடைபெறுகிறது. வசந்தராயர் மண்டபத்தை புதுப்பிக்க தேவைப்படும் 25 அடி நீளம் கொண்ட கல் தூண்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கற்கள் பெற தலைமைச்செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி அனுமதி பெறப்பட்டது. 25 அடி நீளம் கொண்ட கல்லை பெறுவதற்காக ரூ.19 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணி நடைபெற்று வருகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் குடமுழுக்கு நடைபெறும்" என்றார். அமைச்சரின் இந்த பதில் பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
உண்டியல்கள்: இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையும் செலுத்துவது வழக்கம் என்பதால், கோவிலுக்கு சொந்தமான 10 உபகோவில்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கான உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கோவில்களில் உள்ள உண்டியல் காணிக்கை முழுவதும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை கொண்டுவந்து எண்ணும் பணிகள் நடைபெறுவது வழக்கமாகும்.
அதன்படி, மதுரைமீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 10 உப கோவில்களில் உள்ள உண்டியல் காணிக்கை திறப்பின்போது ரொக்க பணமாக ரூ.1,65,50,107/- (ரூபாய் 1 கோடியே 65 லட்சத்து ஐம்பதாயிரத்தி நூற்றி ஏழு மட்டும்) தங்கம் 358 கிராம், வெள்ளி 839 கிலோகிராம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த மாதத்தை காட்டிலும் இந்த மாதம் சுமார் 40,000 கூடுதல் காணிக்கை கிடைத்திருக்கிறதாம்.
சுவாமி தரிசனம்: அதேபோல, திருத்தணி முருகன் கோயிலுக்கும் தினமும் வந்து சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில், கோயில் உண்டியல்களில் நகை, பணம், பொருட்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.
அந்தவகையில், புத்தாண்டு மற்றும் திருப்படி திருவிழாவையொட்டி கடந்த ஒரு வாரமாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்றைய தினம் கோயிலில் நடந்தது..
வெள்ளி காணிக்கை: கோயில் இணை ஆணையர் ரமணி முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணியில் 100க்கும் மேற்பட்ட கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் கடந்த 9 நாட்களில் மட்டும், ரூ.64 லட்சத்து 72 ஆயிரத்து 765 ரூபாயும், 47 கிராம் தங்கமும், 2,975 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications