பாரத தேசம்.. மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.. புராண கதை சொல்வதென்ன?
சென்னை: நம் தேசத்தை, பரத கண்டம் என்பார்கள். பாரத தேசம் என்று போற்றுவார்கள். இந்த பரத கண்டம் முழுவதும் வியாபித்து அருளாட்சி செய்கிறாள் லக்ஷ்மிதேவி என்கிறது புராணம். இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றப்போவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் நம் நாட்டின் பெயர் பாரதம் என்று எப்படி வந்தது என்று பார்க்கலாம்.
இந்திய நாட்டின் பெயரை பாரத் என்று மாற்றுவதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இன்று நேற்றல்ல பல நூற்றாண்டு காலமாகவே பாரதம் என்றுதான் நம் நாடு அழைக்கப்பட்டு வந்துள்ளது. பழங்காலத்திலிருந்தே நமது நாடு பாரத தேசம் என்றுதான் அழைக்கப்படுகிறது. பல்வேறு வரலாற்றாசிரியர்களின் எழுத்துக்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே பாரத தேசம் என்றுதான் பலரும் பாடியிருக்கின்றனர்.

மகாபாரதத்தின்படி, பரத சக்ரவர்த்தி என்ற மன்னனின் பெயரால் பாரத தேசம் என்று அழைக்கப்பட்டது என்று புராண கதை கூறுகிறது. பரதன் ஒரு பழம்பெரும் பேரரசர் மற்றும் பரத வம்சத்தை நிறுவியவர் மற்றும் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் மூதாதையர் ஆவார். அவர் ஹஸ்தினாபூர் அரசன் துஷ்யந்தன் மற்றும் ராணி சகுந்தலா ஆகியோரின் மகன். க்ஷத்திரிய வர்ணத்தின் வழித்தோன்றல்.
பாரதம் முழு இந்தியாவையும் கைப்பற்றி, ஒரே அரசியல் அமைப்பில் ஒன்றிணைந்தார், அது அவருக்கு பாரத கண்டம் அல்லது பாரத தேசம் என்று பெயரிடப்பட்டது. சாகுந்தலா என்ற புராண கதையில் இது கூறப்பட்டுள்ளது.
கண்வ மகரிஷியின் வளர்ப்பு மகள் சகுந்தலை. ஒருநாள் வனத்தில் உள்ள ஆஸ்ரமத்தில் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அங்கு வேட்டையாட வந்த துஷ்யந்த மன்னன் சகுந்தலையைக் கண்டு காதல் கொண்டான். காந்தர்வத் திருமணம் நிகழ்ந்தது. சகுந்தலையை வனத்திலேயே விட்டு விட்டு தன் நாடு திரும்பினான் துஷ்யந்தன்.
ஒருமுறை, தன்னையே மறந்த சகுந்தலை, துஷ்யந்தனின் நினைவாகவே இருந்தாள். கோபத்துக்குப் பேர்பெற்ற துர்வாச முனிவர், ஆஸ்ரமத்துக்கு வந்தார். ஆனால் அவர் வந்ததை அறியாமல், துஷ்யந்த நினைப்பிலேயே மூழ்கியிருந்தாள் சகுந்தலை.
கோபக்கார முனிவர் துர்வாசர், வந்தவனை வரவேற்கவில்லையே என்று ஆவேசம் கொண்டார். நீ யாரை நினைத்துக்கொண்டிருக்கிறாயோ அவன் உன்னை மறந்து போவான் என்று சாபமிட்டார். சகுந்தலையை மறந்தேபோனான் துஷ்யந்தன். என்னதான் நினைவுபடுத்தினாலும் அவனால் சகுந்தலை யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் அணிவித்த மோதிரத்தையும் தொலைத்து விட்டாள் சாகுந்தலை.
பிறகு, சகுந்தலைக்குக் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பரதன் எனப் பெயரிட்டாள். ''உன் மகன் பரதன், லக்ஷ்மியின் பேரருளைப் பெற்றவன். எதிர்காலத்தில் மாபெரும் சக்கரவர்த்தியாக, மாமன்னனாகத் திகழ்வான். இவனுடைய பெயரால், இந்த பூமி அழைக்கப்படும்'' என அசரீரி கேட்டது.
சாகுந்தலையில் கையில் இருந்து தவறிய மோதிரம் ஒரு மீன் வயிற்றுக்குள் இருந்தது. அந்த மீனை பிடித்து மீனவன் வெட்டிய போது மோதிரம் கிடைத்தது. அந்த மோதிரத்தை கொண்டு போய் மன்னன் துஷ்யந்தனிடம் கொடுத்தான் மீனவன் பிறகுதான் அவனுக்கு சாகுந்தலையின் நினைவு வந்தது. தனது மனைவியை தேடி வந்து தன்னோடு அழைத்துச்சென்றார் துஷ்யந்த மன்னன்.
"தந்தை மகன் பரதனிடம் ராஜ்ஜியத்தை ஒப்படைத்து, அவனே சந்நியாசிக்காக காட்டுக்குச் சென்ற காலத்திலிருந்து இந்த நாடு பாரத தேசம் என்று அழைக்கப்படுகிறது என விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அவருக்குப் பிறகு இந்த நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தார் பரத சக்கரவர்த்தி.
பரதன் ஆட்சி செய்த காரணத்தால் நம் நாட்டிற்கு பரத கண்டம் எனப் பெயர் பின்னாளில் அமைந்தது. இந்தப் பரதக் கண்டம் முழுவதும் லக்ஷ்மி தேவி அருள் ஆட்சி செய்கிறாள் என்பதாக ஐதீகம்.

பாரதம் என்ற பெயர் பண்டைய இந்திய நூல்களான புராணங்களில் இருந்து பெறப்பட்டது என்றும், இது பாரத கண்டம் என்று இந்தியாவை உள்ளடக்கிய நிலத்தைக் குறிக்கிறது என்றும் கூறப்படுகிறது . இந்த பாரதப் பேரரசு என்பது இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா, ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, துர்க்மெனிஸ்தான், வடமேற்கு திபெத், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றை உள்ளடக்கியது என்பது ஆச்சரியமான விஷயம்.
இந்தியாவின் உண்மையான பெயர் பாரத் மற்றும் இது முதல் ஜைன தீர்த்தங்கரரின் மூத்த மகன் பாரத் சக்ரவர்த்தியின் பெயரால் வைக்கப்பட்டுள்ளது இது பாரதம் என்ற பெயரின் அடிப்படையில் ஜைன மதத்தின் பரிசு என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications