குளியலறை நீரில் இதை சேர்த்து பாருங்க! எண்ணெய் குளியலுக்கான நேரம்? இரவில் தூக்கத்துக்கு பெஸ்ட் டிப்ஸ்
சென்னை: எண்ணெய்க்குளியல் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்னென்ன? எண்ணெய் குளியலுக்கு ஏற்ற நேரம் எது? தலைக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய் வகைகள் என்னென்ன? இரவு நேரங்களில் குளிப்பது நன்மை தரக்கூடியது? இதுகுறித்து ஆன்மீகம் சொல்வதென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
எப்போதுமே, சூரியன் உதயமாகி, 6 நாழிகைக்கு மேலுள்ள நேரத்தில்தான் குளிப்பதற்கான சரியான நேரம்.. காலை 8.24 மணிக்கு மேல், மாலை 3.36 மணிக்கு முன்பு தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கலாம்.

3 முக்கிய எண்ணெய்
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என மூன்றையும் சமமாகக் கலந்து உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை தேய்த்து ஊறவிட்டு குளிப்பதே சிறப்பான முறை.. அதிலும் புதன், சனிக்கிழமைகள் எண்ணெய் குளியலுக்கான நாளாகும். இதில், ஆண்கள் சனிக்கிழமையும், பெண்கள் வெள்ளியும் குளிக்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளித்தால், குடும்பத்தில் வறுமை வந்துவிடுமாம்..
எப்போதும் தலையில் எண்ணெய் வைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. அப்படிசாப்பிட்டால், குளிர்ச்சித்தன்மையால் உடலில் நொதிகள் சுரக்க தடை ஏற்படும்.. இதனால் மந்தம், அஜீரணம் உண்டாகும்.. தலைக்கு குளித்துவிட்டு சாப்பிட்டால், உணவிலுள்ள சத்துக்கள் நேரடியாக உடலில் உறிஞ்சப்பட்டு, ஆற்றலாக வலுப்பெறும்.
இரவில் குளிப்பது நல்லதா
குளிக்கும்போது ஆடைகள் இல்லாமல் குளிக்கக்கூடாதாம்.. இதனால் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதுடன் குடும்ப மகிழ்ச்சியும் சிதைந்துவிடுமாம்.
அதேபோல, காலையில் குளிப்பதை விட, இரவில் அதாவது காலையில் குளிப்பதை விட, இரவில் குளிப்பதுதான், அதிக பலன்களை கொண்டிருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன
இரவில் குளித்தால், பகலில் உடலில் தேங்கி கிடக்கும் உஷ்ணம் வெளியேறி, குளிர்ச்சி கிடைக்கும்..இது ஆரோக்கியமான தூக்கத்துக்கு வழிவகுக்கிறது.. இரவில் குளித்தால் மன அழுத்தம் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.. அதிலும் வெதுவெதுப்பான நீரில் குளித்தால், தசைகளுக்கு தளர்வு கிடைக்கும்.. இதனால் மனபதட்டம், மன அழுத்தமும் தணிந்து அமைதி கிடைக்கும்..
இரவு நேர குளியல் - நன்மை
கோடை காலத்தில் இரவில் குளிப்பது மிகவும் நல்லது.. இது உங்கள் தசைகளை அமைதிப்படுத்தவும், சோர்வை நீக்கவும் உதவும்.
இரவில் குளிக்கும் நீரில் லாவெண்டர் ஆயில் அல்லது கெமோமில் டீயை கலந்து குளித்தால், உடலின் வெப்பம் இறங்கும்.. சிறிது கற்றாழையை நீரில் கலந்து குளித்தால் சருமத்துக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.
அதேபோல இரவில் குளிப்பதற்கு முன்பும், குளித்து முடித்த பிறகும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.. உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருக்கவே கூடாது.. அதுமட்டுமல்ல, அதிகப்படியான வியர்வையால் குறையக்கூடிய அளவை நிரப்ப உதவும் வகையில் எப்சம் சால்ட்டை, குளிக்கும் தண்ணீரில் சேர்த்து கொள்வது இன்னும் நல்லது.
நல்ல தூக்கத்துக்கு பெஸ்ட் டிப்ஸ்
இரவு நேர குளியலை சரியாக செய்யாவிட்டால், சளி பிடித்தல் அல்லது உடலின் இயற்கையான வெப்பநிலை ஒழுங்குமுறையை சீர்குலைப்பது போன்ற சில உடல் உபாதைகள் ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இரவு குளித்துவிட்டு தூங்க செல்லும்முன்பு, சோம்பு தண்ணீர் அல்லது சோம்பு டீ குடித்து விட்டு படுக்கலாம்.. இதனால் உடலிலுள்ள கலோரிகள், கொழுப்புகள் சீராகும். அத்துடன், இரவில் சாப்பிட்ட உணவு செரிமானமடைந்து, வயிற்றை சுற்றியிலுள்ள தேவையற்ற சதைகளை கரைக்க இந்த சோம்பு நீர் உதவும்.
மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நிம்மதியான தூக்கத்துக்கு சோம்பு நீர் வழிவகுக்கும். மூலிகை டீயும் குடிக்கலாம்.
தூங்க போவதற்கு முன்பு, ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பாதங்களுக்கு மென்மையாக மசாஜ் செய்யலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications