சித்திரை திருவிழா! நாளை எதிர்சேவைக்காக இன்று அழகர்கோவிலிலிருந்து மதுரை புறப்படுகிறார் கள்ளழகர்
மதுரை: சித்திரை திருவிழாவையொட்டி நாளை நடைபெறும் எதிர்சேவைக்காக அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு இன்று கள்ளழகர் புறப்படுகிறார். அவர் வரும் மே 12 ஆம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார்.
திருமாலிருஞ்சசோலை, தென் திருப்பதி என அழைக்கப்படும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று மதுரையை அடுத்த அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் ஆகும்.

இந்த கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்ற ஒன்றாகும். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்தது. அது போல் மீனாட்சி அம்மன் தேரோட்டமும் நேற்று வெள்ளிக்கிழமை நடந்தது.
இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வு என்பது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகும். இதற்காக சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் தங்கப்பல்லக்கில் அதிர்வேட்டுகள் முழங்க அழகர் புறப்படுகிறார்.
கள்ளர் திருக்கோலத்தில் கண்டாங்கி பட்டுடுத்தி மதுரை வருகிறார். 494 மண்டகப்படிகளில் எழுந்தருள்கிறார். பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கள்ளழகருடன் 39 தள்ளுவண்டி, உண்டியல்களும் மதுரைக்கு வருகின்றன.
நாளை அதிகாலை மூன்று மாவடியில் மதுரை பக்தர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டங்களுடன், எதிர்சேவை செய்து அழகரை வரவேற்கும் நிகழ்வு நடைபெறும். திங்கள்கிழமை அன்று அதிகாலை 5.45 மணிக்கு மேல் தங்கக் குதிரை வாகனத்தில் அமர்ந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
இதற்காக நேற்று முதல் வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது. 13 ஆம் தேதி தேனூர் மண்டபத்தில் சேஷ, கருட வாகனங்களில் கள்ளழகர் எழுந்தருளி மண்டூக மகரிஷி முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அன்று இரவு விடிய விடிய தசாவதார கோலங்களில் காட்சி தரும் நிகழ்வும் நடைபெறும். பின்னர் 14 ஆம் தேதி இரவு பூப்பல்லக்கு விழா நடைபெறும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications