கண் திருஷ்டி..போர்க்களமான வீடு..சண்டை நீங்கி சந்தோஷம் அதிகரிக்க.. இந்த ஒரு பொருள் போதும்
சென்னை: வீடு என்றால் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் சண்டையே வேலையாக இருந்தால் என்ன செய்வது. வீட்டிற்குள் நுழைந்தாலே போர்க்களமாக காட்சியளிக்கும் இதற்குக் காரணம் வீட்டிற்குள் இருக்கும் எதிர்மறை சக்திகள்தான். தீய சக்திகளை விரட்டி விட்டு நல்ல சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வர சில பரிகாரங்களை செய்வது அவசியம்.
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். கண் திருஷ்டியால் சிலருக்கு உடல்நிலை கோளாறுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை. பணம் கிடைப்பதற்கு தாமதம். பணம் வந்தும் பற்றாக்குறை போன்றவை ஜாதகத்திற்கு, கிரக நிலைகளுக்கு அப்பாற்பட்டு, வீட்டிலிருக்கும் எதிர்மறை அதிர்வுகள் காரணமாக பாதிப்புகள் ஏற்படும்.

வீட்டிற்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏற்பட்டிற்கும் கண் திருஷ்டி, மேலும் கணவன் மனைவி குழுந்தைகளுடன் சேர்ந்து வெளியில் கிளம்பும்போது, ஏற்படும் குடும்ப கண் திருஷ்டி, சில குடும்பங்களில் மாதம் ஒருமுறையாவது மருத்துவமனைக்கு செல்வது போன்ற விஷயங்களால், குடும்ப உறுப்பினர்களை பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு எளிமையான பரிகாரம் உள்ளது.
ஒரு வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் இருந்தால், அந்த வீட்டின் மனசஞ்சலங்கள் அதிகரிக்கும். சிலர் காலையில் நன்றாக இருப்பார்கள். ஆனால் மாலையில் உடலுக்கு என்னவென்றே சொல்லமுடியாத நிலை ஏற்படும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும். கல்யாணம் மற்றும் சுப நிகழ்வுகள் வீட்டில் நடக்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும்.
வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஒருவரின் வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருப்பது அதாவது ஏதோ வேலைக்கு போகிறோம் வருகிறோம் என்று இருப்பது வாழ்க்கையே உப்பு சப்பில்லாமல் இருக்கும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் ஏற்படுத்த சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.
கல் உப்பு, காய்ந்த மிளகாய் 4, எலுமிச்சை பழம் 1. கண்ணாடி கோப்பை 1, இந்த பரிகாரம் வீட்டில் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கும் ஒரு எளிய பரிகாரம். இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் செய்யவேண்டும். அப்போதுதான் பலன்கள் அதிகமாக கிடைக்கும்.
ஒரு கண்ணாடி பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி, ஒரு எலுமிச்சம் பழத்தை கல் உப்பின் நடுவில் நிற்க வைக்கவேண்டும். பிறகு நான்கு காய்ந்த மிளகாயை அதனை சுற்றி நான்கு மூலைகளிலும் சொருக வேண்டும். மிளகாயின் கூர்மையான பகுதி எதிர்மறை சக்திகளை ஈர்த்துக்கொள்ளும் தன்மை கொண்டது.

இதனை தலைவாசல் கதவின் உட்புற பகுதியின் மூலையில் வைக்கவேண்டும். இதனை வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றவேண்டும். அப்படி மாற்றும்போது கல் உப்பு, எலுமிச்சை பழம், காய்ந்த மிளகாயை ஓடும் நீரில் விட்டுவிடலாம் அல்லது மூன்று பொருட்களையும் சேகரித்து யார் காலிலும் படாதவாறு போட்டுவிடவேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதால் வீட்டில் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கலாம்.
இதேபோல தீய சக்திகளை விரட்ட வெண் கடுகு அருமையான பொருள். இது கடவுள் தன்மையைக் கொண்டது. அது பைரவரின் தேவ கணம் ஆகும். வீடுகளில் மன அமைதி இல்லாமல், குடும்ப ஒற்றுமை இல்லாமல் உள்ளவர்கள் சாம்பிராணி தூபம் போடும் போது சிறிதளவு வெள்ளைக் கடுகை போட்டு விட்டு வீட்டில் அனைத்து அறைகளிலும் எடுத்துச் சென்று அந்தப் புகையைக் பரவ விட வேண்டும் பின்னர் பூஜை அறையில் அந்த தூபத்தை வைப்பது நல்லது.
வெண் கடுகு உள்ள இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது. அவை புகையாக மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீய ஆவிகளை அடித்துத் துரத்தும். செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் வெண்கடுகு கொண்டு தூபம் போட கண் திருஷ்டி மாயமாகும் தீய சக்திகள் விலகி ஓடும். அதே போல வெள்ளிக்கிழமை, செவ்வாய்கிழமைகளில் வாசல் தெளித்து கோலம் போடும் போது கூடவே மஞ்சள் தண்ணீர் தெளிப்பதும் கண் திருஷ்டியை போக்கும்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications