கந்த சஷ்டி விரதம் ஸ்பெஷாலிட்டீஸ்.. 7 நாட்களுக்கு எந்தெந்த முறைகளில் கந்தசஷ்டி விரதம் இருக்கலாம்? அடடே
சென்னை: கந்தனின் புகழ்பாடும் கந்த சஷ்டி விரதத்தை முருக பக்தர்கள் இன்று காலை துவங்கியிருக்கிறார்கள்.. கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளும் முறைகள் என்னென்ன? விரதங்கள் கடைப்பிடிக்கும் முறைகள் என்னென்ன தெரியுமா? சுருக்கமாக பார்க்கலாம்.
ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பிரதமை திதியில் துவங்கி, சப்தமி வரையிலான 7 நாட்கள் சஷ்டி விரதம் இருக்க வேண்டும்... சூரசம்ஹாரத்தை தரிசித்த பிறகு, சப்தமி திதியில் நடைபெறும் முருகப் பெருமானின் திருக்கல்யாணத்தை தரிசித்த பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

கர்ப்பிணிகள்: அந்தவகையில், இன்று காலை விரதத்தை துவக்கியிருக்கிறார்கள் பக்தர்கள்.. வரும் 8-ம் தேதி வரை இந்த விரதம் அனுஷ்டிக்க வேண்டும். சஷ்டி விரதம் இருப்பவர்கள், தங்கள் உடலுக்கு ஏற்ற முறையை தேர்வு செய்து விரதம் இருக்க வேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் விரதத்தை தவிர்க்கலாம்.
அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் நல்லது.. விரதங்கள் கடைப்பிடிக்கப்படும் முறைகள் என்னென்ன தெரியுமா? பெரும்பாலும் விரதம் மேற்கொள்பவர்கள், உப்பு இல்லாமல் உணவுகளையும் சிலர் விரதமாக மேற்கொள்வார்கள்.. உப்பில்லாமல் தயிர் சாதம், பால் சாதம் என்றும் விரதத்தின்போது எடுத்து கொள்வார்கள். சிலர், காய்கறி, கீரை வகைகளை மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள்.
பட்டினி விரதம்: காலை, மதியம், இரவு எதாவது ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொண்டு, மீதமுள்ள 2 வேளையும் சாப்பிடாமல் இருப்பார்கள்... கடுமையான விரதம் மேற்கொள்பவர்கள், 3 வேளைகளிலுமே உணவையும் தவிர்த்து எளிமையான உணவை உட்கொண்டு விரதம் இருப்பார்கள். இதற்கு பெயர்தான் பட்டினி விரதம் எனப்படும்.
கடவுளுக்கு அபிஷேகம் செய்த பாலை மட்டுமே ஒரு டம்ளர் குடித்து விரதம் இருப்பதற்கு பால் விரதம் என்பார்கள்.. மூன்று வேளையும், முற்றிலுமாக உணவை தவிர்த்து பால் மற்றும் பழங்களையும் சிலர் சாப்பிடுவார்கள்.. அதாவது காலையில் ஒரு வாழைப்பழம், மதியம் ஒரு ஆப்பிள், இரவில் ஒரு மாதுளை பழத்துடன் ஒரு டம்ளர் பால் குடித்து, இந்த விரதத்தை மேற்கொள்வர். அந்தவகையில், கடவுளுக்கு நைவேத்தியமாக படைத்த பால், பழங்களை மட்டுமே சாப்பிட்டு மேற்கொள்ளப்படும் விரதம் இதுவாகும்.
இளநீர் விரதம்: ஒரு நாளைக்கு ஒரு இளநீர் மட்டுமே குடித்து விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு.. இளநீரிலுள்ள வழுக்கையையும் சாப்பிடலாம். ஆனால், இது மிகவும் கடுமையானது..
ஆனால், இதைவிட கடுமையான விரதம்தான், மிளகு விரதம்.. வெறும் மிளகை மட்டும் சாப்பிடுவார்கள்.. முதல்நாள் ஒரு மிளகில் விரதம் தொடங்கி, மறுநாள் 2 மிளகு, அடுத்த நாள் 3 மிளகு என ஒவ்வொரு நாளும் ஒரு மிளகை சேர்த்து கொள்ள வேண்டும். இப்படி 7 வது நாளில் 7 மிளகை சாப்பிட்டு விரதத்தை முடிப்பார்கள். பல ஆண்டுகளாக குழந்தை வரம் வேண்டி தவம் இருப்பவர்கள் கந்தனை வேண்டிக்கொண்டு இந்த விரதத்தை இருப்பார்கள்.
சூரசம்ஹாரம்: விரதம் இருக்க முடியாத சூழலில் உள்ளவர்கள், மற்ற நாட்களில் உணவு எடுத்துக் கொண்டு, சூர்சம்ஹாரம் தினத்தன்று மட்டும் முழுவதுமாக உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருப்பார்கள்.. சூரசம்ஹாரம் அன்று மாலை நிறைவடைந்த பிறகு இரவு உணவு சாப்பிட்டு, விரதத்தை நிறைவு செய்வர்.
ஆனால், விரதம் மேற்கொள்பவர்கள், தண்ணீர் குடிக்காமல் இருக்கக்கூடாது என்கிறார்கள்.. இதனால், உடல் ஆரோக்கியத்திற்கு கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், விரதம் இருப்பவர்கள் 7 நாளும் தண்ணீரை தாராளமாக குடிக்க வேண்டுமாம்.
கட்டுப்பாடுகள்: அதுமட்டுமல்ல, சஷ்டி விரதம் மேற்கொள்ள விதிமுறைகள், கட்டுப்பாடுகள் என்று எதுவுமே கிடையாது. பக்தியின் வெளிப்பாடாக, தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக, பக்தர்கள் இப்படியான விரதங்களை மேற்கொள்கிறார்களாம்.. எனவே, பட்டினி கிடப்பதைவிட, கந்தனின் மீது முழு நம்பிக்கையுடன், அபரிமிதமான பக்தியை வைப்பதே முக்கியம் என்கிறார்கள்.
விரதத்தை ஆரம்பிக்கும்போது முருகன் படத்தின் முன்பு ஒரு கலசம் வைத்துக்கொண்டு அதில் வாசனை திரவியங்களை போட்டு, ஒரு ரூபாய் நாணயம் வைத்து, ஒரு எலுமிச்சை பழம், மாவிலை வைத்து தேங்காய் வைத்து மஞ்சள் ,குங்குமம் வைத்து கலசத்தை தயார் செய்து அதனை பச்சரிசியின் மேல் வைத்து காலை 6 மணிக்குள் ஆரம்பித்துவிட வேண்டும். 6 மணிக்குள் காப்பு கட்டிக்கொண்டு கந்தசஷ்டி விரதத்தை தொடங்கி தொடர்ந்து 7 நாட்கள் முருகனுக்கு மலர் அலங்காரம் செய்து முருகரின் பதிகங்களை பாடி விரதத்தை நிறைவு செய்யலாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications