வாஸ்து டிப்ஸ்.. செல்வம் நிறைய.. மகாலட்சுமி மகிழ்ச்சியடைய.. கிச்சனில் இதை செய்ய மறக்காதீர்கள்
சென்னை: மகாலட்சுமி தேவி வாசம் செய்யும் சமையல் அறையில் ஒரு சில விஷயங்களைக் கடைப்பிடிக்கும் பொழுது ஐஸ்வரியம் உண்டாகிறது. அந்த வகையில், சமையலறையில் சில பொருட்களை எப்பொழுதும் குறைவில்லாமல் வைத்திருந்தால் வறுமை என்பதே இருக்காது. அப்போது, மகாலட்சுமியின் அருளால் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
பூஜையறையை எப்போதும் சுத்தமாகவும், நறுமணம் நிறைந்ததாகவும் வைத்திருக்க வேண்டும். அதே போல நம்முடைய வீட்டு சமையல் அறையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நாம் சமைக்கும் உணவு அனைவருக்கும் ஆரோக்கியமான உடல்நலத்தை அளிக்கும்.

மகாலட்சுமி அனுக்கிரகம் பெற்ற உப்பு, பருப்பு, அரிசி, வெல்லம் போன்றவைகள் குறைவில்லாமல் இருக்க வேண்டும். அதே போல அஞ்சறைப்பெட்டியில் பொருட்கள் இவை அனைத்தும் எப்பொழுதும் ஒருவர் வீட்டில் குறைவில்லாமல் இருக்க வேண்டும். குறிப்பாக இந்த பொருட்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் முழுவதுமாக தீர்ந்து போக விடக்கூடாது.
வெள்ளிக்கிழமை உப்பும், சர்க்கரையும் வெல்லமும் வங்க வேண்டும். இந்த பொருட்கள் வீட்டில் குறைவில்லாமல் இருந்தாலே அதே போல் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும். வருமானம் பல வழிகளிலும் வரும்.
நெய் மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்றாகும். எனவே, அனைவரது வீட்டிலும் பசும் நெய் இருக்க வேண்டும். நெய் வைத்து தினமும் தீபம் ஏற்ற வேண்டும். அதே போல நல்லெண்ணெய் குறைவில்லாமல் இருக்க வேண்டும்.

உப்பு எந்த அளவிற்கு முக்கியமோ ஊறுகாய் அவசியம் இருக்க வேண்டும். குறிப்பாக நெல்லிக்காய் ஊறுகாய் இருப்பது சிறப்பு, நெல்லிக்காய்களை அவ்வப்போது வாங்கி சாப்பிட வேண்டும். நெல்லிக்காயில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம் எனவே நெல்லிக்காய் ஊறுகாய் வாங்கி வைப்பது சிறப்பு.
அதே போல வாசனை பொருட்களாக ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போன்றவைகளை குறைவில்லாமல் டப்பாவில் வைத்திருக்க வேண்டும். வாசனை பொருட்களை அடிக்கடி சமையல் செய்வது நல்லது. நெய், நறுமணப்பொருட்களை அடிக்கடி சமையலில் சேர்ப்பது வீட்டில் மகாலட்சுயின் அருளை அதிகரிக்கச் செய்யும். என்ன இல்லத்தரசிகளே உங்க வீட்டு கிச்சனில் இந்த வாஸ்து டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.. எதையும் நம்பிக்கையோடு செய்தால் நல்லதே நடக்கும் ட்ரை செய்துதான் பாருங்களேன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications