கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்ய நல்ல நேரம்.. குட்டிக்கண்ணன்களுடன் கொண்டாடலாம் கோகுலாஷ்டமி
சென்னை: ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் தேய்பிறை அஷ்டமி திதியில் அவதரித்தவர் பகவான் கிருஷ்ணன். கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆண்டு செப்டம்பர் 06 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது பகவான் கிருஷ்ணரின் 5250வது பிறந்தநாள் என்று புராணங்கள் கூறுகின்றன. கண்ணன் பிறந்த நாளை எப்படி கொண்டாட வேண்டும் நல்ல நேரம் எப்போது என்று பார்க்கலாம்.
கண்ணனின் பிறப்பு: கண்ணனின் பிறப்பு கம்ச வதம் மட்டுமல்ல. நரகாசுரனை வதம் செய்வது மட்டும் நோக்கமல்ல. மண்ணுலக மக்களை காத்து ரட்சிக்கவும் அவரது அவதாரம் நிகழ்ந்துள்ளது. பிறந்த குழந்தையாக இருந்தது முதல் பால பருவத்திலேயே பல அசுரர்களை வதம் செய்திருக்கிறார் கிருஷ்ணர். கண்ணன் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தை கண்ணனின் லீலைகளை அறிந்து கொள்வோம் மதுராவை ஆண்ட அரக்கன் கம்சனின் தங்கை தேவகியை மணமுடித்தார் வசுதேவர். திருமணம் முடிந்த சந்தோஷம் சில நிமிடம் கூட நீடிக்கவில்லை. தங்கையையும் தங்கை கணவரையும் ரதத்தில் வைத்து அழைத்து சென்ற போது வானுலகில் இருந்து வந்த ஒரு தெய்வீக குரல், தேவகியின் எட்டாவது மகன் கம்சனை அழிப்பான் என கூறியது. இதை கேட்டு பயந்து போன கம்சன், தன் தங்கையைக் கொல்ல தன் வாளை உடனடியாக எடுத்தான்.

கிருஷ்ணர் அவதாரம்: கம்சனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்ட வாசுதேவன், தன் மனைவியை விட்டு விடுமாறு வேண்டினான். தங்களுக்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கம்சனிடம் ஒப்படைத்து விடுவதாக வாக்கு கொடுத்தான். தேவகியின் எட்டாவது மகனின் கையால் தன் மரணம் நிகழும் என்று தேவ குரல் சொன்னதைக் கேட்டு பயந்த கம்சன், தேவகியையும் அவளது கணவனான வாசுதேவனையும் சிறையில் அடைத்தான். தேவகி வசுதேவருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளை கம்சன் கொன்ற பிறகு, ஏழாவதாக கருவுற்ற குழந்தை கருச்சிதைவில் இறந்தது. அதை ஏற்படுத்தியவரே கண்ணன்தான். தேவகியின் கருவில் இருந்த குழந்தையை ரோகிணி மாற்றி வைத்து நந்தகோபரின் வீட்டில் மறைத்து வைத்தார். அங்கே பலராமர் பிறந்தார்.
யசோதா வளர்த்த பிள்ளை: எட்டாவதாக வயிற்றில் கரு உருவானது. குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே அக்குழந்தையின் தலைவிதியை எண்ணி தேவகியும் வாசுதேவனும் கலங்கினர் அப்போது திடீரென அவர்கள் முன் தோன்றிய விஷ்ணு பகவான், அவர்களையும் மதுராவின் மக்களையும் காப்பாற்ற தானே அவதாரம் எடுத்து வரப்போவதாக கூறினார். தான் பிறந்தவுடன் அவரை எடுத்துக் கொண்டு, கோகுலத்தில் உள்ள தன் நண்பனான நந்தகோபரிடம் ஒப்படைக்குமாறு வாசுதேவனிடம் கூறினார். நந்த கோபரின் மனைவியான யசோதா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுப்பார் என்றும் அந்த குழந்தைக்கு பதிலாக தன்னை மாற்றி வைத்து விட்டு, யசோதாவின் பெண் குழந்தையை சிறைக்கு வாசுதேவர் எடுத்து கொண்டு வர வேண்டும் என்றார் விஷ்ணு.
ஆவணி அஷ்டமி திதி: ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் உதித்த போது அஷ்டமி திதி நாளில் நடு இரவில் அவதரித்தார் கண்ணன். வசுதேவர் தன் கால்களை அசைத்தவுடன் கால்களில் கட்டப்பட்டிருந்த சங்கிலி அவிழ்ந்தது. சிறைச்சாலை கதவுகளும் திறந்தன. கிருஷ்ணரை தன்னுடன் எடுத்துக் கொண்டு யமுனா நதியை கடந்தார்.
குடைபிடித்த நாகம்: யமுனை நதியை கடந்து போகையில் வாசுதேவர் குழந்தை கண்ணனை தன் தலைக்கு மேல் வைத்துக் கொண்டான். மழை பெய்து ஆற்றில் வெள்ளம் போய் கொண்டிருந்தது. ஆனால் வாசுதேவனுக்கு பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது தண்ணீர். அதிசயமாக ஐந்து தலை நாகம் அவனை பின் தொடர்ந்து, குழந்தைக்கு நிழல் போல் வந்து கொண்டிருந்தது.
சிறையில் பெண் குழந்தை: வாசுதேவன் கோகுலத்தை அடைந்ததும், நந்தகோபரின் வீட்டு கதவுகள் திறந்திருப்பதைக் கண்ட வாசுதேவர், மெதுவாக குழந்தைகளை மாற்றினார். பின் அந்த பெண் குழந்தையுடன் மீண்டும் கம்சனின் சிறைச்சாலைக்கு சென்றார். சிறைச்சாலைக்குள் நுழைந்தவுடன் அதன் கதவுகள் தானாக மூடிக்கொண்டன. பெண் குழந்தை பிறந்திருப்பதாக கம்சனிடம் சிறை காவலர்கள் சொல்லவே, கோபத்தோடு வந்த கம்சன் அந்த குழந்தையை கல்லின் மீது வீசி எறிந்தான். அந்த குழந்தை விஷ்ணு பகவானின் யோகமாயாவாக உருமாறி சிரித்தாள். ஏய் முட்டாள் கம்சனே, உன்னை கொல்லப்பிறந்தவன் பத்திரமாக வளர்ந்து கொண்டிருக்கிறான். அவனே உன்னை காலம் வரும் போது வந்து வதம் செய்வான் என்று கூறி மறைந்தாள்.
அரக்கர்களை வதம் செய்த கண்ணன்: தன்னை அழிக்கப் பிறந்த குழந்தை எதிரியை எப்படியாவது அழிக்க வேண்டும் என கம்சன் நினைத்தான். அதற்காக பல அரக்கர்களை அனுப்பினான். மார்பகத்தில் விஷம் தடவி வந்த அரக்கியின் மூச்சை நிறுத்தினான் கண்ணன் புட்டனாவின் மரணத்தை கேள்விப்பட்ட கம்சன் அதிர்ந்தான். அதனால் ஷகாட்சுரா என்ற அரக்கனை அனுப்பி வைத்தான்.
கட்டை வண்டி அரக்கன்: வண்டி போல் வேடமணிந்து கொண்ட அவன் கோகுலத்தை அடைந்தான். யசோதயோ கிருஷ்ணாவின் பாதுகாப்பான மற்றும் நீண்ட ஆயுளுக்கு பல புனித சடங்குகளையும் மேற்கொண்டார். மர வண்டியின் அடியில் படுத்திருந்த குழந்தை கிருஷ்ணரைப் பற்றி கவனிக்க மறந்தாள் யசோதா. ஷகாட்சுரா அரசன் குட்டி கிருஷ்ணரின் மேல் வண்டியை ஏற்றி நசுக்கிக் கொல்ல நினைத்தான். பகவான் கிருஷ்ணரோ அந்த வண்டியின் சக்கரத்தை உதைத்தார். மிகப்பெரிய சத்தத்துடன் அந்த வண்டி உடைந்தது. அசுரனும் அழிந்து போனான்.
கம்ச வதம்: குழந்தையாக இருந்த போதே தன்னை அழிக்க வந்த அரக்கர்களை கொன்ற கண்ணன் கடைசியாக தனது தாய் மாமன் கம்சனையும் வதம் செய்து கொன்றார். கண்ணனின் பிறப்பு அசுர வதத்திற்காக மட்டும் நிகழ்ந்ததல்ல. போர்க்களத்தில் பகவத் கீதையை போதித்து மண்ணுலக மக்களை ரட்சிக்க வந்தவராய் இன்றைக்கும் பல வீடுகளில் குட்டிக்கண்ணனாக வலம் வருகிறார். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவோம்.
பூஜை செய்ய நல்ல நேரம்: இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ரோகிணி நட்சத்திரம் செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 09.20 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி காலை 10.25 மணிக்கு முடிவடைகிறது. கிருஷ்ண ஜெயந்தி விழாவை இரவு நேரத்தில் கொண்டாடுவதுதான் சிறப்பு. கிருஷ்ணர் இரவில்தான் பிறந்தார் என்பதால் மாலையில் பூஜை செய்வதுதான் சிறப்பு.
கிருஷ்ண ஜெயந்தி 2023: இந்த ஆண்டு, கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 6, புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி, ஆவணி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தின் அஷ்டமி திதி செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை 3.37 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 4.14 மணிக்கு முடிவடையும். ரோகிணி நட்சத்திரம் செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 09.20 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி காலை 10.25 மணிக்கு முடிவடைகிறது.
பூஜை செய்ய நல்ல நேரம்: ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட உகந்த நேரம் செப்டம்பர் 6 ஆம் தேதி இரவு 11:57 மணிக்கு தொடங்குகிறது. கிருஷ்ணரை வழிபட பூஜை செய்வதற்கு மாலை 4.45 மணி முதல் இரவு 7.30 மணி வரை உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதமிருந்து வழிபடுவது கிருஷ்ணரின் அருளைப் பெறலாம். புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் பூஜை செய்து கண்ணனை வணங்கினால் உங்கள் வீட்டிலும் தனது பிஞ்சு பாதத்தில் கோலம் போட கண்ணன் பிறப்பான். கோகுலாஷ்டமி நாளில் கிருஷ்ணருக்கு பிடித்த முறுக்கு, சீடை, அதிரசம், வெண்ணெய் உள்ளிட்ட பலகாரங்களைப் படைத்து நம்பிக்கையுடன் பூஜை செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

ஷகன் .பி

A. ஆதிக் தேவ்

ஜெபரிஷ் பாலா

நிலானி வினோத்குமார்

நிலானி

பிரபஞ்சனி

தக்ஷிதா

பிரகதி
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications