மகாலட்சுமியின் அருளும் கடாட்சமும் யாருக்கெல்லாம் கிடைக்காது தெரியுமா? இனியாவது மாறுங்களேன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகாலட்சுமியின் அருள் யாருக்கு கிடைக்கும் என்பது அனுபவத்தில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் யாருக்கெல்லாம் கிடைக்காது தெரியுமா?

வீட்டில் பூஜை, புனஸ்காரம் செய்வதே லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அது போல் வீட்டில் சுப காரியங்கள் நடக்கவும் லட்சுமி அருள் தேவைப்படுகிறது.

Lord Mahalakshmi not gives blessings for the people who have inhumanity

எப்போதும் நாம் வெளியே செல்லும் போது நமது பர்சில் சிறிய அளவிலான மகாலட்சுமி படத்தை வைத்துக் கொண்டு செல்ல வேண்டும். அப்போது போற காரியம் சிறப்பாக நடைபெறும் என்கிறார்கள். வீட்டில் இரு வேளையும் குளித்துவிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

அன்றாடம் புதிய மலர்களை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும். வெளியே சென்றுவிட்டு வந்தாலே கை, கால்களையும் ,முகத்தையும் கழுவ வேண்டும். வீட்டில் வாசனை திரவியங்களை கொண்டு வழிபட வேண்டும். ஊதுவத்தி, சாம்பிராணி உள்ளிட்டவைகளை ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும்.

செவ்வாய், வெள்ளிகளில் வீட்டை சுத்தமாக பெருக்கி துடைக்க வேண்டும். மேலும் வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட வேண்டும். அரிசி மாவில் கோலமிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதிலும் கால்களை முழுமையாக கழுவ வேண்டும். சிலர் முன்னங்கால்களை மட்டும் கழுவிவிட்டு பின்னங்கால்களை அப்படியே விட்டு விடுவர்.

இது தவறு. எப்போதுமே கால்களை முழுமையாக கழுவ வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் ராகு மற்றும் சனியின் தாக்கத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்படக் கூடும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. வீட்டில் எப்போதுமே நல்ல விஷயங்களை பேச வேண்டும், நல்ல எண்ணங்களுடன் இருத்தல் வேண்டும்.

அப்போதுதான் லட்சுமி வாசம் செய்வாள். மேலும் மகாலட்சுமி அருள் கிடைப்பது குறித்து பார்த்தோம். மகாலட்சுமி அருள் யாருக்கெல்லாம் கிடைக்காது என்பதை பார்க்கலாம். பொறாமை குணம் கொண்டவர்கள், பேராசை எண்ணம் கொண்டவர்கள், பிறர் அழிய வேண்டும் என நினைப்பவர்கள், பிறருக்கு தீங்கு செய்பவர்கள் உள்ளிட்டோருக்கு மகாலட்சுமி ஆசி கிடைக்காது என்கிறார்கள்.

பெற்றத் தாய், தந்தையை மதிக்காமல் எப்போதும் உதாசீனப்படுத்தும் நபர்கள், தொழில், பாடம் கற்றுக் கொடுத்த குருவை அவமரியாதை செய்தல், குருவுக்கு நம்பிக்கை துரோகம் செய்பவர்கள், வாயில்லா ஜீவன்களை கொடுமைப்படுத்துபவர்கள், வாயில்லா ஜீவன்களுக்கு உணவு வைப்பது போல் வைத்துவிட்டு அதை தட்டிவிடுபவர்கள், செய்த நன்றியை மறந்தவர்கள், ஐம்புலன்களையும் அடக்கத் தெரியாதவர்கள் உள்ளிட்டோருக்கும் மகாலட்சுமியின் அனுகூலம் கிடைக்காதாம்.

அது போல் செய்யும் தொழிலுக்கு துரோகம் செய்பவர்கள், கட்டிய மனைவிக்கும் கணவருக்கும் துரோகம் செய்பவர்கள், உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவர்கள் , பிறருக்கு அநீதி இழைப்பவர்கள், தன்னிலை மறந்து பிறரிடம் ஆணவமாக நடந்து கொள்பவர்கள் உள்ளிட்டோரும் மகாலட்சுமியின் ஆசி கிடைக்காமல் பணத்திற்கு திண்டாடும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+