மகாசிவராத்திரி சதுரகிரி,வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல அனுமதி..பக்தர்கள் இரவில் தங்க தடை
மகாசிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலைக்கும், பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
சென்னை: மகா சிவராத்திரியையொட்டி வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. பகலில் மட்டுமே சாமி தரிசனம் செய்ய வேண்டும் எனவும் இரவில் தங்கி சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். வெள்ளியங்கிரி 7-வது மலையில் சுயம்புலிங்கம் உள்ளது. இது தென்கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த சுயம்பு லிங்கத்தை தரிசிக்க சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி ஆகிய நாட்களில் ஏராளமான பக்தர்கள் 7 மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதி ஆகும். இந்த நிலையில், மகா சிவராத்திரி விழா நாளை சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. எனவே வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்து உள்ளது.
ஆண்டுதோறும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி ஆகிய 2 விழாக்களுக்கு மட்டுமே வெள்ளியங்கிரி மலை மீது செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். தற்போது சிவராத்திரி விழாவுக்காக இன்று வெள்ளிக்கிழமை முதல் வருகிற 20ஆம் தேதி வரை 4 நாட்கள் மட்டும் மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
பிளாஸ்டிக் பாட்டில்களை மலையில் வீசுவதை தடுக்க புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். அதன்படி பக்தர்கள் மலை மீது கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூ.20 வசூலித்து ஸ்டிக்கர் ஒட்டப்படும். பக்தர்கள் மலையில் இருந்து இறங்கும் போது ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டிலை வனத்துறையிடம் கொடுத்து ரூ.20-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் வனப்பகுதியில் பாட்டில்கள் வீசுவது தடுக்கப்படும். எனவே மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை மலையில் வீசுவதை தவிர்க்க வேண்டும். என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.ஆடி, தை அமாவாசை மகாளய அமாவாசை நாட்களில் மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வருகை தருவார்கள். சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படும் மகா சிவராத்திரி அன்றும் திரளான பக்தர்கள் வருகை தருவதுண்டு. அதன்படி இந்த ஆண்டு வருகிற 18ஆம் தேதி தேதி சனிக்கிழமை சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
சதுரகிரி மலைக்கு செல்ல வருகிற நாளைய தினம் முதல் 21ஆம் தேதி வரை அனுமதி வழங்கி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணி முதல் நண்பகல் 11 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. இரவில் கோவிலில் தங்க அனுமதி இல்லை. 60 வயதுக்கு மேற்பட்டோர் செல்ல தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது.
மகா சிவராத்திரி முன்னிட்டு வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னேற்பாடு வசதிகளை செய்து வருகிறது. மேலும் மழைக்குச் செல்லும் பாதைகள், கோவில், மலை அடிவாரத்தில் கூடுதல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மகா சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு இரவு வழிபாடு நடத்துவது விசேஷமாக கருதப்படுகிறது. எனவே வருகிற 18ஆம் தேதி பக்தர்கள் சதுரகிரிக்கு மலை ஏற இரவிலும் அனுமதிக்க வேண்டும். சிவராத்திரி என்பதால் கட்டுப்பாடின்றி பக்தர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இந்த முறை மட்டும் கட்டுப்பாடுகளை தளர்த்தி இரவிலும் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் சதுரகிரியில் இரவு நேரத்தில் தங்குவதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். பகலில் மட்டுமே மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications