Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திசையன்விளை அதிசயம்! பூஜையில் கண்களை திறந்த மூகாம்பிகை! கோயில் தலைவருக்கு வந்த போன் கால் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அற்புத விநாயகர் ஆலயத்தில் மூகாம்பிகை அம்மன் கண் திறந்து பார்த்ததாக சொல்லப்படும் சம்பவத்தால் பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர். அத்துடன் அந்த கோயிலின் தலைவருக்கும் திடீரென வந்த போன் காலால் நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

திசையன்விளையில் தங்கையா ஸ்வீட்ஸ் அருகேயுள்ள மூன்று முக்கு சாலையில் அமைந்துள்ளது, அற்புத விநாயகர் ஆலயம். இங்கு மூகாம்பிகை தாய்க்கென தனி சன்னதி உள்ளது. இந்த கோயிலில் மகிஷாசூரமர்த்தினி பூஜை, திவ்ய அபிஷேகம், அக்ஷராப்பியாசம் எனப்படும் குழந்தைகள் கல்வி ஞானம் பெறுவதற்கான வேண்டுதல் உள்ளிட்டவை நடைபெறும்.

spirtuality tirunelveli

இங்கு நேற்று மாலை 6.30 மணி அளவில் கோவில் பூசாரி முகேஷ் பட்டர் மூகாம்பிகை தாய்க்கு அலங்காரம் செய்துமுடித்துவிட்டு பூஜைக்கு தயாராக இருந்தார். அப்போது அந்த கோயிலின் தலைவர் முத்து ஆச்சாரி தனது மருமகளை பிரசவத்திற்கு சேர்த்துவிட்டுவிட்டு தனது மனைவியுடன் கோயிலுக்கு வந்துக் கொண்டிருந்தார்.

அப்போது வரும் வழியில் சுவாமிக்கு தேவையான அனைத்து பூஜை பொருட்களையும் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். அப்போது கோயிலில் பூஜை செய்யும் நேரத்தில் தனது மருமகளுக்கு நல்லபடியாக பிரசவம் நடக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். அவர் கண்களை மூடி வேண்டிவிட்டு கண்களை திறந்து பார்த்தார்.

அப்போது மருத்துவமனையில் இருந்து அவருடைய மகன் அவருக்கு போன் செய்தார். அந்த பெண்ணுக்கு நல்ல முறையில் பெண் குழந்தை பிறந்ததாக தெரிவித்தார். இந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்டு அம்பாளிடம் நன்றி சொன்ன போது அவருடைய சிலையில் இருந்து ஒருவிதமான ஒளி வருவதை கண்டார்.

உடனே தனது மனைவியிடம் சொன்னார். இதை பார்த்து அனைவரும் வியந்தனர். உடனே முத்து ஆசாரி, அங்கிருந்த பூசாரியை அழைத்து அம்மனின் கண்கள் திறந்திருப்பது போல் காட்சியளித்ததை பார்க்குமாறு கூறினார். உடனே அங்கிருந்த பக்தர்களும் பார்த்தனர். ஏராளமானோர் அதை புகைப்படம் எடுத்து சமூகவலைதள பக்கத்தில் போட்டதால் காட்டுத் தீயாய் பரவி அம்மனின் கண் கொள்ளா காட்சியை காண பக்தர்கள் கோயிலுக்கு குவிய தொடங்கினர்.

இந்த காட்சியை பார்க்க இரவு 10.30 மணிக்குகூட கூட்டம் அலைமோதியது. அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பழம், லட்டு உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது. 10.30 மணிக்கு பிறகும் நிறைய பேர் வந்ததால் உடனே கோயில் நடை சாத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

இதையடுத்து இன்று காலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறந்தது. ஆனால் கோயிலில் அம்பாளின் கண்கள் வழக்கம் போல் இயல்பாகவே இருந்தது. அங்கு அம்மனுக்கு ஏற்றி வைத்திருந்த விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து முத்து ஆச்சாரி கூறுகையில், எனது மருமகளை பிரசவத்திற்கு சேர்த்துவிட்டு நான் பூசாரியிடம் விஷயத்தை சொல்லி கொண்டிருந்தேன். அப்போது என் வீட்டில் பெண் வாரிசே இல்லை, என கூறினேன். அதற்கு பூசாரியோ, "கவலைப்படாதீங்கள், உங்கள் வீட்டில் அந்த அம்பாளே குழந்தையாக பிறப்பாள்" என்றார். சொல்லி முடித்ததும், மருத்துவமனையிலிருந்து எனக்கு போன் வந்தது. என் மருமகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்றார்.

அது போல் பூசாரி கூறுகையில், நான் இந்த கோயிலில் 4 முதல் 5 ஆண்டுகளாக பூஜை செய்து வந்தேன். ஆனால் இதுவரை அம்பாளின் இப்படி ஒரு காட்சியை பார்த்ததே இல்லை. இதுதான் முதல் முறை என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+