வீட்டில் நெய் தீபம் ஏற்படுத்தும் கோடி பலன்கள்.. அதென்ன 1 நாள், 1 மணி நேரம், 1 நெய் விளக்கு பரிகாரம்?
சென்னை: வீட்டில் நெய் தீபம் ஏற்றுவது சகல ஐஸ்வர்யங்களையும் தரும் என்பார்கள்.. கஷ்டங்களை நீக்கி மகிழ்ச்சியை பெருக்கவும், குடும்பத்திலுள்ள நிதி நெருக்கடியை விலக்கவும், அக்னி புராணத்தின்படி நெய் தீபம்தான் சிறந்தது என்பது முன்னோர்களின் வாக்காகும். அதேபோல, தர்மத்தின்படி வீட்டில் நெய் தீபம் ஏற்றுவதால் கோடி பலன்கள் கிடைக்கும். அந்தவகையில் நெய் தீபம் ஏற்றுவதால் உண்டாகும் நன்மைகள், பலன்கள் என்னென்ன? நெய் தீபத்தை ஏற்ற வேண்டியவர்கள் யார் யார்? பணவரவுக்கு எப்படி நெய்தீபம் ஏற்றலாம்? என்பதை பற்றியெல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நெய் தீபத்தில், கலைமகளான சரஸ்வதி தேவியும், தீபத்தின் சுடரில் லட்சுமி தேவியும், தீப வெப்பத்தில் பார்வதி தேவியும் இருப்பதாகவும், இதனால் நெய் தீபத்தை ஏற்றும்போது, 3 தேவிகளும் எழுந்தருளி கடாட்சம் தருவதாகவும் நம்பப்படுகிறது. எனவே, பரிகாரத்தை செய்வதற்கும் நெய் தீபம் பயன்படுகிறது.

தொழிலில் விருத்தி
உதாரணத்துக்கு சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால், அல்லது வேறுவகையான நிதி சிக்கல் என்றால், சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி பன்னிரண்டு முறை சுற்றி 48 நாட்களுக்கு 48 நெய் தீபத்தினை ஏற்றி வழிபட்டு வரவேண்டும்.. இதனால் தொழில் வழக்கு சாதகமாக வரும். வழக்குகளிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
பில்லி, சூனியம் பிரச்சனைகள் இருந்தால், 21 நாட்களுக்கு செவ்வாய்க்கிழமைகளில், வடக்கு திசையை நோக்கி நெய் தீபம் ஏற்றிவரலாம்..
நாகங்கள் பின்னிப்பிணைப்பு
கணவன் மனைவிக்குள் விரிசல் காணப்பட்டால், 2 நாகங்கள் பின்னிப்பிணைந்துள்ள நாகராஜ சிலைக்கு வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் அபிஷேகம் செய்து, நெய்தீபம் ஏற்றிவைத்து, இறுதியாக சம்பந்தப்பட்ட தம்பதியினர் பெயருக்கு அர்ச்சனை செய்தால் போதும், பிரிந்துள்ள தம்பதியினர் ஒன்றுசேர்வார்கள்.
இன்னல்கள், சிக்கல்கள், பிரச்சனைகள், கடன்கள் எதுவாக இருந்தாலும்சரி, கோயிலில் நெய்தீபம் ஏற்றிவைத்து, பிரகாரத்தை 3 முறை வலம் வந்தாலே பலன் கிடைக்கும்.. ஆனால், கோயிலில் நெய்தீபம் ஏற்றுவதாக இருந்தால், நண்பகல், அந்திப்பொழுதில், நெய் தீபம் ஏற்றலாம்.
காலை மாலை நேரங்கள்
வீட்டில் ஏற்றுவதாக இருந்தால், பிரம்மமுகூர்த்த நேரத்தில் ஏற்றலாம்.. இதனால் நேர்மறை தாக்கம் வீடெல்லாம் பரவுவதுடன், சுற்றுச்சூழலில் பாக்டீரியா, வைரஸ்களின் எண்ணிக்கையும் குறையும்.. காற்றும் சுத்தமாகி, ஆரோக்கியத்தை பெருக்குகிறது.. அல்லது மாலை 6 மணி நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவதும் சிறப்பாக சொல்லப்படுகிறது
பண்டிகை நாட்களாக இருந்தால் 5 திரிகளிலும், பிற நாட்களில் 2 திரிகளிலும் நெய்தீபம் ஏற்றலாம்..
வீட்டில் பசுநெய்யில் தீபம் ஏற்றி பிரார்த்திக்கும்போது அது நிறைவேறுகிறது.. மண் விளக்கில் பசு நெய்யை ஊற்றி தீபம் ஏற்றினால், அதிலிருந்து வெளியேறும் புகையானது பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்க செய்கிறது.. தோஷங்களையும், தீவினைகளையும் அகற்ற செய்கிறது..
பூஜையறை, சமையலறை
வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்குரிய ஹோரையான காலை 6 முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் 1 முதல் 2 மணிக்குள் நெய் தீபம் ஏற்றி, வீட்டின் பூஜையறை அல்லது சமையலறையில் வடக்கு பார்த்து ஏற்றி வைக்கலாம். இப்படி ஒரே ஒரு நெய் தீபத்தை வாரத்தில் ஒரு நாள், ஒரு மணி நேரம் வீட்டில் ஏற்றி வைப்பதன் மூலம், பணவரவையும் பெருக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications