மிதுன ராசிக்காரர்களுக்கு யோகம்.. வடக்கு பார்த்த வாசல் அதிர்ஷ்டம்.. இவங்களுக்கு மட்டும் செட் ஆகாது
சென்னை: பொதுவாக வீடு கட்டும்போது, அதன் வாசல் மிகவும் முக்கியம்.,. முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம். இதனால், வீட்டில் சுபீட்சம் நிறைந்திருப்பதுடன், ஆரோக்கியமும் பெருகும் என்பார்கள்.. ஆனால், தென்கிழக்கு, தென்மேற்கில் வாசல் அமைக்கக் கூடாது. அதுபோல, ஒவ்வொரு திசையை பார்த்து கட்டப்படும் வீடுகளுக்கு பலன்கள் உண்டு. அந்தவகையில் வடக்கு திசை பார்த்து இருக்கும் வீட்டினை பற்றி பார்ப்போம்.
பெரும்பாலும், கிழக்கு திசையுள்ள வீடுகளில் சூரிய ஒளி நேராக வந்துவிழும்.. சூரிய ஒளியில் வைட்டமின் D உள்ளதால், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் காக்கப்படும். கிழக்கு திசை என்பது சுக்கிர பகவானுக்குரிய திசை என்பதால், சுகபோக வாழ்க்கை குடும்பத்திலுள்ளவர்களுக்கு அமையும்.

தெற்கு திசை - ஆரோக்கியம்
தெற்கு திசை என்பது எமதர்மன் வசிக்கக்கூடிய இடமாகவும், செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட திசையாகவும் கருதப்படுகிறது.. தெற்கு திசையில் தலைவாசல் அமைந்தால், நீண்ட ஆயுள், ஆரோக்கியம் நிறைவாக இருக்கும், நோய் ஏற்படாது என்பார்கள்.
மேற்கு பார்த்த தலை வாசல் இருந்தால், ஜாதகத்தில் சனி பலமுள்ளதாகவோ அல்லது ராசி, லக்னம் சனியாகவோ இருக்க வேண்டும் என்பார்கள்.
அந்தவகையில், வடக்கு திசையில் தலைவாசல் வைப்பதால், புதன் மற்றும் குபேரனின் ஆசிர்வாதம் கிடைக்கும். வடக்கு திசையானது குபேரனுக்கு உகந்த திசையாகும்.. செல்வம், ஐஸ்வர்யத்தை வாரி வழங்கக்கூடியது புதன்பகவான் ஆவார். இதனால் குடும்பத்தில் செல்வம் பெருகும். வியாபாரம் செய்பவர்கள், சிறு தொழில் செய்பவர்கள், வடக்கு திசையில் தலைவாசல் அமைந்த வீட்டில் இருப்பதால், தொழில், செல்வம் விருத்தியடையும்.
வடக்கு பார்த்த வாசல்
வடக்கு பார்த்த வீட்டுக்கு, அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் சமையலறை இருக்கலாம்.. ஆனால் எக்காரணம் கொண்டும் வடகிழக்கு திசையில் சமையலறை வரவே கூடாது.. அப்படி அமைந்தால், அது குடும்ப ஒற்றுமை, ஆரோக்கியத்தையே குலைத்துவிடுமாம்.
வடக்கு பார்த்த வாசலுள்ள வீட்டில், பூஜையறையை வடகிழக்கு அல்லது வடமேற்கு மூலையில் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.. பூஜையறையின் நுழைவாயில் கிழக்கு அல்லது மேற்கு திசையில் இருக்க வேண்டும். கடவுள் சிலைகளையும், படங்களையும், கிழக்கு அல்லது மேற்கு நோக்கி வைக்கலாம்..
வடக்கு பகுதியில் உயரமான மரங்களை வளர்க்கக்கூடாது... அதற்கு பதிலாக தென்மேற்கு பகுதியில் மரங்களை வளர்க்கலாம்.. கழிப்பறை வடமேற்கு மூலையில் இருக்கும்படியும், தண்ணீர் டேங்க் தென்மேற்கு பகுதியில் இருக்கும்படியும் பார்த்து கொள்ள வேண்டும்.
எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம்
விருச்சிகம் ,கடகம் ,மீனம் போன்ற ராசியினரும் புனர்பூசம் சுவாதி நட்சத்திரக்காரர்கள் வடக்குப் பார்த்து தலைவாசல் அமைக்கலாம் அல்லது ஜென்ம நட்சத்திரமாக கொண்டவர்களும் வடக்கு திசை வாசலுள்ள வீட்டில் வாழ்வது அனுகூலமாகும்.
புதனின் ராசிகளான மிதுன ராசிக்கும், கன்னி ராசிக்கும் அதிகப்படியான அதிர்ஷ்டம் கிடைக்கும்.. அதேபோல, புதனின் நட்சத்திரமான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்களும் வடக்கு திசையை தேர்ந்தெடுக்கலாம். புதன் கன்னி ராசியைச் சேர்ந்தவர்களும் வடக்கு திசை வாசலை தேர்வு செய்யலாம்.. கடகம் விருச்சகம் மீனம் ராசியில் புதனின் நட்சத்திரங்கள் உள்ளதால், இவர்களும் வடக்கு திசை வாசலுள்ள வீட்டில் வசித்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
ஆனால், ஜாதகத்தில் புதன் பகவான் 6, 8, 12ம் இடத்தில் இருந்தால் மட்டும் வடக்கு பார்த்த வாசல்படி அவ்வளவு சிறந்ததாக அமையாது.. வடக்கு உட்பட எந்த திசையில் வீடு அமைந்தாலும், உழைத்தால் மட்டுமே உயர்வு கிடைக்கும் என்பதையும் மறுக்க முடியாது.












Click it and Unblock the Notifications