பழனி முருகன் கோவிலில் அதிசயம்.. அள்ள அள்ளத் தங்கம்.. கொட்டிக் கிடந்த வெள்ளி! பரவசமான பக்தர்கள்!
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் சித்திரை திருவிழா, சித்ரா பௌர்ணமி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கையில் ரொக்கமாக 2 கோடி 74 லட்சத்து 24 ஆயிரத்து 650 ரூபாய் கிடைத்திருக்கிறது. 571 கிராம் தங்கமும், 11,856 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் பக்தர்கள்.
தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கோவில்கள் இருக்கிறது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதைப் போல அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் அருள் பாலித்து வருகிறார்.
அந்த வகையில் முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ் பெற்றது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை தரிசனம் செய்கின்றனர்.

குறிப்பாக தைப்பூசம் பழனி மலை கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்காக கார்த்திகை மார்கழி மாதங்களில் விரதம் இருக்கும் முருக பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசிப்பார்கள். இதேபோல பங்குனி உத்திரம் உள்ளிட்ட முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் பழனி மலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைகடலென திரளும். மேலும் வெள்ளி, செவ்வாய், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பழனி மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகழ்பெற்ற பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. மேலும் சித்ரா பௌர்ணமி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பழனி முருகப் பெருமானை தரிசித்தனர் அவ்வாறு மலை கோயிலுக்கு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி, சேவல், தானியங்கள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துவார்கள்.
தொடர்ந்து ஒரு மாதத்திற்கு ஒருமுறை அல்லது உண்டியல் நிரம்பியவுடன் அவற்றை திறந்து எண்ணுவது வழக்கம். இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் உண்டியல்கள் நிரம்பியது. இதை அடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி, பணம் ஆகியவை மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டது. பின்னர் பணம், நாணயம் ஆகியவற்றை என்னும் பணியில் கோவில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஈடுபட்டனர்.
நேற்று நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக 2 கோடியே 74 லட்சத்து 24 ஆயிரத்து 650 ரூபாயும்
தங்கமாக 571 கிராம் வெள்ளியாக 11,856 கிராம் சிங்கப்பூர் மலேசியா இலங்கை இத்தாலி உள்ளிட்ட
வெளிநாட்டு கரன்சி 291 நோட்டுகள் கிடைக்கப்பெற்றது. மேலும் பக்தர்கள் தங்கம் வெள்ளியிலான வேல், தாலிச் செயின், தங்கக்காசு, சாமி சிலைகள், பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவ தானியங்கள், பட்டாடைகள், சேவல்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications