பல்லி மேலே விழுந்திருச்சா? பதற்றம் வேண்டாம்.. தோஷம் நீக்கும் தங்கப்பல்லி, வெள்ளி பல்லி தரிசனம்
சென்னை: பல்லி உங்கள் மேலே விழுந்தாலோ, பல்லியை தவறுதலாக மிதித்து பல்லி இறந்து விட்டாலோ தோஷம் வரும் என்று பதற்றப்பட வேண்டாம். பல்லி தோஷம் போக சில பரிகாரங்கள் உள்ளன.
நம்முடைய வீட்டில் நாம் நல்ல விஷயங்களை பற்றி பேசும்போது பல்லி கத்தினால் நல்ல சகுனம் என பெரியோர்கள் கூறுவார்கள். பல்லி நம் உடலின் மீது விழும் இடத்திற்கேற்ப தோஷங்கள் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. பல்லி நம்முடைய வீட்டில் இருப்பது மகாலட்சுமி அம்சம் நிறைந்தது என்று சொல்லப்படுகிறது.

பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும். பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை அதன் சில செயல்கள் பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் என்று பல்லி சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பல்லிகள் எப்படி வந்தன என்பது பற்றிய புராண கதை ஒன்று உள்ளது. ஸ்ரீ சிருங்கி பேரர் என்னும் முனிவரின் இரு மைந்தர்கள் கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் ஒரு நாள் பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வரச் சென்றனர். அவர்கள் கொண்டு வந்த தீர்த்தத்தில் பல்லிகள் இறந்து கிடந்ததை கண்ட கௌதம முனிவர் கடும் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்துவிட்டாராம். பின்னர், சிஷ்யர்கள் மனம் வருந்தி வேண்டிக்கொண்டதால் காஞ்சி சென்றால் உங்களுக்கு பாவ விமோசனம் உண்டு எனக் கூறினார் முனிவர்.
பிறகு அந்த சிஷ்யர்கள் இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு பெருமாளிடம் மோட்சம் வேண்டி கேட்டனர். அவர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்த வரதராஜ பெருமாள் உங்களின் ஆத்மா மட்டும் வைகுந்தம் செல்லும். உங்களின் சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்க என்னைத் தரிசிக்க வருபவர்கள் உங்களைத் தரிசித்தால் சகல தோஷம் நீங்கி ஷேமம் உண்டாகும் என்று கூறினாராம். சூரிய, சந்திரன் இதற்குச் சாட்சி என்று கூறி அவர்களுக்கு மோட்சம் அளித்தாராம்.
நம்முடைய முகத்தின் நெற்றி மீது பல்லி விழுவது நல்ல சகுணமாக பார்க்கப்படுகின்றது. நெற்றியின் இடது பகுதியில் விழுந்தால் கீர்த்தி கிட்டும் என்றும், வலது நெற்றியில் விழுந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகின்றது. மணிக்கட்டு இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும். மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை உண்டாகும். வீட்டில் நடந்து செல்லும் போது கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் ஏற்படும். கணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் பிரயாணம் செய்ய நேரிடும். மூக்கின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும். மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி உண்டாகும். பாதம் இடது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். பாதம் வலது பக்கம் பல்லி விழுந்தால் நோய் உண்டாகும்.
நம் உடலின் எந்த பாகத்தின் மீதும் பல்லி விழுந்தாலும் உடனே குளித்து விடுங்கள். வீட்டிலேயே விளக்கேற்றி சாமியை வழிபட்டு கெடுதல் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள். காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் உள்ள தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லியை தரிசித்தால் நம் மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோஷங்கள், கிரகண தோஷங்கள் அனைத்தும் விலகும். அதே போல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் உள்ள தங்கப்பல்லிகளை தரிசனம் செய்தால் பல்லி விழும் தோஷம் நீங்கும். அதே போல் பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷத்திற்கும் இக்கோவிலில் உள்ள பல்லி உருவங்களை தொட்டு வணங்கினால் அந்த தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications