முருகனை தேடி வந்து வணங்கிய சேவலும் மயிலும்.. சிலிர்த்த திருவண்ணாமலை பக்தர்கள்
திருவண்ணாமலை: சூரபத்மனை சம்ஹாரம் செய்த முருகப்பெருமான் சேவல் கொடியாகவும் மயில் வாகனமாகவும் மாற்றி தன்னுடன் வைத்துக்கொண்டார். திருவண்ணாமலையில் ஊர்வலத்திற்காக அலங்கரிக்கப்பட்டு இருந்த உற்சவர் முருகனைத் தேடி சேவலும் மயிலும் நாடி வந்து வணங்கியது அங்கிருந்த பக்தர்களை ஆச்சரியப்படுத்தியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 17 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்த தீபத் திருவிழாவின் 3- ஆம் நாளான நேற்று இரவு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு அண்ணாமலையார் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து வண்ண வண்ண மலர்களால் மாலைகள் தொடுக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து தீப தூப ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து ராஜகோபுரம் முன்புள்ள 16 கால் மண்டபத்தில் அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு கற்பூர தீபாராதனை நடைபெற்றது.
இதை தொடர்ந்து விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், முருகன் வெள்ளி மயில் வாகனத்திலும், அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் சிம்ம வாகனத்திலும், பராசக்தி அம்மன் அன்ன வாகனத்திலும் வலம் வந்தனர். சண்டிகேஸ்வரர் சிறிய வெள்ளி ரிஷப வாகனத்திலும் என பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
வெள்ளி மயில் வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த உற்சவர் முருகன் காலடியில் உயிரோடு இருந்த சேவல் ஒருபுறமும், மற்றொரு புறம் மயிலும் வந்து அமர்ந்து நீண்ட நேரம் வழிபட்டன. இதனை அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஆச்சரியப்படுத்தியது. பக்தி பரவசத்தில் கூடியிருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா.. கந்தனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டதோடு மயிலையும் சேவலையும் வீடியோ எடுத்தனர். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications