புரட்டாசி பவுர்ணமி கிரிவலம்.. திருவண்ணாமலை செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்
திருவண்ணாமலை: புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பயணிகளின் வசதிக்காக சென்னை உட்பட பல பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வேலூர் மார்க்கமாக 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பெளர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பெளர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பெளர்ணமி இன்று செப்டம்பர் 28 தேதி வியாழக்கிழமை மாலை 6.47 மணிக்கு தொடங்கி மறுநாள் 29ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. எனவே இன்று இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பவுர்ணமி கிரிவலமானது விடுமுறை தினத்தையொட்டி வருவதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணியில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என்பதால் அதற்கு ஏற்ப எல்லா ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 2 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 28ம் தேதி சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 12.05க்கு திருவண்ணாமலை சென்றடையும். 29ஆம் தேதி அதிகாலை 3.45க்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் ரயில், காலை 9.05க்கு சென்னை வந்தடையும். பெளர்ணமி கிரிவலத்துக்காக இயக்கப்படும் 2 சிறப்பு ரயில்களும் வேலூர் வழியாக திருவண்ணாமலை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications