வெல்லத்துடன் எள் கலந்து இதை செய்தாலே பெருமாள் ஆசி கிட்டுமே.. புரட்டாசி சனிக்கிழமையில் நெய் விளக்கு
சென்னை: சனி திசை, புதன் திசை நடப்பவர்கள் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி என சனியின் பிடியிலுள்ள ராசியை சேர்ந்தவர்கள் இன்று புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டு வருகின்றனர்.. இந்த சனிக்கிழமை விரதத்தினால், சகல தடைகள், சங்கடங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கையாகும் என்பதால் பெருமாள் கோயில்களுக்கு பக்தர்களுக்கு சென்று வழிபாடுகளை நடத்தி, அன்னதானமும் செய்து வருகின்றனர். நெய்விளக்கு தீபத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா?
ஒருவரின் ஜாதகத்தில் சனீஸ்வரன் சந்திரன் நிற்கும் இடம் ராசிக்கு 5ல் சஞ்சரிக்கும்போது, பஞ்சம சனியென்றும், 8ல் சஞ்சரிக்கும்போது அஷ்டமத்து சனியென்றும், 12ல், 1ல், 2ல் சஞ்சரிக்கும்போது ஏழரை சனியென்றும் சொல்வார்கள்..

இதுபோன்ற காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாகும். இதை சனிதோஷம் என்று சொல்வார்கள்.. இதற்கு புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் ஏழுமலையானுக்கு படையல் போட வேண்டும்..
பெருமாளுக்கு வழிபாடு
மஞ்சள் நிற ஆடை அணிந்து மண்பாத்திரத்திலிட்டு, படைத்து வழிபடும்போது, சனி தோஷம் உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும்.
அதேபோல சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு கோயில்களிலுள்ள சனீஸ்வர பகவானிற்கு எள் நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுவையும் வழிபடவேண்டும்.
புரட்டாசி முதல் சனிக்கிழமை
சனி பகவான் புரட்டாசி மாத சனிக்கிழமையில் அவதரித்தார் என்பதால், சனியால் பாதிப்புள்ளவர்கள், புரட்டாசி சனியில் விரதமிருப்பார்கள்.. புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் கடைபிடிக்க முடியாவிட்டாலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும்.. புரட்டாசி மாதத்தில், புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருப்போருக்கு, சனி பகவான் அருள் கிடைக்கும்.. சனியின் தொல்லையிலிருந்தும் விடுபடலாம்..
எனவேதான், புரட்டாசி சனிக்கிழமைகளில் எள், வெல்லத்தை சாப்பாட்டுடன் சோ்த்து பிசைந்து காகங்களுக்கு பிசைந்து வைத்து வைப்பதாலும், அன்னதானம் செய்வதாலும், எள்ளுப் பொடி சாதம் செய்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து, அதனை பலருக்கும் வழங்குவதாலும், பெரும்பலனை அடையலாம் என்பார்கள்.
அகல் விளக்கு, மாவிளக்கு பூஜை
அந்தவகையில் இன்றைய தினம் புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால், பக்தர்கள் காலையிலேயே வழிபாடுகளில் இறங்கிவிட்டனர்.. வீடுகளில் தங்களது பூஜையறையை சுத்தம் செய்து கோலமிட்டு, துளசி, தாமரை பூக்களை கொண்டு அர்ச்சனை செய்தனர்.. புதிய அகல் விளக்கில், தாமரைத்தண்டு திாி போட்டு, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பெருமாள் படங்களுக்கு 5 முக குத்து விளக்கேற்றியும் பூஜித்து வருகிறார்கள்..
சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை பெருமாளுக்கு நிவேதனமாக படைத்து வருகிறார்கள்.. அதேபோல புளியோதரை நைவேத்தியம் செய்து, அதனை பக்தர்களுக்கும் வழங்கி வருகின்றனர்.
பச்சரிசி மாவில் வெல்லப்பாகு, ஏலக்காய் சேர்த்து நெய்யில் மாவிளக்கு வைத்து வழிபடும்போது, புனர்பூ தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கையாகும் என்பதால், திருமணமாகாதவர்களும் இன்றைய நாளில் மாவிளக்கு பூஜைகளை நடத்தி வருகிறார்கள்.
நெய் தீபம் பலன்கள்
அதேபோல கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே வெங்கடாசலபதி திருவுருவப் படத்தை வைத்து, துளசி தளங்களால் அர்ச்சித்து வருகின்றனர்.. நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பார்கள்.. இதற்காக, பச்சரிசி மாவை சலித்து, அந்த மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்றி, புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை வணங்கி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications