Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீராத கடன் பிரச்சினையை தீர்க்கும்.. நாள்பட்ட நோய் குணமாகும்.. ருண விமோசன பிரதோஷத்தின் சிறப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதோஷம் வேளையில் செய்யும் வழிபாடு கிரகதோஷங்களை நீக்கி, நல்லருளைப் பெற்றுத்தரும். இந்த நாளில் சிவபுராணம், திருவாசகம், தேவாரம், திருப்பல்லாண்டு முதலிய தமிழ் வேதங்களைப் பாராயணம் செய்தல் மிகவும் சிறப்பு. ருண விமோசன பிரதோஷ தினமான இன்று சிவ ஆலயம் சென்று வழிபட்டால் கடன் பிரச்சினை நீங்கும் தீராத நோய்களும் குணமடையும் என்பது நம்பிக்கை.

செவ்வாய்க்கிழமையோடு திரயோதசி திதியோடு கூடிவருகிறது. பொதுவாக செவ்வாய் பிரதோஷத்தை 'ருண ரோக விமோசன பிரதோஷம்' என்பார்கள். அதாவது நோய் மற்றும் கடன் பிரச்னைக்குத் தீர்வாக அமைவது. எனவே, இந்த நல்ல நாளில் குளித்து திருநீறு பூசி சிவபுராணம் பாராயணம் செய்ய வேண்டும். உடலால் இயன்றவர்கள் உபவாசம் இருக்கலாம். முடியாதவர்கள் பழங்கள் மற்றும் திரவ உணவுகளை எடுத்துக்கொண்டு சிவ நாமம் ஜபித்தபடி இருக்கலாம்.

Runa Vimochana Pradosha Viratham Nandhi Dharisanam for Clearing All Loans and Debts cure disease

பிரதோஷங்கள் பல உண்டு. தின பிரதோஷம், பட்ச பிரதோஷம், சனி மகா பிரதோஷம் என பலவகைப் பிரதோஷங்கள் உண்டு. அமாவாசை, பவுர்ணமியில் இருந்து கணக்கிட்டு 13வது நாள் திரயோதசி திதி வரும் நாளில் பிரதோஷ நேரம் சிறப்பானது. தினமும் சூரியன் மறையும் மாலை வேளையில் 4.30 முதல் 6 மணிவரையிலான நேரத்தைப் பிரதோஷ நேரமாகும். இந்த நேரத்தில் நாம் செய்யும் வழிபாடுகளும் வேண்டுதல்களும் விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

பொதுவாகவே பிரதோஷ வழிபாடு பிரச்னைகளைத் தீர்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நாளில் பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கும் நந்தியம் பெருமானுக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை தரிசனம் செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எந்த நாளில் பிரதோஷம் வந்தால் என்ன பலன் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதனை சிவனடியார்கள் தங்களின் முகநூல் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதோஷ வேளை சந்திரன் மற்றும் சனியின் ஓரையில் அமையும். இந்நாளில் செய்யக்கூடிய பிரதோஷ பூஜையினால் நமக்கு சனி பகவானின் அனுக்கிரமும் சூரியபகவானின் அருளும் கிடைக்கும். பிரச்னைகளில் சிக்கித் தவிப்பவர்கள் கட்டாயம் வழிபட வேண்டிய பிரதோஷம் ஞாயிறு பிரதோஷம்.

திங்கட்கிழமை வரும் பிரதோஷ வேளையானது செவ்வாய் மற்றும் சூரிய ஓரையில் அமையும். ஆகவே, திங்கட்கிழமைகளில் வரும் பிரதோஷ வேளையில் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சூரிய பகவானின் அருளைப் பெற முடியும். மேலும் இந்தக் கிழமைக்கு உரிய கிரகம் சந்திரன். சந்திரன் மனோகாரகன். எனவே திங்கட்கிழமைகளில் பிரதோஷ வேளையில் பிறை சூடிய பெருமானை வழிபடுவதன் மூலம் சந்திரனின் அருளைப் பெறலாம். மனம் சார்ந்த சிக்கல்கள் உள்ளவர்கள், மனவலிமை வேண்டுபவர்கள் கட்டாயம் வழிபட வேண்டிய பிரதோஷம் திங்கள்கிழமை பிரதோஷம்.

செவ்வாய்கிழமை பிரதோஷ வேளை புதன் மற்றும் சந்திரனின் ஓரையில் அமையும். அந்த வேளையில் சிவ வழிபாடு செய்தால் முருகப்பெருமானின் அருள் நமக்குக் கிடைக்கும். ஜாதகத்தில் செவ்வாய் பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் பாதகங்கள் நீங்கும். செவ்வாயின் அருள் பரிபூரணமாகக் கிடைப்பதால் நோய் மற்றும் கடன் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

புதன்கிழமை பிரதோஷ வேளை குரு மற்றும் செவ்வாய் ஓரையில் அமையும். எனவே இந்த நாளில் செய்யும் பிரதோஷ கால வழிபாடு ஜாதகத்தில் குருவின் நிலையால் ஏற்படும் நற்பலன்களைக் கூடுதலாக்கும். கல்வி, கலை, ஞானம் ஆகியவற்றில் மேன்மை உண்டாக்கும்.

வியாழக்கிழமை பிரதோஷம் வந்தால், அந்த நாளின் பிரதோஷ வேளை சுக்கிரன் மற்றும் புதன் ஓரையில் அமையும். இன்று பிரதோஷ பூஜை செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். மாணவர்கள் இந்தப் பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்தால் கணிதத்தில் சிறப்பான முறையில் நிபுணத்துவம் பெற முடியும் என்கிறார்கள் அடியவர்கள்.வெள்ளிக்கிழமையில் பிரதோஷ வழிபாடு நடைபெறும் வேளை சனி மற்றும் குரு ஓரையில் அமையும். இது காரிய வெற்றியைக் கொடுக்கும். குருபகவான் அருளால் பொன்பொருள் சேரும்.

சனிக்கிழமையுடன் திரயோதசி திதி இணைந்து வரும் நாளையே சனி மகா பிரதோஷம் என்று சிறப்பித்துக் கூறுகிறோம். சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது என்று சொல்வார்கள். ஆஞ்சநேயருக்கும் மிகவும் உகந்த தினம் சனிக்கிழமையே. இந்த நாளில் பிரதோஷ வேளையானது சூரியன் மற்றும் சுக்கிர ஓரையில் அமையும். இந்த நேரம் வெற்றி தரும் முகூர்த்தத்தைக் குறிக்கிற ஒரு நேரமாகும். எனவே இந்த வேளையில் சிவவழிபாடு செய்வது மிகவும் விசேஷம். இந்த வேளையில் செய்யும் வழிபாடு கிரகதோஷங்கள் நீங்கும்.

Runa Vimochana Pradosha Viratham Nandhi Dharisanam for Clearing All Loans and Debts cure disease

ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஸர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருண விமோசன பிரதோஷம் ஆகும். ருணம் என்பது கடனை குறிக்க கூடியது. இந்நாளில் நந்தியெம்பெருமானை வேண்டி வணங்கி அருகம்புல் மாலைசாற்றி, நெய் தீபம் ஏற்றி,பின் பிரதோஷ வேளையில் சிவபெருமானை பிரதோஷ மூர்த்தியாய் தரிசிப்பதன் மூலம் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுதலை பெறலாம். சிவன் அபிஷேகப் பிரியன் என்பதால் பிரதோஷம் தினத்தில் கறந்த பசும்பால் கொடுத்து வழிபட வேண்டும். இளநீர் வாங்கித் தரலாம். வில்வ இலை வாங்கிக் தரலாம்.

செவ்வாய் கிழமைகளிலும் வரும் பிரதோஷம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு ஏற்ற காலம் ஆகும். செவ்வாயின் உக்ர ரூபத்தை கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு பாணக நிவேதனம் செய்தாலும் கடன் விரைவில் அடையும். செங்கல்பட்டு அருகில் சிங்கபெருமாள் கோயில், பரிக்கல், திருச்சி ஸ்ரீ ரங்கம் காட்டழகிய சிங்கர் ஆகிய ஊர்களில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தியை வழிபட அனைத்து கடன்களும் தீரும். விநாயகரை வழிபட கடன் தீரும் ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட தீராத கடன் தீரும். கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெரும்பங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதை விநாயகரை வணங்கலாம். செவ்வாய்கிழமைகளில் விநாயகருக்கு வெற்றிலை மாலை சாற்ற கடன் அடையும். எனவே சிறப்பு வாய்ந்த இந்த நல்ல நாளில் மாலை நேரத்தில் சிவ ஆலயம் சென்று சிவ தரிசனம் செய்து வர நோய், கடன் பிரச்சினைகள் படிப்படியாக மறையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+