சனி பெயர்ச்சி: நீதிமான் சனி பகவான் யாரை பிடிப்பார்.. லஞ்சம் கொடுத்து தப்ப முடியாது!.. சனி பயோடேட்டா
சென்னை: சனி பகவான் நீதிமான் தவறு செய்பவர்களுக்கு சரியான தண்டனையை கொடுப்பார். சனிக்கு யாரும் எந்த லஞ்சம் கொடுத்தும் தப்பிக்க முடியாது. சனிபகவான் யாரை பிடிப்பார்? சனி பிடித்தால் என்னென்ன நடக்கும்? பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
ஈஸ்வரப்பட்டம் பெற்றவர் சனீஸ்வரன். அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். எனவேதான் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு. சனிபகவானுக்கு பிடித்த தானியம் எள். அந்த எள்ளில் இருந்து எடுக்கப்பட்ட நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அவரை மனதார வேண்டினால் நன்மையே நடக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் தொழில் காரகன் கர்ம காரகன் ஆன சனி பகவான் ஆட்சி பெற்றால் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் கிடைக்கும். கடும் உழைப்பினால் உயர்ந்த இடத்திற்கு வருவார். நிலையான சொத்துக்கள், நிலம், வீடு, வாகனம் யோகம் தேடி வரும். அவர் தீர்க்காயுள் கொண்டவர். நவகிரகங்களில் சனியைப் பார்த்து பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
சனி பார்க்கும் இடம் பாழ் என்பார்கள். சனிபகவான் பார்வை அத்தனை கொடூரமானது என்பார்கள். சனிபகவானால் சிவபெருமானும், ராவணனும் பாதிக்கப்பட்டிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. ஒருகால் முடமான சனிபகவான் மெதுவாக நகர்ந்து செல்வார் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இப்போது சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார்.
சனிபகவானின் பயோடேட்டா:
நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி.
பால் - அலி
நிறம் - கறுப்பு
தேவதை - யமன்
பிரத்தியதி தேவதை -பிரஜாபதி
இரத்தினம் - நீலக்கல்
மலர் - கருங்குவளை
குணம் - குருரன்
ஆசன வடிவம் - வில்
தேசம் - சௌராஷ்டிரம்
சமித்து - வன்னி
திக்கு - மேற்கு
சுவை - கசப்பு
உலோகம் - இரும்பு
வாகனம் - காகம்
பிணி - வாதம்,வாய்வு
தானியம் - எள்
காரகன் - ஆயுள்
ஆட்சி - மகரம், கும்பம்
உச்சம் - துலாம்
நீசம் - மேஷம்
மூலத்திரிகோணம் - கும்பம்
நட்பு - புதன், சுக்கிரன், இராகு, கேது
பகை - சூரியன், சந்திரன், செவ்வாய்
சமம் - வியாழன் உபகிரகம் - குளிகன்
உறுப்பு - தொடை
திசை காலம் - 19 வருடங்கள்
கோசார காலம் - இரண்டரை வருடம்
உலர்த்தாத துணியை உடுத்துபவர்களையும் ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தாலும் சனிக்கு அவர்கள் மீது பாசம் அதிகம். முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களை பாத்தால் சனி மிகவும் பிடிக்கும். குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனிக்கு பிடிக்கும்.
இருள் சூழ்ந்த இடங்கள், அமங்கலமான சொற்கள் பேசுபவர்கள், சுத்தம் இல்லாத இடங்கள், மண்ணாசை, பொன்னாசை கொண்டவர்கள், அடுத்தவர்களின் மனைவியை ஆள நினைக்கும் சண்டாளர்களைக் கண்டால் சனி பிடித்து ஆட்டி வைப்பார். முக்கியமாக யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. சுத்தம் செய்யாத வீட்டிலும் நித்தம் அழுகுரல் கேட்கும் வீட்டிலும் சனி சந்தோஷமாக தங்கி விடுவார். அந்த வீட்டில் வசிப்பவர்களை ஆட்டி படைத்துவிடுவார் சனிபகவான். சுத்தமாகவும் நேர்மையாகவும் இருப்பவர்களை சனிபகவான் பிடிக்க மாட்டார்.
சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சனி மந்திரம் கூறி வழிபடலாம்.
நீலாஞ்ஜன ஸமா பாஸம்
ரவிபுத்ரம் யமாக் ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்சரம்
பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும். சனி ஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.
சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வணங்கலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது சிறப்பு. சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, 8 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம். ஏழைகளுக்கு, குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம். இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்களுக்கு தானம் செய்ய சனி பகவான் மகிழ்ச்சி அடைவார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications