சனிக்கிழமை இந்த கலர் அணியாதீங்க! சனி பகவான் அருள் பெற உதவும் தீபம்! சனிக்கிழமைகளில் செய்ய வேண்டியது?
சென்னை: நீதியின் கடவுளான சனி பகவானின் நாள்தான், சனிக்கிழமை என்கிறார்கள்.. சனி பகவான் ஒவ்வொருவரின் செயல்களின் அடிப்படையிலும், அவர்களுக்கு சரியான பலாபலனை தந்து வருகிறார்.. எனவே, சனிபகவானின் அருள் இருந்தால் மட்டுமே, பலனை பெற முடியும்.. இதற்காகவே, சனிக்கிழமைகளில் சில செயல்களை செய்யக்கூடாது என்று முன்னோர்கள் வலியுறுத்துகிறார்கள். அவைகளில் ஒருசிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.
இரும்பு பொருட்கள் சனிபகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும்.. எனவே, சனிக்கிழமையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருளை வாங்கவே கூடாது என்பார்கள்..

அப்படி வாங்கினால், குடும்ப உறுப்பினர்களிடைய மோதல்கள், தகராறுகள் உருவாகும். அதேசமயம், இரும்பு பொருளை பிறருக்கு சனிக்கிழமைகளில் தானமாக தந்தால், கடன் தொல்லையிலிருந்து மெல்ல விடுபடலாம்.
அதேபோல, சனிக்கிழமைகளில் எண்ணெய்யை கடையிலிருந்து வாங்கக்கூடாது.. எண்ணெய் தீருவதுபோல இருந்தால் முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.. அதேசமயம், சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளித்து குளித்தால்,துஷ்டங்கள், தோஷங்கள் விலகிவிடும். எண்ணெய் என்றில்லை, வீட்டை சுத்தம் செய்யக் கூடிய பொருட்களை சனிக்கிழமையில் வாங்கக்கூடாது.
கல் உப்பு ஜாடி
அதேபோல, கல் உப்பு வாங்குவதானால், அதையும் சனிக்கிழமைகளில் தவிர்த்துவிடவேண்டும். அப்படி வாங்கினால், குடும்பத்தில் பிரிவு ஏற்படும் என்பார்கள்.. கல் உப்பு வாங்க வேண்டுமானால், வெள்ளிக் கிழமைகளில் வாங்கலாம்.. மகாலட்சுமியின் அம்சமான கல் உப்பு, எப்போதுமே காலியாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். சிறிது கல் உப்பு, பூஜையறையில் வைக்கலாம்.. நிலைவாசலிலும் ஒரு கிண்ணத்தில் போட்டு வைக்கலாம்.
சனிக்கிழமைகளில் எள் விதைகளையும் வாங்கக்கூடாது.. அதேசமயம் எள் எண்ணெய்விட்டு, சனி பகவானுக்கு தீபம் ஏற்றினால் சகல செல்வாக்கும் அதிகரிக்குமாம். சனிக்கிழமைகளில், சனிபகவானை மகிழ்விக்க கடுகு எண்ணெய்க்கொண்டு தீபம் ஏற்றுவது நல்லது.
சுத்தமான செருப்புகள்
சனிக்கிழமையன்று, சுத்தமான செருப்புகளை பிறருக்கு தானம் செய்தால், சனி தோஷங்கள் நீங்கும்.. ஆனால் சனிக்கிழமைகளில், யார் தந்தாலும் செருப்புகளை மட்டும் பரிசாக எடுத்துக் கொள்ளக்கூடாது.. அப்படி பரிசாக பெற்றால், எதிர்மறை சக்திகள் வீட்டிற்குள் நுழைந்துவிடுமாம்..
சனிக்கிழமைகளில் கிழக்கு அல்லது வடக்கு திசையில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால், இந்த திசைகளில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. மற்றபடி அதை தவிர்த்துவிடுவது நல்லது. தேவையின்றி வடக்கு திசையில் செல்லும்போது, பிரச்சனைகள் சூழலாம்.. குடும்ப ஆரோக்கியமும் பாதிக்கலாம்.
சமையல் மாவு பொருட்கள்
அதேபோல, சமையலுக்கு பயன்படுத்தும் மாவு பொருட்களையும் சனிக்கிழமைகளில் வாங்குவதை தவிர்க்க சொல்கிறார்கள்.. மாவுப்பொருளை அரைப்பதையும் தவிர்ப்பது கூடுதல் நன்மை தரும்.. சனிக்கிழமையில் எக்காரணம் கொண்டும் மாவு பொருட்களை காசு கொடுத்து வாங்க கூடாது இது காரிய தடங்கலை உண்டுபண்ணிவிடும்.
கத்தி உள்ளிட்ட கூர்மையான பொருட்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சனிக்கிழமைகளில் வாங்கக்கூடாது. இதுவும் தீராத துன்பமும் குடும்பத்தில் பிரச்சனைகளும் கொண்டுவந்துவிட்டுவிடும்.
உரிய நிறம் - தவிர்க்க வேண்டிய நிறம்
அதேபோல சனிக்கிழமையன்று கருப்பு நிறம் அணிந்தால் சனிபகவானின் அருள் கிடைக்கும். ஜாதகத்தில் சனி தோஷம் அல்லது ஏழரை சனி உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட கருப்பு அணியலாம்.. இந்த கருப்பு நிறம் சனி பகவானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. நீலநிறமும் அணியலாம். அல்லது சனிக்கிழமைகளில் ஒரு சிறிய நீலம் அல்லது கருப்பு துணியை பர்ஸில் போட்டு வைப்பது நல்லது.
ஆனால் எக்காரணம் கொண்டும் சனிக்கிழமைகளில் சிவப்பு நிற ஆடையை அணிய கூடாது.. சிகப்பு நிற சம்பந்தப்பட்ட பொருட்களையும் வாங்கக்கூடாது. காரணம், சிவப்பு நிறம் செவ்வாய் கிரகத்தின் நிறமாக கருதப்படுகிறது. எப்போதுமே செவ்வாய்க்கும் சனிக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை.. எதிரெதிர் கிரகம் என்பதால், சனிக்கிழமைகளில் செவ்வாய் நிறத்தை தவிர்க்க சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications