ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி.. 23ல் சொர்க்கவாசல் திறப்பு.. தயாராகும் திருச்சி மாவட்டம்
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பிரசித்தி பெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் 12ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்க உள்ளது. 23ஆம் தேதியன்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட உள்ளதால் பக்தர்கள வசதிக்காக தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மகாவிஷ்ணுவின் 108 வைணவ தளங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.

இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பா் 12ஆம் தேதி தொடங்கி ஜனவரி 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் முக்கிய நிகழ்வாக பரமபதவாசல் திறப்பு வரும் 23ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. இந்த விழா மிகச்சிறப்பாக நடைபெற அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்கூட்டத்தில், மாநகரக் காவல் ஆணையா் காமினி, மாநகரக் காவல் துணை ஆணையா் அன்பு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சா.சரண்யா, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையா் மாரியப்பன், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பல்வேறுதுறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் , ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி திருவிழா டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கி ஜனவரி ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் முக்கிய நிகழ்வாக பரமபதவாசல் திறப்பு வரும் 23ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. இந்த விழா மிகச்சிறப்பாக நடைபெற அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
குறிப்பாக கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி சார்பில், ஸ்ரீரங்கம் பேருந்துகள் நிற்குமிடத்தில் பொதுமக்கள் பேருந்துகளில் வசதியாக ஏறவும், இறங்கவும் தடுப்புகள் அமைக்க வேண்டும். திருக்கோயில் சுற்றுப்புறப் பகுதிகள் மற்றும் ஸ்ரீரங்கம் நகரம் முழுவதும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதுடன், விழா நாட்களில் 24 மணிநேரமும் குடிநீர் வழங்க வேண்டும். ஆங்காங்கே தற்காலிக குடிநீர்த் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
விழா நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்கவும், மின்பழுது ஏற்பட்டால் உடனே நிவர்த்தி செய்ய தேவையான பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருத்தல் ஆகியவற்றில் மின்வாரியத்தினர் உரிய கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக மாநகராட்சி பள்ளிகள் ஒதுக்கீடு செய்து தரப்படும்.
இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம் மற்றும் 24 மணி நேர மருத்துவ முகாம்களும் நடைபெறும். அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் மற்றும் மருத்துவ பணியாளா்கள் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் உடன் தயாா் நிலையில் இருத்தல் வேண்டும். பக்தா்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அலுவலா்கள் செய்து தர வேண்டும். அந்தந்த துறையினருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்தார்.
பரந்தாமனின் திருவடிகளை அடையச் செய்து, நித்திய வைகுண்டவாசத்தை அளிக்கிறது. மது கைடபர்களின் வேண்டிக்கொண்டபடி, இந்த விரதத்தினை மேற்கொள்ளும் எல்லா அடியவர்களுக்கும் பரந்தாமன் சொர்க்க வாசலை திறந்து வைகுண்ட பதவியை அளிக்கிறார் என்பது ஐதீகம்.
பெருமாளை எண்ணி இந்த விரதம் இருக்க விரும்புபவர்கள், ஏகாதசிக்கு முந்தின நாளான தசமியன்று விரதம் தொடங்க வேண்டும். அந்த நாளில் ஒரு வேளை சாப்பிடலாம் என்கின்றன ஆன்மிக நூல்கள். உபவாசம் மட்டுமின்றி ஏகாதசி தினத்தின் இரவு முழுக்கவும் திருமாலின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும். ராமாயணம், பாரதம், கீதை போன்றவைகளைப் படிக்கலாம். உபன்யாசம், திருமால் நாமாவளிகளை கேட்கவும் செய்யலாம். இரவு முழுக்க எல்லா இந்திரியங்களும் பகவானின் அனுபவங்களில் திளைக்க வேண்டும் என்பதே இந்த வைகுண்ட ஏகாதசி விரதத்தின் நோக்கம்.
இந்த நாளில் முழுக்க முழுக்க தூங்கவே கூடாது என்பது முக்கிய விதி. ஏகாதசி அன்று இரவில் விஷ்ணு கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபட வேண்டும். முக்கியமாக அன்றைய தினம் மட்டுமே திறக்கப்படும் சொர்க்க வாசலைக் கடந்து பெருமாளோடு பரமபதத்தினை அடைவது சிறப்பானது.
ஸ்ரீரங்கத்தில் டிசம்பர் 12ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது, பன்னிரண்டாம் தேதி பகல்பத்து விழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து பகல் 10 விழாவின் பத்தாம் திருநாளான மோகினி அலங்காரம் 22 ஆம் தேதியும் நடைபெறும். இராபத்து திருவிழாவின் முதல் நாளான வைகுண்ட ஏகாதசி எனப்படும் பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 23ம் தேதி அதிகாலை 4மணிக்கு நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் இனிதே நிறைவடையும்
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications