ஸ்ரீவில்லிபுத்தூர் டூ திருப்பதி செல்லும்.. ஆண்டாளின் மங்கலப் பொருட்கள்.. என்னென்ன தெரியுமா?
ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதியில் கோலாகலமாக தொடங்கியுள்ள பிரம்மோற்சவ விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை நடைபெறும் கருட சேவையின்போது ஏழுமலையானுக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட பொருட்கள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
திருமலை திருப்பதியில் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து வழிபடுகின்றனர். பண்டிகைக் காலங்களில், விடுமுறைக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பிரம்மோற்சவம் தொடங்கியுள்ள நிலையில் வண்ண விளக்குகள், தோரணங்களால் விழாக்கோலத்தில் ஜொலிக்கிறது.

அக்டோபர் 12 ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறவுள்ளது. பிரம்மோற்சவ கொடியேற்றத்தை தொடர்ந்து ஆந்திர அரசு சார்பில் அம்மாநில முல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதி சமேதராக பட்டு வஸ்திரத்தை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கினார். முதல்வருக்கு தேவஸ்தான அர்ச்சகர்கள் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள மூலவர் வடபத்ரசயனர் எனும் பெரிய பெருமாளுக்கு தினந்தோறும் பூஜை செய்யப்படும். இந்த வழிபாட்டின்போது ஆண்டாள் சூடிய மாலையையே பெருமாள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதேபோல, மதுரையிலும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா, ஶ்ரீரங்கம் ரங்கநாதர் சித்திரை தேரோட்டம் பெருமாளுக்கு ஆண்டாளின் மங்களப் பொருள்கள் அனுப்பப்படும்
திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவத்தில் கருட சேவையின்போத ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்களப் பொருட்கள் பெருமாளுக்கு அணிவிப்பதற்காக அனுப்பிவைக்கப்படுவது வழக்கம். இதற்கு ஆண்டாளுக்கு மறு சீர் கொடுக்கும் வகையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், கள்ளழகர் உடுத்தி கலைந்த பட்டு வஸ்திரங்கள் ஆண்டாள் உடுத்துவதற்காக ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதேபோல, ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தன்று அணிவதற்காக திருப்பதி ஏழுமலையான் அணிந்து கலைந்த பட்டு வஸ்திரம் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு ஆண்டாளுக்காக அனுப்பிவைக்கப்படும். அதன்படி, நடப்பு ஆண்டு பிரம்மற்சோவ விழாவில் மூலவரான வெங்கடேச பெருமாளும், உற்சவர் மலையப்ப சுவாமியும் அணிவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாளின் பூமாலை, கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருமலை திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) அன்று மலையப்ப சுவாமி மோகன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார். அன்றைய தினம் மாலை கருட சேவையின்போது ஆண்டாளின் பூ மாலை அணிந்துகொண்டு மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தரவுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகப்பெரிய பூ மாலை தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், ஆண்டாள் அணிந்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி ஆகியவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெருமாளுக்காக திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications