Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடீஸ்வர யோகம் தரும் சுக்கிர ஓரை பரிகாரம்..வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கினால் இத்தனை நன்மைகளா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் கனவு எல்லோருக்குமே இருக்கும். கோடீஸ்வர யோகம் ஜாதகத்தில் இருந்தாலும் நாம் அதற்காக செய்யும் முயற்சிதான் நம்மை முன்னோக்கி நகர்த்தும். நாம் முற்பிறவியில் செய்த புண்ணியங்கள் அதற்கான பலனை இப்பிறவியில் கொண்டு வந்து கொடுக்கும். நம்முடைய வீட்டில் நாம் செய்யக்கூடிய எளிய பரிகாரங்களும் செல்வ வளத்தை அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை நாளில் சுக்கிர ஹோரையில் செய்யும் பரிகாரம் கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் என ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது.

செல்வம் சேரும் இடத்தில்தான் சேரும். செல்வத்தை ஈர்க்க சில வழிகள் உள்ளன. பசுவும், வெண் புறாக்களும், சில உணவுப்பொருட்களும், வாசனை பொருட்களும் செல்வத்தை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குபேரனை ஈர்க்க என்ன செய்ய வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர் இதை செய்தால் குபேரன் அருள் எளிதாக கிடைக்கும்.

Sukra horai Parikaram: Kodeeswara yogam Tharum Kal Uppu Parikaram in Tamil

தினசரியும் ஹோரை பார்த்து செய்யும் காரியம் வெற்றியை கொடுக்கும். குறிப்பிட்ட ஹோரையில் செய்யும் நற்காரியங்கள் வெற்றியை தரும். ஹோரை என்பது ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய நேரம். குறிப்பிட்ட ஹோரை நேரத்தில் பூஜைகளும் வழிபாடுகளும் மேற்கொண்டால், நற்பலன்களைப் பெறலாம் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்று சொல்கிறோம். எனவே, சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த வெள்ளிக்கிழமையில், சுக்கிர ஹோரை நேரத்தில், நாம் செய்யும் பூஜைகள், வழிபாடுகள், தான தர்மங்கள் நமக்கு அதிக நன்மைகளை கொடுக்கும்.

வெள்ளிக்கிழமையில் காலை 6 மணிக்கு சுக்கிர ஹோரை ஆரம்பிக்கும். இதையடுத்து மதியம் ஒரு மணியில் இருந்து 2 மணி வரைக்கும் சுக்கிர ஹோரை. இதன்பின்னர், இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை சுக்கிர ஹோரை. மதியம் ஒரு மணியில் இருந்து 2 மணிக்குள், விளக்கேற்றி நம்முடைய பிரார்த்தனைகளைச் செய்வது அதிக மகத்துவம் கொண்டது. காலையில் விளக்கேற்றினாலும் மதியத்தில் விளக்கேற்றி வழிபடுவதற்கு மும்மடங்கு பலன்கள் உள்ளன. அதேபோல், வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரை நேரமான இரவு 8 மணி முதல் 9 மணி பூஜை அறையில் அமர்ந்து நமக்கு என்ன தேவையோ அதை வேண்டி பிரார்த்தனை செய்தால், எண்ணியது நடக்கும் என்பது ஐதீகம்.

முக்கியமாக, கடன் பிரச்சினையில் தவிப்பவர்கள், கடன் கொடுத்துவிட்டு, திரும்பி வரவில்லையே என்று கலங்குபவர்கள், தொழிலில் லாபம் வரவேண்டுமே என்று எதிர்பார்ப்பவர்கள், வியாபாரம் விருத்தி அடையாமல் தேக்கநிலையில் இருக்கிறதே என கைபிசைந்து வருந்துபவர்கள், வெள்ளிக்கிழமையன்று, சுக்கிர ஹோரையில் பூஜையறையில் விளக்கேற்றி மகாலட்சுமியிடமும் பெருமாளிடமும் வேண்டிக்கொண்டால் கடன் பிரச்சினை நீங்கும். கொடுத்த கடன் வசூலாகும்.

கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம் நிறைந்தது. பாற்கடலில் இருந்துதான் மகாலட்சுமி தோன்றினார். எனவே வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கினால் செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் சுக்கிர ஓரை நேரத்தில் கல் உப்பு வாங்குவது செல்வ வளத்தை அதிகரிக்கும். கல் உப்பு வாங்கி பூஜை அறையில் வைத்து வணங்கி ஒரு டப்பாவில் கொட்டி வைக்க வேண்டும். அதில் 5 ரூபாய் நாணயத்தை போட்டு வைக்கலாம். தவறியும் கூட சனிக்கிழமை உப்பு வாங்கக் கூடாது. அப்படி சனிக்கிழமை உப்பு வாங்கினால் தொழில் வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும்.

வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வாங்கிக் கொடுக்க நமக்கு வருமானம் அதிகரிக்கும். பச்சைவளையலை வாங்கி பெருமாள் கோவிலில் தாயாருக்கு கொடுக்க பணம் வரும். பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை பசும்பால் ஊற்றி வர நிச்சயமாக வருமானம் அதிகரிக்கும் என ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+