சமையலறையில் இதை மட்டும் வைச்சு பாருங்க.. பணம், அதிர்ஷ்டம் பெருகுமே! சூப்பர் கிராம்பு வாஸ்து டிப்ஸ்
சென்னை: எப்போதுமே ஒரு வீட்டில் சமையலறை சரியாக அமைந்து, அங்குள்ள பொருட்களையும் சரியான திசையில் வைத்திருந்தாலே, வீட்டில் சிக்கல்கள் கூடாது.. அதிலும், தென்கிழக்கு மூலையில் அதாவது அக்னி மூலையில் சமையலறையை அமைந்தாலே பாதி வெற்றி கிடைத்துவிடும் என்பார்கள். அந்தவகையில் சமையலறை வாஸ்து பற்றி பார்ப்போம்.
சில வீடுகளில் வாஸ்து குறைபாடுகள் இருக்கும். இதனால், தொழில் முடக்கம், காரியத்தடைகள், நஷ்டம், நிதிநெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.. இதுபோன்ற வாஸ்து தோஷங்களை போக்க வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை நாம் சரியாக கடைப்பிடித்தாலே போதும் என்கிறார்கள்.

சமையலறை குறிப்பு
குறிப்பாக, சுக்கிரனும் சந்திரனும் அதிகம் இணையக்கூடாது என்பார்கள்.. அதனால்தான், கிச்சனில், தண்ணீர் அதிகம் புழங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். சமையலறையில் ஈரமும் அதிகமாக இருந்துவிடக்கூடக்கூடாது.
குழாய்களில் தண்ணீரும் சிந்தக்கூடாது. அந்த குழாய் உடைந்தும் இருக்கக்கூடாது.. எந்த வீட்டில் தண்ணீர் அதிகமாக செலவாகிறதோ, அந்த வீட்டில் செலவுகளும் பெருகிவிடும்.. நீரின் சிக்கனமே செல்வத்தின் வரவு என்பார்கள்.
அதேபோல, அரிசி, உப்பு, பருப்பு உள்ளிட்ட நவதானியங்களை சமையலறையில் நிறைவாக இல்லாவிட்டாலும் காலியாக இருக்கக்கூடாது.. எனவே, காலியாக போவது தெரிந்தால் முன்கூட்டியே வாங்கிவிட வேண்டும்.. அதேபோல, வடகிழக்கு மூலையில் ஒரு கிண்ணத்தில் நவதானியங்களை போட்டு வைக்கலாம். அல்லது வெறும் வெந்தயத்தையும் வைக்கலாம். ஆனால் திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். இவைகளை சமையலிலும் சேர்த்து கொள்ளலாம்.
கற்பூர ஆரத்தி
வீட்டில் பண பிரச்சனை தீர வேண்டுமானால், மாலை நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி மகாலட்சுமி படத்திற்கு கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். ஊதுபற்றி ஏற்றி பூஜையறையில் வைக்க வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் 5 கற்பூரம், 5 கிராம்பு, 5 ஏலக்காய் சேர்த்து எரிக்க அதில் இருந்து வரும் புகையை வீடு முழுக்க காட்ட வேண்டும். இதன் மூலம் எதிர்மறை ஆற்றல் குறைந்து நேர்மறை ஆற்றல் வீடு முழுவதும் அதிகரிக்கும். அதிலும் கட்டுக்கடுங்காத கடன் பிரச்சனை இருந்தால், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கட்டாயம் சாம்பிராணி புகை போட வேண்டும். இந்த சாம்பிராணியுடன் வெண் கடுகு, மருதாணி விதைகள் சேர்த்து தூபம் போட்டு வந்தால் வீட்டில் செல்வ வளம் பெருகி காணப்படும்.
நிதி குறைபாடுகள்
அதேபோல, ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் 3 கற்பூரம் 5 கிராம்பினை எடுத்து நெருப்பில் போட்டு எரிக்க வேண்டும். காலை 6 மணிக்குள்ளாகவோ மாலை 6 மணிக்கு மேலாகவோ இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதன் மூலம் நிதி குறைபாடுகள் மெல்ல மெல்ல நீங்கும்.
அதேபோல, பிறருக்கு கடனாக கொடுத்த பணம், திரும்பி வராமல் நின்றுபோயிருந்தால், சிவப்பு ரோஜா இதழ்களுடன் கற்பூரத்துண்டுகள் சேர்த்து அதனுடன் சிறிது கிராம்பு சேர்த்து, துர்க்கைக்கு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு நிற துணியில் கிராம்பு, பச்சைக்கற்பூரம் கட்டி வைத்து பணம் வைக்கும் பீரோவில் வைக்கலாம். இதன் மூலம் பணம் வீடு தேடி வரும் என்பது நம்பிக்கையாகும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications