Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருநள்ளாறு பிரம்மோற்சவம்..தங்க காக வாகனத்தில் வீதி உலா வந்த சனிபகவான்..தெப்ப உற்சவம்

Subscribe to Oneindia Tamil

காரைக்கால்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரம்மேற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று சனீஸ்வரர் தங்க காகா வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்றைய தினம் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.

திருநள்ளாறில் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் உலக பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரமோற்சவ விழா நடைபெறும். இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த மாதம் 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சுவாமி அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா, தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை தர்பாரண்யேஸ்வரர் சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

 Thirunallar Saneeswarar Temple Bramorsavam Today Theppa urchavam

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் செவ்வாய்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் செண்பக தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, செண்பக தியாகராஜ சுவாமி தேரில் எழுந்தருளினார். இதேபோல் மற்றொரு தேரில் நீலோத்பாலாம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் திருத்தேர்களில் எழுந்தருளினர். பின்னர் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து 'தியாகேசா தியாகேசா' என்று முழக்கமிட்டு இழுத்தனர்.

நேற்றிரவு இரவு செண்பக தியாகராஜ சுவாமி எண்ணைய்க்கால் மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.

சனி பகவான் நவகிரகங்களுக்குள் எல்லா கோவிலிலும் இருக்கும் என்றாலும் திருநள்ளாறுக்கு எப்போதும் ஒரு தனி இடமுண்டு. சனியால் ஏற்படும் தோஷங்கள் நீங்க திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரங்கள் செய்வார்கள். திருநள்ளாறுக்குப் போனால் அங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி, கரையில் இருக்கும் நள விநாயகரையும் பைரவரையும் வழிபட வேண்டும்.

கோயிலில் உள்ள கங்காதீர்த்த கிணறை தரிசிப்பது மிக முக்கியம். பின்பு கோபுர வாசலுக்கு வநது ராஜ கோபுரத்தைத் தரிசிக்க வேண்டும். அடுத்ததாக, பக்தியோடு முதல் படிக்கட்டை வணங்கிக் கொண்டே, முதல் பிரகாரத்திற்குள் நுழைய வேண்டும். அங்கு சுவர்களில் நள சரித்திரங்கள் முழுவதும் வரையப்பட்டிருக்கும். அதை பார்த்துக் கொண்டே காளத்திநாதரை வழிபட வேண்டும்.

இங்கு இருக்கின்ற இறைவனைப் பார்த்த பிறகு, சனி பகவானைச் சென்று வழிபட்டால் தான் சனிதோஷம் முற்றிலும் நீங்கப் பெறுவீர்கள். சுவாமி சன்னதிக்குள் நுழைந்ததும் மூலவரான தர்ப்பாரண்யேஸ்வரரை மனமுருக வணங்குங்கள். பின்பு தியானவிடங்ககரர் சன்னதிக்கு சென்று அங்குள்ள மரகத லிங்கத்தை மறக்காமல் வழிபடுங்கள்.

அடுத்ததாக அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு சென்று வழிபட்ட பின் கட்டை கோபுர வாசல் என்று ஒரு வாயில் உண்டு. அதன்வழியே வர வேண்டும். அங்கு வந்தபின் அம்பாள் பிராணேஸ்வரி ஆலயம் இருக்கும். அங்கு சென்று வணங்கிக் கொள்ள வேண்டும். சனிபகவானை வழிபட சனியால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+