கார்த்திகை பஞ்சமியில் அவதரித்த திருச்சானூர் பத்மாவதி தாயார்..ஏழுமலையான் கொடுக்கும் பிறந்தநாள் பரிசு
திருப்பதி: திருச்சானூரில் உள்ள கோவில் திருக்குளம் ஆன பத்மசரோவரத்தில் கார்த்திகை மாத பஞ்சமி நாளன்று ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் அவதரித்தார் பத்மாவதி தாயார் என்கின்றன புராணங்கள். இதனை முன்னிட்டு ஆண்டு தோறும் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. பிறந்தநாள் கொண்டாடும் பத்மாவதி தாயாருக்கு திருமலை ஏழுமலையான் அன்பு பரிசை அனுப்பி வைக்கிறார்.
பத்மாவதி தாயார் அவதாரம்: வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். பத்மாவதி ஸ்ரீநிவாசன் திருமணச் செலவுக்குப் பணம் இல்லாததால் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளை கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் ஸ்ரீநிவாசன். மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடவனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாக வரலாறு.

அலர்மேல்மங்கை: தாயார் அலர்மேல்மங்கை என்றும் வணங்கப்படுகிறார். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் கொண்டு அருட்காட்சியளிக்கிறாள். தல தீர்த்தம், பத்ம ஸரோவர் ஆகும். பஞ்சமி தீர்த்தம் எனும் விழா இத்தீர்த்தத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம்.
சுகங்களைத் தரும் தாயார்: பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி எனப்படுகிறது. பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல்மங்கைத் தாயார். திருமலையில் ஸ்வஸ்திவசனம் எனும் சமஸ்கிருத வரவேற்பை தினமும் வேங்கடவனுக்கு சமர்ப்பிக்கிறார்கள். அதில், 'உன்னுடன் அந்தர்யாமியாக உள்ள அலர்மேல் மங்கைக்கும் நல்வரவு' என்று ஒரு சொற்றொடர் உண்டு. திருமலை நாயகனோடு ஒன்றிய நிலையில் அலர்மேல்மங்கை இருக்கிறாள் என்பது இதனால் தெளிவாகிறது. அலர்மேல்மங்கையின் தங்கத்தேர், வெள்ளித்தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
பத்மாவதி தாயார்: பத்மாவதி தாயார் புராண காலத்தில் திருச்சானூரில் உள்ள கோவில் திருக்குளம் ஆன பத்மசரோவரத்தில் கார்த்திகை மாத பஞ்சமி நாளன்று ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் அவதரித்தார். இதனை முன்னிட்டு ஆண்டு தோறும் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 10ஆம் தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் தாயாரின் வாகன சேவை வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 5ஆம் திருநாளான கஜ வாகன சேவை இன்று நடைபெறுகிறது.
கஜ வாகன சேவை: இதனை முன்னிட்டு திருமலையில் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படும் தங்க லட்சுமி காசு மாலை பலத்த பாதுகாப்போடு திருமலையில் இருந்து திருச்சானூருக்கு கொண்டு வரப்பட்டு பத்மாவதி தாயாருக்கு அணிவிக்கப்பட்டது. நாளைய தினம் 6ஆம் நாளான நேற்று காலை வெண்ணெய் குடத்துடன் கிருஷ்ணர் அலங்காரத்தில் தாயார்சர்வ பூபால வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அன்றைய தினம் இரவு கருட வாகன சேவை நடைபெறும்.
கருடவாகன சேவை: கருடன் பெரிய திருவடி என்று அழைக்கப்படுகிறார். ஏழுமலையானின் வாகனம் கருடன். ஏழுமலையான் பிரம்மோற்சவத்தில் 5ஆம் நாள் கருட சேவை நடைபெறும். இறைவனை சுமக்கும் கருடன் தாயாரையும் பிரம்மோற்சவ நாளில் சுமந்து அருள் பாலிப்பது சிறப்பு.
தங்க பாதங்கள் அணிந்த தாயார்: கருட சேவையை முன்னிட்டு திருமலையில் இருந்து ஏழுமலையானின் தங்க பாதங்கள் திருச்சானூருக்கு கொண்டு வரப்படும். தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் பத்மாவதி தாயாருக்கு தங்கப்பாதங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்படும். தங்க பாதங்கள் அணிந்து தாயார் காட்சி அளிப்பார்.
ஏழுமலையான் அளிக்கும் பிறந்தநாள் பரிசு: கார்த்திகை பிரம்மோற்சவ விழா, வரும் 18ஆம் தேதி பஞ்சமி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவடைய உள்ளது. கார்த்திகை மாத பஞ்சமி தீர்த்த ஸ்நானத்தின் போது, திருமலையிலிருந்து பத்மாவதிக்கு பட்டுப்புடவை, தங்க செயின், மஞ்சள், குங்குமம், அன்னபிரசாதங்கள் சீர்வரிசையாக கொண்டு வரப்படும். அவை திருச்சானூர் மாட வீதிகளில் யானை மீது ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு பின் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
குங்கும அர்ச்சனை: கார்த்திகை மாதத்தில் தாயாருக்கு குங்குமத்தால் செய்யப்படும் லட்சார்ச்சனை வைபவம் தனிச் சிறப்புடையது. திருச்சானூருக்கு அருகில் உள்ள கல்யாண வனத்தில் பத்மாவதித் தாயார் திருமணத்திற்காக மஞ்சள் அரைத்த யந்திரக் கல்லை இன்றும் காணலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications