திருச்செந்தூர் கந்தசஷ்டி.. தூத்துக்குடிக்கு திரளும் பக்தர்கள்.. தமிழக அரசு ஸ்பெஷல் ஏற்பாடுகள்.. செம
சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா நாளை துவங்குகிறது.. இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திரு விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி 13-ந்தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது.

கந்தசஷ்டி: இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது.. இது குறித்து அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தாண்டு கந்தசஷ்டி பெருவிழா நாளை நவம்பர் 2ம் தேதி துவங்கி நவம்பர் 7ம் தேதி சூரசம்ஹாரமும் நவம்பர் 8ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.
கந்தசஷ்டி விரதத்தின் முதல் 5 நாட்களுக்கு தினமும் ஒரு லட்சம் பேரும், சூரசம்ஹாரத்தன்று ஆறு லட்சம் பேரும், திருக்கல்யாணத்திற்கு இரண்டு லட்சம் பேரும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் தேவைக்கேற்ப, வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி 181 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும், கோபுரங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
மருதுவ உதவி: விழா நாட்களில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவசர சிகிச்சை, மருத்துவ உதவிக்கு முக்கிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன. சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு 18 இடங்களில் 1.30 லட்சம் சதுரடியில் நிழல் கொட்டகைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றன.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் விரைவாக தரிசனம் செய்ய சிறப்பு வழிகள் அமைக்கப்பட உள்ளது. கந்தசஷ்டி திருவிழாவின் போது நாள் முழுதும் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. பொது தரிசன வரிசையில் இந்தாண்டு அடிப்படை வசதிகளுடன் 'கியூ காம்பிளக்ஸ்' அமைக்கப்பட்டுள்ளது. கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்புக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
சுற்றுப்புறங்கள்: கந்தசஷ்டி நிகழ்வுகளை பக்தர்கள் பார்க்க எல்.இ.டி., திரைகள் முக்கிய இடங்களில் அமைக்கப்படுகின்றன. விழா நாட்களில் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை பராமரிக்க 400 துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கவும், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்திருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications