ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம்.. கார்த்திகை தீப மகா உற்சவம்.. ஜொலித்த திருமலை.. ஒலித்த கோவிந்தா முழக்கம்
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மகா தீப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. ஒரே நேரத்தில் 10ஆயிரம் தீபங்கள் ஏற்றி ஏழுமலையானை வழிபட்டனர். 8 டன் மலர்களால் ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது.பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா முழக்கம் எங்கும் எதிரொலித்தது.
ஏழுமலையான் கோவில்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம், நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். ஏழுமலையான் கோவிலில் நேற்று 60,861 பேர் தரிசனம் செய்தனர். 28 519 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
This morning, Snapana Tirumanjanam was performed for the deities in the Tirumala temple. pic.twitter.com/JZ5M8jIE4n
— Tirumala Tirupati Devasthanams (@TTDevasthanams) November 19, 2023
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சனிக்கிழமை இரவு புஷ்ப யாகத்துக்கான அங்குரார்ப்பணம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக வசந்த மண்டபத்தில் சேனாதிபதி உற்சவம், மிருதங்கரஹணம், ஆஸ்தானம் மற்றும் யாக சாலையில் அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது.
புஷ்ப யாகம்: இதனையடுத்து புஷ்ப யாகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. பிற்பகல் பூந்தோட்ட அலுவலகத்தில் பல்வேறு வகையான மலர்களை தனித்தனியாக சேகரித்து, கூடைகளில் நிரப்பப்பட்டன. அந்த மலர்களுக்கு தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி சிறப்புப்பூஜைகள் செய்தார். பூஜைகள் முடிந்துதும் பூந்தோட்ட அலுவலகத்தில் இருந்து ஏழுமலையான் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.
The annual Pushpayagam was held with religious fervour today evening in Tirumala temple.
— Tirumala Tirupati Devasthanams (@TTDevasthanams) November 19, 2023
In the evening the Utsava Murties were seated on the special platform and floral bath was rendered with eight tonnes of 17 varieties of flowers amidst chanting of Vedic mantras. pic.twitter.com/hZVPc48TQo
எட்டு டன் மலர்கள்: மொத்தம் 8 டன் எடையிலான 17 வகையான மலர்கள் மற்றும் இலைகளால் மதியம் 1 மணியில் இருந்து மாலை 5 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது. அதில் 4 டன் மலர்கள் தமிழகத்தில் இருந்தும், தலா 2 டன் மலர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்தும் கொண்டு வரப்பட்டு யாகம் நடைபெற்றது.
திருச்சானூர்: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 10ஆம் தேதியில் இருந்து 18-ந்தேதி வரை வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. அதையொட்டி நடந்த நித்ய கைங்கர்யங்களில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் அல்லாதவர்கள் மற்றும் பக்தர்கள் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக புஷ்ப யாகம் செய்வது வழக்கம்.
The annual Pushpayagam was held with religious fervour today evening in Tirumala temple.
— Tirumala Tirupati Devasthanams (@TTDevasthanams) November 19, 2023
In the evening the Utsava Murties were seated on the special platform and floral bath was rendered with eight tonnes of 17 varieties of flowers amidst chanting of Vedic mantras. pic.twitter.com/hZVPc48TQo
பத்மாவதி தாயார்: நேற்று காலை அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், தேன், இளநீர் போன்ற சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து கோவிலுக்கு பல்வேறு மலர்கள் நிரப்பப்பட்ட கூடைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரை 3 டன் எடையிலான பல்வேறு அலங்கார, பாரம்பரிய மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.
கார்த்திகை தீப திருவிழா: திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கார்த்திகை மாத முதல் திங்கட்கிழமையை முன்னிட்டு நேற்று இரவு மகா கார்த்திகை தீப உற்சவம் நடந்தது. திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மாரெட்டி தலைமை தாங்கினார். தீப உற்சவத்தையொட்டி ஸ்ரீ மகாலட்சுமி, மலையப்பசுவாமி சமேத ஸ்ரீதேவி பூதேவி, உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு மலர் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
The annual Pushpayagam was held with religious fervour today evening in Tirumala temple.
— Tirumala Tirupati Devasthanams (@TTDevasthanams) November 19, 2023
In the evening the Utsava Murties were seated on the special platform and floral bath was rendered with eight tonnes of 17 varieties of flowers amidst chanting of Vedic mantras. pic.twitter.com/hZVPc48TQo
திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் சதா பார்கவி, வீர பிரம்மம் மற்றும் திருப்பதி மேயர் திரிஷா, கமிஷனர் அனுபமா அஞ்சலி, தேவஸ்தான ஊழியர்கள், மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தீபத் திருவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விளக்குகள் வழங்கப்பட்டன.
தீப ஒளியில் ஜொலித்த திருமலை: ஆயிரக்கணக்கான தீப ஒளியில் திருமலை ஏழுமலையான் கோவில் ஜொலித்தது. வேத பாடசாலையை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்களை முழங்க தீப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமானோர் கோவிந்தா முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிலிர்த்த பக்தர்கள்: தேவஸ்தான பிரதான அர்ச்சகர்கள் வேணுகோபால தீச்சிதர், கிருஷ்ண சேஷாசல தீச்சிதர்கள் கலந்து கொண்டு ஆகம விதிப்படி சாமிக்கு நட்சத்திர ஆர்த்தி கும்ப ஆர்த்தி மற்றும் தீபாரதனை செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட 10 ஆயிரம் பேரும் ஒரே நேரத்தில் சாமிக்கு தீபம் ஏற்பட்டு வழிபட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது. இதையடுத்து எஸ்.வி இசை கல்லூரியை சேர்ந்த மாணவிகள் பக்தி பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி பக்தர்களை பரவசமூட்டினர். திருமலையில் கார்த்திகை கடந்த 3 ஆண்டு காலமாக தீப உற்சவ விழா நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications