Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆனித்திருவிழா..விறுவிறுப்பாக தயாராகும் நெல்லையப்பர் கோவில்..தேருக்கு போலீஸ் பாதுகாப்பு..காரணம் என்ன

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டத்திற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் கோவில் தேர் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலியில் உள்ள காந்திமதி சமேத நெல்லையப்பர் கோவில். சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை யும், பெருமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நான்மறைகளும், சிவபெருமானுக்கு நிழல் தரும் மரங்களாக இருக்க வேண்டும் என்று விரும்பின. அதற்காக நான்கு வேதங்களும் சிவபெருமானை வேண்டின. எனவே, வேதங்கள் திருநெல்வேலியில் மூங்கிலாய் இருக்க, இறைவன் லிங்கமாய் அமர்ந்தார் என்பது தலபுராணம் ஆகும்.

Tirunelveli Nellaiyapar temple chariot with gun armed police security..What is the reason

இந்த ஆலயத்தில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் வசந்த மகோற்சவம், வைகாசியில் விசாகத் திருநாள், ஆனியில் பெருந்தேர்த் திருவிழா, ஆடியில் பூரத்திருவிழா, ஆவணியில் மூலத் திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி விழா, ஐப்பசியில் திருக்கல்யாண உற்சவம் கார்த்திகையில் கார்த்திகை தீபம், சோமவார திருநாள், மார்கழியில் திருவாதிரை விழா, தை மாதத்தில் பூசத் திருவிழா, மாசியில் மகா சிவராத்திரி, பங்குனியில் உத்திரத் திருநாள் வெகு விமரிசையாக நடைபெறும்.

ஆனி மாதத்தில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் அசைந்தாடி வரும் காட்சியைக் காண வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள். இந்த ஆண்டு ஆனி தேர் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான விநாயகர் திருவிழா கடந்த ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து முதலி மூவர் திருவிழா, சந்திரசேகரர் திருவிழா போன்றவை நடைபெற்றது.

வரும் 24ஆம் தேதி ஆனி பெருந்திருவிழாவுக்கு நெல்லையப்பர் கோவிலில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும்.
ஜூலை இரண்டாம் தேதி ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேர், நெல்லை டவுன் நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ஆடி அசைந்து வரும் அற்புத காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

இத்தகைய பெருமைக்குரிய தேர் திருவிழாவிற்காக தேரை சுத்தப்படுத்தும் பணி மற்றும் பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது. இரும்பு தகடுகள் கொண்டு தேர் எப்போதும் மூடப்பட்டிருக்கும். திருவிழா தொடங்கிய பின்னர் தான் அந்த இரும்பு தகடுகள் அகற்றப்பட்டு தேர் வெளியே தெரியும்.

பாரம்பரியமிக்க பழமையான தேர் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காணும் வகையில் தகடுகள் பிரிக்கப்பட்டுள்ளதால் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளிக்க மாநகர காவல் துறை உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் துப்பாக்கி ஏந்தி போலீஸ் பாதுகாப்பு தற்போது நெல்லையப்பர் தேருக்கு போடப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 24ம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தேர் திருவிழா துவங்க இருக்கிறது. அதிகாலை 5 மணிக்கு மேல் இந்த கொடியேற்றம் நடைபெறும். இதன்பிறகு உள்ளூர் ஆட்கள் வெளியூர் செல்லமாட்டார்கள் என்பது ஐதீகம்.

24 ஜூன் 2023 - சனி காலை கொடியேற்றம் இரவு 7 மணி பூங்கோயில் சப்பரம்

25 ஜூன் 2023 - ஞாயிறு சபாபதி அபிஷேகம் காலை வெள்ளி சப்பரம் இரவு வெள்ளி கற்பக விருக்ஷம் வாகனம், வெள்ளி கமல வாகனம்

26 ஜூன் 2023 - திங்கள் காலை வெள்ளி கற்பக விருக்ஷம் வாகனம், வெள்ளி கமல வாகனம் இரவு தங்க பூத வாகனம், வெள்ளி சிம்ம வாகனம்

27 ஜூன் 2023 செவ்வாய் காலை வெள்ளி குதிரை வாகனம், வெள்ளி காமதேனு வாகனம் இரவு வெள்ளி ரிஷப வாகனம்

28 ஜூன் 2023 புதன் காலை வெள்ளி ரிஷப வாகனம் இரவு இந்திரா விமானம்

29 ஜூன் 2023 வியாழன் காலை வெள்ளி சப்பரம் இரவு வெள்ளி சப்பரம் வெள்ளி யானை வாகனம், அன்ன வாகனம்

30 ஜூன் 2023 - வெள்ளி காலை - 8 மணி - நெல்லையப்பர் தங்கப் பல்லக்கு, அம்பாள் தவழ்ந்த திருக்கோலம் முத்துப்பல்லக்கு. இரவு - 7 மணி - வெள்ளி குதிரை வாகனம், வெள்ளி காமதேனு வாகனம் - சுவாமி நடராஜப் பெருமான் திருவீதி உலா

1 ஜூலை 2023 - சனி காலை நடராஜர் வெள்ளை சாத்தி உட்பிரகார உலா காலை 8 மணிக்கு நடராஜர் பச்சை சாத்தி திருவீதி உலா
மாலை 5 மணிக்கு கங்களாநாதர் தங்க சப்பரம் இரவு 10 மணிக்கு தேர் கடாக்ஷம் வீதி உலா, தங்க கைலாச பர்வத வாகனம், தங்க கிளி வாகனம்.

2 ஜூலை 2023 - ஞாயிறு காலை தேரோட்டம் தேரோட்டம் முடிந்த பின்னர் சப்தவர்ண பல்லக்கு

3 ஜூலை 2023 தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+