திருப்பதி சொர்க்கவாசல்.. ஏழுமலையானுக்கு 10 நாட்களில் வசூலான காணிக்கை.. கொட்டிக் கொடுத்த பக்தர்கள்
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையானை சொர்க்கவாசல் வழியாக கடந்த 10 நாட்களில் 6.43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ. 40.18 கோடி காணிக்கையை செலுத்தியுள்ளனர்.
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் முடி காணிக்கை மட்டுமல்லாது தங்களது வேண்டுதல்களுக்காக பொன், பொருள் என உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவும் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவும் தனித்துவம் வாய்ந்தது. பகல்பத்து, ராபத்து, இயற்பா என மொத்தம் 21 நாள்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு கடந்த டிசம்பர் 23ஆம் தேதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருமலைக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை தந்தனர்.
சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் சென்று தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று ஜனவரி 2ஆம் தேதி திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசன், விஷ்ணு நிவாசம், அலிபிரி பூதேவி ஆகிய 3 இடங்களில் உள்ள கவுன்டர்கள் திறக்கப்பட்டு, இந்த கவுன்டர்கள் மூலம் மீண்டும் டோக்கன்கள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 10 நாள்களில் சொர்க்கவாசல் வழியாக 6.43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ. 40.18 கோடி காணிக்கையை செலுத்தியுள்ளனர். இவர்களில் 2.13 லட்சம் பக்தர்கள் வேண்டுதலுக்காக மொட்டையடித்து தலைமுடி காணிக்கையும் செலுத்தியுள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டில் வசூலான காணிக்கை குறித்த தகவலையும் திருப்பதி தேவஸ்தானம் இன்று அறிவித்துள்ளது. இதன்படி கடந்த ஒரு வருடத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1,398 கோடி பெறப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஜூலையில் 129 கோடி ரூபாயும், குறைந்தபட்சமாக நவம்பரில் 108 கோடி ரூபாயும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 2.52 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications