Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவாரூர் ஆழித்தேரோட்டம்..தியாகராஜர் கோவிலில் கோலாகலம்..விண்ணை எட்டிய ஆரூரா... தியாகேசா முழக்கம்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: ஆரூரா..தியாகேசா.. என்ற முழக்கம் விண்ணை எட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பய பக்தியுடன் வடம் பிடித்து இழுக்க திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. திருவாரூர் தேரழகு என்று சும்மாவா சொன்னார்கள்..நான்கு மாட வீதிகளில் ஆடி ஆடி அசைந்து வந்த பிரம்மாண்ட திருத்தேரினை நேரில் மட்டுமல்லாது நேரலையிலும் லட்சக்கணக்கானோர் கண்டு பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கும் தலமாகவும் திகழ்கிறது.

எந்த ஒரு சிவ தலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு திருவாரூர் தலத்திற்கு உள்ளது. கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் இதுவே.

 கோவிலின் பிரம்மாண்டம்

கோவிலின் பிரம்மாண்டம்

திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. இத்தலம் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொன்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப்புகழ் பெற்றது.

ஆசியாவிலேயே பெரிய தேர்

ஆசியாவிலேயே பெரிய தேர்

ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. ஆழி என்றால் மிகப்பெரியது என்று பொருளாகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பெருமைகளை கொண்ட ஆழித்தேர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

 96 அடி உயர தேர்

96 அடி உயர தேர்

அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் 'ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டு்ள்ளது. இந்த தேரின் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப்படுகிறது.

என்னென்ன அலங்காரங்கள்

என்னென்ன அலங்காரங்கள்

தேரின் கட்டுமானத்திற்கு பயன்டுத்தப்படும் மரங்கள், துணி, அலங்கார பொருட்கள்,குதிரைகள் என அனைத்தும் பிரம்மாண்டமான வகையில் பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்படும். தேரோட்டத்தின் பொழுது தேரை இயக்கவும் கட்டுப்படுத்தவும் புல்டோசர், ஜேசிபி பயன்படுத்தப்படும். மேலும் வடக்கயிறின் எடையே 15 டன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மிக பிரமாண்டமான ஆழித்தேரில், தியாகராஜர் வீற்றிருக்க நான்கு வீதிகளிலும் தேர் வீதியுலா வரும் அழகு காண்போர் வியக்கத்தக்கது.

 பங்குனி ஆயில்யம்

பங்குனி ஆயில்யம்

ஆழித்தேர் திருவிழா அஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேர் திருவிழா நடத்த வேண்டும் என்பது ஆகம விதியாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 9ஆம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் இன்று காலையில் ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

பிரம்மாண்ட அலங்காரம்

பிரம்மாண்ட அலங்காரம்

இதனையொட்டி திருத்தேரானது கடந்த சில நாட்களாகவே பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் முன்பகுதியில் ரிக், யஜூர், சாம, அதர்வன ஆகிய வேதங்களைக் குறிக்கும் 4 மரக்குதிரைகள், ரிஷபம் 8, யாளம் 2, பாம்பு யாளம் 1, பிர்மா 1, துவாரபாலகர் 2, கமாய் கால் 2, மேல் கிராதி 4, கீழ் கிராதி 2, பெரிய கத்தி கேடயம் 2, பூக்குடம் 16, ராஜாராணி 2, கிழவன் கிழவி 2, சுருட்டி 4, இலை 8, பின்பக்கம் காமாய் கால் 6, அம்பராத்தோணி 2 என மொத்தம் 68 வகையான பொம்மைகள் பொருத்தப்பட்டு திருத்தேர் அலங்கரிக்கப்பட்டது. இந்தத் தேரில் அலங்கரிக்கப்பட்டுள்ள மலர் மற்றும் காகிதங்கள் மட்டுமே 50 டன் ஆகும்.

 ஆடி அசைந்து வரும் கம்பீரம்

ஆடி அசைந்து வரும் கம்பீரம்

இன்று காலையில் ஆழித்தேரோட்டத்தினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடியசைத்து துவக்கி வைத்தார், லட்சக்கணக்கான பக்தர்கள் ஆரூரா தியாகேசா என்ற கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 96 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் ஆழித்தேர், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மாட வீதிகள் என திருவாரூர் நகர வீதிகளில் அசைந்தாடி வரும் அழகு காண்போரின் மனதை கொள்ளை கொள்கிறது. ஆழித்தேரை சீராக இயக்க திருச்சி பாய்லர் ஆலை நிறுவனம் மூலம் இரும்பு அச்சு மற்றும் 4 இரும்பு சக்கரங்களிலும் 'ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டிருக்கிறது.

குவிந்த பக்தர்கள்

குவிந்த பக்தர்கள்

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆழித்தேரோட்டத்தை காண திருவாரூரில் குவிந்துள்ளனர். ஆழித்தேரோட்டத்தின்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி சங்கிலி பறிப்பு, திருட்டு போன்றவற்றை தடுக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பங்குனி உத்திரம் பாத தரிசனம்

பங்குனி உத்திரம் பாத தரிசனம்

இந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் தியாகராஜரின் முகம் மட்டுமே தெரியும். மார்கழி மாத திருவாதிரையில் தியாகராஜரின் இடப்பாதத்தையும், பங்குனி மாத உத்திர தினத்தில் வலப்பாதத்தையும் கண்டு தரிசிக்கலாம். இந்த ஆண்டு பங்குனி உத்திரம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் அதிகாலை முதல் இரவு வரை மூலவர் தியாகராஜரின் வலப்பாதத்தை கண்டு தரிசிக்கலாம். இதுவே நிஜ பாத தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. மற்றைய அங்கங்கள் மூடி வைக்கப்பட்டிருக்கும். அவை மிகவும் ரகசியமானவையாக கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+