திருச்சி பூமிநாத சுவாமி கோயில்.. நிலம், வீடு, பூர்வீக சொத்து விவகார குறைகளை போக்கும் எளிய பரிகாரம்
சென்னை: நிலம் அல்லது பூமி தொடர்பான, வீடு தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு எளிய பரிகாரங்களை முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.. நம்பிக்கையுடன் இந்த பரிகாரங்களையும், வழிபாடுகளையும் கடைபிடித்து வரும்போது, மனை தொடர்பான சிக்கல்கள் மெல்ல மெல்ல நீங்கும் என்பார்கள்.. அந்தவகையில் ஒருசில பரிகாரங்களை பற்றி மட்டும் இங்கே பார்க்கலாம்..!!
நிலம், வீடு, பூமி சம்பந்தமான பிரச்சனை இருப்பவர்களுக்கு கை கொடுத்து உதவக்கூடியவர் முருகபெருமான்... வீடு, மனை, நிலம் போன்றவற்றிற்கு காரணமாக இருப்பவர் செவ்வாய் பகவான்...

முருகப்பெருமான் வேண்டுதல்
இந்த செவ்வாய் கிரகத்திற்கு உரிய கடவுளாக விளங்குபவர் முருகப்பெருமான்.. அந்தவகையில், செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு வெற்றிலை பரிகாரம் செய்வதால், வீடு, நிலம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
பூமிநாத சுவாமி கோயில்
அதேபோல, நிலம், மனை தோஷங்களை நீக்க, மண் வழிபாட்டு முறை, திருச்சி பூமிநாத சுவாமி கோயிலுக்குச் செல்லுதல் ஆகியவற்றைச் செய்யலாம். தோஷங்கள், பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கி, யோகமான வீடு, மனை, நிலம் அமைய, பூமிநாத சுவாமி திருக்கோயிலில் மண் வழிபாட்டு முறை செய்து, சுவாமி மற்றும் அம்மனை வழிபட வேண்டும். காரணம், பூமி, வாஸ்து சம்பந்தமான 16 விதமான தோஷங்களை நிவர்த்தி செய்யக்கூடியவராக பூமிநாத சுவாமி திகழ்கிறார்..
பத்திரதாரர்கள், மற்றும் நிலத்தை வாங்குவோர், விற்க நினைப்போர், சம்பந்தப்பட்ட மனையிலிருந்து 3 கைப்பிடி மண்ணை எடுத்துவந்து, பூமிநாத சுவாமி திருக்கோயில் வைத்து வழிபாடு செய்வார்கள். இதற்கென சில விசேஷ முறைகளும் உள்ளன.. இதனை பின்பற்றி பிரார்த்தனை செய்யும்போது, உங்கள் வேண்டுதல் விரைந்து நிறைவேறும்.
எளிய பரிகாரங்கள்
அதேபோல, மனை வாங்கி வீடு கட்டுவதில் தடை உள்ளவர்கள், அல்லது நிலத்தை புதிதாக வாங்க நினைத்தாலும் தடை இருப்பதாக உணர்பவர்கள் அல்லது வராஹ மூர்த்தியை நினைத்து 1 ரூபாய் நாணயத்தை, புதிய மஞ்சள் துணியில் சுற்றி வைத்து தினமும் பிரார்த்தித்து வரவேண்டும். இதனால் நிலம் தொடர்பான பிரச்சனை எளிதில் விலகும்.
அதேபோல, நாட்டு மருந்து கடைகளில் குண்டுமணி, சாம்பிராணி இரண்டையும் தூளாக உடைத்து வைத்து கொள்ள வேண்டும். தினமும் மாலை நேரத்தில் வீட்டில் தூப தீபத்தை, 1 வாரத்துக்கு காட்டி வந்தால், வீடு, மனை தோஷம் நீங்கும்.












Click it and Unblock the Notifications