Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்னாடுடைய சிவனே போற்றி..திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தென்னாடுடைய சிவனே போற்றி என்று பக்தி முழக்கமிட்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதிகளிலும் ஆடி அசைந்து வந்த திருத்தேரினை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் பங்குனிப் பெருவிழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான பங்குனிப் பெருவிழா கடந்த 1ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Trichy Thiruvanaikaval Jambukeswarar Akilandeswari temple Panguni Car Festival Today

பஞ்சபூத தலங்களில் நீர் தலமாகவும், சக்தி பீடங்களில் வராகி பீடமாகவும் திகழ்வது திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம். யானை பூஜித்ததால் யானைக்காவல், கஜாரண்யம், கரிவனம் ஆகிய பெயர்களாலும், அம்பாள், ஈசனிடம் உபதேசம் பெற்ற தலமாதலால் உபதேச ஸ்தலம் என்றும், சம்பு மாதவ முனிவர் வழிபட்டதால் சம்பு வனம், ஜம்புகேஸ்வரம் என்றும் இந்தத் தலம் அழைக்கப்படுகிறது.

பங்குனி தேரோட்டத்துக்கான எட்டுத்திக்கும் கொடியேற்றம் 1ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் முதல் தினந்தோறும் சுவாமி, அம்பாள் காலையில் புறப்பாடும், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.நேற்று இரவு தேரோட்டத்துக்கு முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்பாள் தெருவடைச்சானில் வீதியுலா வந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆகியோருக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அதிகாலை 03.50 மணியளவில் உற்சவர் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர்.

முன்னதாக, விநாயகர், சுப்பிரமணியர் சிறிய தேரோட்டம் தேரோடும் வீதிகளில் வந்து நிலையை அடைந்தது. பின்னர் காலை 8.05 மணிக்குஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம் பிடித்துஇழுத்தனர். மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய நான்கு பிரகாரங்களில் சுற்றிவந்த தேர் காலை 9.20 மணிக்கு தெற்கு உள்வீதி சந்திக்கும் இடத்துக்கு வந்தது.

பின்னர் காலை 9.30 மணிக்கு அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அம்மன் தேர் பிற்பகல் 2 மணிக்கு சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அம்மன் தேருக்கு பின்னால் சண்டீகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து அருள்பாலித்தார்.

தேரோட்டத்தின் போது மேளதாளம், சங்கொலி முழங்க வானவேடிக்கைகள் நடைபெற்றன. ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளிலும் தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேரோட்டத்தின் முன்பாக பலரும் பஞ்சவாத்தியங்களை இசைத்தும் நடனமாடியும் தென்னாடுடைய சிவனே போற்றி என்ற முழக்கமிட்டும் சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி அம்பாளாகவும் அம்பாள் சுவாமியாகவும் மாறி ஐந்து பிரகாரம் உலா வரும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+