Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி.. சொர்க்கவாசல் தரிசனத்திற்கு போகும் பக்தர்களே.. டிக்கெட் அவசியம்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்படும் 10 நாட்களுக்கு இலவச டோக்கன், ஆன்லைன் டிக்கெட் இருந்தால் மட்டுமே தரிசனம் எந்தவித டிக்கெட் இல்லாத பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் அனுமதிக்கப்படாது செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறியுள்ளார்.

மார்கழி மாதத்தில் பெருமாள் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவிற்கு அடுத்தபடியாக வைகுண்ட ஏகாதசி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள்.

Vaikunda Ekadasi at Tirupati Elumalayan temple Ticket must for Sorgavasal Tirappu

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 23ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் தரிசனம் மூலம் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனம் மூலம் 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக திருப்பதியில் 10 இடங்களில் கவுண்ட்டர்கள் அமைக்கப்படும். நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இலவச தரிசன டோக்கன்களை ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட்டுகள் நவம்பர் 10ஆம் தேதியன்று ரிலீஸ் செய்யப்பட்டது.

வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் தங்க ரதத்தில் கோயிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து அருள் பாலிக்க உள்ளார். வைகுண்ட துவாதசியை முன்னிட்டு 24 ம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என்பதால் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பாக செய்து வருகிறது.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செயல் அதிகாரி தர்மா ரெட்டி, “வைகுண்ட ஏகாதசியையொட்டி 23 முதல் ஜனவரி 1 வரை 10 நாட்களுக்கு வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படும். இதற்காக திருப்பதியில் 10 இடங்களில் 94 கவுண்டர்களில் 22 ஆம் தேதி முதல் நேர ஒதுக்கீடு இலவச டோக்கன் மொத்தம் 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாக கூறினார்.

திருப்பதியில் உள்ள இந்திரா மைதானம், ராமச்சந்திரா புஷ்கரிணி, சீனிவாசம் காம்ப்ளக்ஸ், விஷ்ணுநிவாசம் காம்ப்ளக்ஸ், பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சுவாமி இரண்டவது சத்திரம், பைராகிப்பட்டேடாவில் உள்ள ராமாநாயுடு மேல்நிலைப் பள்ளி, எம்.ஆர்.பள்ளியில் உள்ள ஜில்லா பரிஷத் மேல்நிலைப் பள்ளி, ஜீவகோனாவில் உள்ள ஜில்லா பரிஷத் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களிலும், திருமலையில் உள்ள உள்ளூர் மக்களுக்காக கௌஸ்துபம் ஓய்வறையில் வழங்கப்படும்.

ஏற்கனவே ஆன்லைனில் ரூ.300 டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. குளிர் மற்றும் மழைக்காலம் வரிசையில் பல மணி நேரம் காத்திருப்பதை தடுக்க முன்கூட்டிய இலவச டோக்கன் வழங்கப்படுவதுடன் ஆன்லைனில் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. எனவே நேரடியாக திருமலைக்கு எந்தவித டிக்கெட் இல்லாமல் வரலாம் ஆனால் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்றும் தர்மா ரெட்டி கூறியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 19.73 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ. 108.46 கோடி காணிக்கையாக செலுத்தினர். 97.47 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 36.50 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. 7.06 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர் என்றும் தர்மாரெட்டி தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+