திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி.. டிசம்பரில் என்னென்ன திருவிழாக்கள்
சென்னை: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள சிறப்பு உற்சவங்கள் குறித்த விபரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது வெளியிட்டுள்ளது. பிரசித்தி பெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழா பத்து நாட்கள் நடைபெற உள்ளது.
மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் கிருஷ்ணர் கூறியுள்ளார். பெருமாள் ஆலயங்களில் திருப்பாவை வழிபாடு நடைபெறும். அதிகாலையில் திருப்பல்லாண்டு பாடி வழிபடுவார்கள். திருமலை திருப்பதியில் மிகவும் கோலாகலமாக உற்சவங்கள் நடத்தப்படும். மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்பதால் ஏராளமான பக்தர்கள் இந்த நாளில் விரதம் இருப்பது வழக்கம்.

வருடத்தின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருக்க முடியாதவர்கள் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து திருமாலை வழிபட்டால் பாவங்கள் நீங்கி, வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதிலும் திருப்பதியில் மார்கழி மாத உற்சவங்கள் மிகவும் முக்கியமானதாகும்.
டிசம்பர் 03 - கார்த்திகை வனபோஜன உற்சவம்
டிசம்பர் 08 - சர்வ ஏகாதசி
டிசம்பர் 12 - அத்யாயன உற்சவங்கள் துவக்கம்
டிசம்பர் 17 - தனுர் மாதம் மார்கழி மாத பிறப்பு
டிசம்பர் 22 - சின்ன சாத்து முறை
டிசம்பர் 23 - வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு. தங்க ரத உற்சவம்
டிசம்பர் 24 - வைகுண்ட துவாதசி, ஸ்ரீ சுவாமி புஷ்கரணி தீர்த்த முக்கோட்டி
டிசம்பர் 26 - மார்கழி பவுர்ணமி கருட சேவை
டிசம்பர் 28 - பிரணயகால மகோற்சவம் நடைபெறும் என்று திருப்பதி தேவஸ்தனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் சுப்ரபாத சேவையுடன் தான் வழிபாடுகள் துவங்கும். ஆனால் மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாதத்திற்கு பதிலாக ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாசுரங்கள் தான் திருமலையில் பாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications