வைகுண்ட ஏகாதசி.. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் முகூர்த்தக்கால்.. டிச. 23ல் சொர்க்கவாசல் திறப்பு
: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 23ம் தேதி அதிகாலை 4மணிக்கு நடைபெறுகிறது.
108 வைணவ தளங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.

பரந்தாமனின் திருவடிகளை அடையச் செய்து, நித்திய வைகுண்டவாசத்தை அளிக்கிறது. மது கைடபர்களின் வேண்டிக்கொண்டபடி, இந்த விரதத்தினை மேற்கொள்ளும் எல்லா அடியவர்களுக்கும் பரந்தாமன் சொர்க்க வாசலை திறந்து வைகுண்ட பதவியை அளிக்கிறார் என்பது ஐதீகம்.
பெருமாளை எண்ணி இந்த விரதம் இருக்க விரும்புபவர்கள், ஏகாதசிக்கு முந்தின நாளான தசமியன்று விரதம் தொடங்க வேண்டும். அந்த நாளில் ஒரு வேளை சாப்பிடலாம் என்கின்றன ஆன்மிக நூல்கள். உபவாசம் மட்டுமின்றி ஏகாதசி தினத்தின் இரவு முழுக்கவும் திருமாலின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும். ராமாயணம். பாரதம். கீதை போன்றவைகளைப் படிக்கலாம். உபன்யாசம், திருமால் நாமாவளிகளை கேட்கவும் செய்யலாம். இரவு முழுக்க எல்லா இந்திரியங்களும் பகவானின் அனுபவங்களில் திளைக்க வேண்டும் என்பதே இந்த வைகுண்ட ஏகாதசி விரதத்தின் நோக்கம்.
இந்த நாளில் முழுக்க முழுக்க தூங்கவே கூடாது என்பது முக்கிய விதி. ஏகாதசி அன்று இரவில் விஷ்ணு கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபட வேண்டும். முக்கியமாக அன்றைய தினம் மட்டுமே திறக்கப்படும் சொர்க்க வாசலைக் கடந்து பெருமாளோடு பரமபதத்தினை அடைவது சிறப்பானது.
ஏகாதசி விரதம் முடிந்த மறுநாள், துவாதசியன்று காலையில் நீராடி திருமண் இட்டு, துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். இன்று எடுத்துக்கொள்ளும் விரதம் 'பாரணை' எனப்படுகிறது. பாரணை என்றால் விரதத்தினை முடிக்கும் முறை எனலாம். இந்த நாளில் காலையிலேயே 21வித காய்கறிகள் இடம் பெற்ற உணவைச் சமைத்து சாப்பிட வேண்டும்.

வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் குளித்து விட்டு நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும்.
அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது. பரங்கிக்காய், அகத்திக்கீரை, நெல்லிக்காய் இந்த நாளில் அவசியம் சேர்க்க வேண்டும்.
பெருமைமிக்க இந்த வைகுண்ட ஏகாதசி விரதத்தினை முப்பத்து முக்கோடி தேவர்களும் ஏற்பதாக ஐதீகம். இதனாலேயே இந்நாளுக்கு 'வைகுண்ட முக்கோடி ஏகாதசி' எனவும் பெயருண்டு. இந்த ஆண்டு இரண்டு வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 2ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதியில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் முகூர்த்தக்கால் நடப்பட்டது. முகூா்த்தகாலானது சந்தனம் பூசி, மாவிலை, மாலை அணிவித்து வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, யானை ஆண்டாள் ஆசியுடன் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமை அா்ச்சகா் சுந்தா் பட்டா், மேலாளா் தமிழ்ச்செல்வி, கண்காணிப்பாளா்கள் வேல்முருகன், கோபாலகிருஷ்ணன், வெங்கடேசன், சரண்யா, மீனாட்சி, கோவில் பணியாளா்கள் பங்கேற்றனா்.
செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், வரும் டிசம்பர் 12ம் தேதி திருநெடுந் தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது, பன்னிரண்டாம் தேதி பகல்பத்து விழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து பகல் 10 விழாவின் பத்தாம் திருநாளான மோகினி அலங்காரம் 22 ஆம் தேதியும் நடைபெறும்.
இராபத்து திருவிழாவின் முதல் நாளான வைகுண்ட ஏகாதசி எனப்படும் பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 23ம் தேதி அதிகாலை 4மணிக்கு நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் இனிதே நிறைவடையும் என்று கூறினார். நாடு முழுவதிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கநாதர் ஆலயத்திற்கு வருவார்கள் என்பதால் சிறப்பு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications