வைகுண்ட ஏகாதசி.. பெருமாளின் 108 திவ்ய தேசங்களிலும் சொர்க்க வாசல் திறப்பு.. கோவிந்தா முழக்கம்
சென்னை: வைகுண்ட ஏகாதசி தினமான இன்றைய தினம் பெருமாளின் 108 திவ்ய தேசங்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா முழக்கம் அந்த வைகுண்டத்தையே எட்டியது.
மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவார்கள். இன்றைய தினம் தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

அழகர் கோவில்,முனிச்சாலை சீனிவாச பெருமாள் கோவில் கூடலழகர் பெருமாள் கோவில் உட்பட அனைத்து வைணவ ஸ்தலங்களிலும் பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை தல்லாகுளம் வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் உற்சவமூர்த்தியான பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரங்கநாதர் ஆலயம் சிறப்பு வாய்ந்தது. பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுல் இது, ஐந்தாவது ஆலயமாகும். 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வதுமான இந்த ஆலயத்தில் ஏகாதசியை முன்னிட்டு, இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை முன்னிட்டு பெருமாள் தங்க ரத்தின அங்கியில் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக எழுந்தருளினார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசி சொர்க வாசல் நிகழ்சி சிறப்பாக நடைபெற்றது. சென்னையில் பிரசித்தி பெற்ற திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மாதவ பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி கோட்டை பரவாசு தேவ சுவாமி கோவில் சொர்க வாசல் திறப்பு இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. பூக்கலால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பரவாசுதேவர் தம்பதி சமித பரமபத சொர்க வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர். கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் அடிப்பூர தேரோட்டம் மிக முக்கியமான திருவிழாவாகும். அதற்கு அடுத்தபடியாக மார்கழி மாதம் தமிழ் திருவிழாவாகிய பகல் பத்து, இராப்பத்து மற்றும் ஆண்டாள் மார்கழியில் நீராடும் எண்ணைக் காப்பு உற்சவம் வருடந்தோறும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இராப்பத்து உற்சவத்தின் ஆரம்ப நாளான இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா என முழக்கமிட்டனர். ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் எதிர்கொண்டு அழைக்க சொர்க்கவாசல் வழியாக பெரிய பெருமாள், இதை தொடர்ந்து ஸ்ரீஆண்டாள், ரங்கமன்னார் எழுந்தருளினர். இன்று திறக்கப்பட்ட இந்த பரமபத வாசல் வழியாக வருபவர்கள் வைகுண்டத்திற்கு சென்று வருவதாக ஐதீகம்.எனவே உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைபத்தில் கலந்து கொண்டனர்.
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்,நினைத்தலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அண்ணாமலையார் கோவில் கருவறையின் பின்புறம் உள்ள வேணுகோபால சுவாமி சன்னதியில் வேணுகோபால சுவாமி, பாமா, ருக்குமணிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அதிகாலை 5.40 மணியளவில் கோவிலின் அமைந்துள்ள வைகுந்த வாயில் திறக்கப்பட்டு சிறப்பு தீபஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து வைகுந்த வாயில் வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நுழைந்து அண்ணாமலையார் மற்றும் வேணுகோபாலசாமிகளை தரிசனம் செய்தனர். தமிழகத்திலேயே சிவ ஸ்தலங்களில் வைகுந்த வாயில் திறப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications