சமையலறையில் ஃபிரிட்ஜ் இப்படி திருப்பி வையுங்க.. கேஸ் ஸ்டவ் வைக்க சரியான இடம்? கிச்சன் வாஸ்து டிப்ஸ்
சென்னை: குடும்பத்தில் ஆரோக்கியம், பாதுகாப்பு, செல்வ வளம், போன்றவை சிறப்பாக இருக்க வேண்டுமானால், வீட்டின் அமைப்பு மிகவும் முக்கியம்.. வாஸ்துப்படி அறைகளை அமைத்தாலும், அவைகளை தினமும் முறைப்படி பராமரிக்க வேண்டும்.. அந்தவகையில், சமையலறையில் எப்படி அமைக்கலாம்? சமையலறை வரக்கூடாத திசை எது? சமையலறையில் கட்டாயம் வைக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
பெரும்பாலும், வடகிழக்கில் சமையலறை வைக்கக்கூடாது.. இதனால், குடும்பத்திலுள்ள ஆண்பிள்ளையின் கல்வியறிவு அல்லது அவர்களது வளர்ச்சிகளில் பாதிப்பு ஏற்படும்.. சிலருக்கு இந்த திசை யோகத்தை தந்தாலும், பொருளாதார பாதிப்பு என்பது வந்தே தீருமாம்.. அதேபோல கிழக்கு பகுதியில் கிச்சன் இருக்கக்கூடாது. இதனால் சீரற்ற வாழ்க்கையே அமையும்.

வடகிழக்கிலும் சமையலறை வைக்கக்கூடாது. இதனால் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் கெடும்.. நிதி நிலைமையும் பாதிக்கும், திருமண தடையும் நடந்துவிடும். மேற்கு பகுதியில் கிச்சன் வைத்தாலும், நன்மைகள் பெருமளவு கிட்டாது.. வரவு செலவு சமமாகவே போகும்.
குபேர மூலை - வடக்கு பகுதி
மூலை வடமேற்கு பகுதியில் கிச்சன் வைத்தாலும் முழு ஆரோக்கியம் கிடைக்காது.. அதேபோல, குபேர பகுதியான வடக்குப் பகுதியில் கிச்சன் வரக்கூடாது.. இதுவும் பண நெருக்கடியை தந்துவிடும்.. குடும்பத்தில் அமைதி இருக்காது..
தென்கிழக்கு திசையில் சமையலறை வரலாம்.. அக்னி மூலை கிச்சனுக்கு ஏற்ற இடம்.. இதனால் நஷ்டம் ஏற்படாது.. வடமேற்கு திசையிலும் சமையலறை வைக்கலாம். இதனால் சொந்த வீடு வாங்கும் யோகம் வரும்.. கேஸ் அடுப்பை வைக்க சரியான திசை தென்கிழக்கு மூலை. இது நெருப்புக்குரிய திசை என்பதால், இது சமையலுக்கு மிகவும் பொருத்தமான இடமாகும்.. அதாவது சமைக்கும் போது சமையல்காரர் கிழக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும்.
அடுப்பு வாயுமூலை திசை
ஒருவேளை வடக்கு நோக்கி சமைக்கும்படியாக மேடை அமைத்திருந்தால், வடக்கு மையத்திலோ அல்லது வடகிழக்கு மூலையாகவோ இல்லாமல், வாயுமூலை எனப்படும் வடமேற்கு பகுதியாக அடுப்பை நகர்த்தி வடக்கு நோக்கி சமைக்கலாம்.
மேற்கு நோக்கி சமைக்கும் படியாக மேடை அமைந்திருந்தால் தென்மேற்கு மூலை, மேற்கு மையத்தை தவிர்த்துவிட்டு, மேற்குவாயு எனப்படும் வடமேற்கு மூலைக்கு அடுப்பை கொண்டு செல்லலாம். எனினும், தவறான சமையல் அறை அமைப்பில் குடியிருக்க நேரிட்டால், ஏழைகளுக்கு அன்னதானம் தரலாம்..
பாத்திரம் கழுவும் குழாய் வடகிழக்கில் இருக்க வேண்டும்.. இந்த திசை மாறியிருந்தால், பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். சமையலறையின் ஜன்னலானது, கிழக்கு திசையில் இருப்பது சிறப்பு.. வடகிழக்கு மூலையில் தண்ணீர் குழாய் இருப்பது பெண்களுக்கு நல்லது.
ஃபிரிட்ஜ், கிரைண்டர்
சமையலறையில் பிரிட்ஜ் வைப்பதற்கான வாஸ்து படி, தென்மேற்கு திசையில் வைக்கலாம். தென்மேற்கு திசை பிரிட்ஜூக்கு உகந்தது, அதேபோல கிழக்கு நோக்கி திறக்கும்படி வைப்பது நல்லது. ஆனால், வடகிழக்கு திசையில் பிரிட்ஜ் வைக்கக்கூடாது,
மாவு அரைக்கும் கிரைண்டர் பிரிட்ஜ் போன்றவை தென்மேற்கில் வைக்கலாம். மசாலா மற்றும் மளிகை பொருட்களை அடுக்கி வைக்கும் மாடத்தை அறையில் தெற்கு மேற்கு பக்கம் அமைக்கலாம். சமையல் அறையின் மேடை மீது கருப்பு கலர் இல்லாமல் இருக்க வேண்டும்.. தென்கிழக்கு பகுதி சுக்கிரன் ஆட்சி பெற்ற பகுதி என்பதால், சுக்கிரனுக்கு உகந்த வெளிர்மஞ்சள் ஐஓரி வண்ணத்தை கிச்சன் சுவர்களுக்கு வண்ணம் தீட்டலாம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications