வாஸ்து டிப்ஸ்.. செருப்பு தானே என்று நினைக்காதீங்க.. கண்ட இடத்தில் போட்டால் கஷ்டம் தேடி வருமாம்!
சென்னை: நம்முடைய வீட்டில் சுபிட்சமும் செல்வமும் நிறைந்திருக்க நாம் சில விசயங்களை கடைபிடிக்க வேண்டும். வாஸ்துபடி சில பொருட்களை சில இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும். கண்ட இடங்களில் பொருட்களை போட்டு வைத்தால் நாம் மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். செருப்புகளை கூட நாம் கண்ட இடங்களில் போட்டு வைக்கக் கூடாது. எந்த இடத்தில் செருப்பை போட வேண்டும் என்று பார்க்கலாம்.
நம்முடைய வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வேண்டும் எனில் நாம் வாஸ்து சாஸ்திரப்படி சில விசயங்களை செய்ய வேண்டும். சரியான திசையில் சரியான பொருட்களை வைப்பதன் மூலம் வாஸ்து தோஷம் ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம். நாம் பயன்படுத்தும் செருப்புகளை சரியான இடத்தில் வைக்க வேண்டும். சிலர் செருப்புகளை கழற்றி வீசுவார்கள் அப்படி செய்யக்கூடாது.

செருப்புகளை அதற்குரிய இடங்களில் மட்டுமே அடுக்கி வைக்க வேண்டும். கண்ட இடங்களில் கழற்றி போட்டால் நாம் சனிபகவானின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். செருப்புக்கும், சனிக்கும் தொடர்பு உள்ளதால் நாம் கண்ட இடங்களில் போடக்கூடாது. அதோடு நாம் கழற்றி வைக்கும் செருப்பு ஜோடியாக நேராக மட்டுமே இருக்க வேண்டும். தலைகீழாக இருக்க கூடாது. செருப்புகளை வாசலில் நேராக அடுக்கி வைக்க வேண்டும், கலைத்தோ சிதறியோ கிடக்கும்படி வைக்கக் கூடாது.
செருப்பை கண்ட இடங்களில் கண்டபடி போட்டு வைத்தால் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இதன் மூலம் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். அதே போல பழைய செருப்புகளை பொக்கிஷம் போல வைத்திருக்கக் கூடாது. பழைய பயன்படாத செருப்புகளை வீசிவிடுவதுதான் நல்லது. அதே போல கிழிந்த அறுந்து போன செருப்புகளை நாம் வீட்டில் வைத்திருக்கக் கூடாது. அது குடும்பத்தில் நிம்மதியின்மையை ஏற்படுத்திவிடும்.
அதே போல வீடு கட்டும் போதே செருப்பு வைப்பதற்கு சரியான இடத்தை தேர்வு செய்து வைப்பது நல்லது. சிலர் வெளியில் போய்விட்டு வந்த உடனே தலைவாசலுக்கு அருகில் செருப்பை கழற்றி விடுவார்கள். அப்படி செய்வது தவறான செயல். கிழக்கு, வடகிழக்கு, வடக்கு பகுதிகளில் செருப்பு வைக்கும் ஸ்டேண்ட் வைக்கக் கூடாது. மேற்கு பகுதியில் மட்டுமே செருப்பு ரேக் வைக்க நல்ல தேர்வு. கிழக்கு, வடக்கு அல்லது, தென்கிழக்கு, வடகிழக்கு ஆகிய திசைகளில் செருப்பு ரேக்கை வைக்க வேண்டாம். வடமேற்கு அல்லது தென்மேற்கு திசைகளில் மட்டுமே செருப்பை வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. செருப்புகளை ஒருபோதும் பூஜை அறைக்கு அருகில் வைக்கக் கூடாது.
வடகிழக்கு எனப்படும் ஈசான்ய மூலையில் செருப்பு ஸ்டேண்ட் வைக்கக்கூடாது. சமையலறை சுவற்றின் அருகில் வைத்தல் நிதி பிரச்சனைகள் வரக் கூடும். தலைவாசலுக்கு நேராக நாம் செருப்பை கழற்றி விடக்கூடாது இது பணவரவுக்கு தடையாக இருக்கும். வீட்டிற்கு வெளியே உபயோகப்படுத்தும் செருப்புகளை ஒருபோதும் வீட்டிற்குள் போட்டுக்கொண்டு நடக்கக்கூடாது. வீட்டிற்குள் போட்டுக்கொண்டிருக்கும் செருப்புகளை நாம் பூஜை அறைக்கு அருகில் கழற்றி விடக்கூடாது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications