விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய நல்ல நேரம்... விரதமிருந்து வணங்கினால் வேண்டிய வரம் தரும் கணபதி
சென்னை: ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதியே விநாயகர் சதுர்த்தி நாளாகும். விநாயகருக்கு விரதமிருந்து கொழுக்கட்டைகளை படைத்து வேண்டினால் வேண்டிய வரம் தருவார். விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை படைத்து பூஜை செய்ய நல்ல நேரம் எப்போது என்று பார்க்கலாம்.
விநாயகர் என்றாலே வேண்டிய வரங்களை உடனே கொடுப்பவர். பெரும்பாலானவர்களுக்கு இஷ்ட தெய்வமாக இருப்பவர் 'விக்னங்களை தீர்க்கும் விநாயகர்', என்று கூட சொல்லலாம். வெறும் கைகளோடு, இரு கை கூப்பி வணங்கி மூன்று தோப்புக்கரணம் போட்டு, தலையில் கொட்டு வைத்துக் கொண்டு, நம்பிக்கையோடு வேண்டினாலே கேட்ட வரங்களை வாரி வழங்குபவர் விநாயகர். தும்பிக்கையான் விநாயகருக்கு விரதம் இருந்து வேண்டினால் நம் வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றுவார்.

விநாயகர் சதுர்த்தி நாளில் விரதம் இருந்து பூஜை செய்து வழிபடலாம். கணபதியை வழிபட திங்கட்க்கிழமையான நாளை நல்ல நேரம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி பூஜை செய்வதற்கு மட்டுமல்ல, விநாயகரை வாங்கி வருவதற்கும் நல்ல நேரம் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அப்படி விநாயகரை எந்த நாளில், எந்த நேரத்தில் வாங்கி வந்து வழிபட வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்களமிகவும் புகழ்பெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு செப்டம்பர் 18 ம் தேதி தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதனால் செப்டம்பர் 18, 19 இரண்டு நாட்களுமே விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு ஏற்ற நாள் தான்.
சதுர்த்தி திதியானது செப்டம்பர் 18 ம் தேதி காலை 11.39 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 19 ம் தேதி காலை 11.50 வரை உள்ளது. சூரிய உதயத்தின் போது சதுர்த்தி திதி இருக்கும் நாளிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. தமிழ்நாட்டில் இன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, காலையிலேயே எழுந்து, பூஜை அறையை அலங்காரம் செய்து, தீபமேற்றி விநாயகருக்கு மிகவும் பிடித்த வெள்ளெருக்கு மாலை, அருகம்புல் மாலை அணிவித்து, மனதார உங்களது விரதத்தை தொடங்கலாம். முடிந்தவர்கள், எதுவுமே சாப்பிடாமல், சதுர்த்தி தினத்தன்று மாலை 6 மணி வரை, விரதம் இருக்கலாம். முடியாதவர்கள், வெறும் பால் பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். சாப்பிடாமல் இருக்க முடியாது என்பவர்கள் ல் மூன்று வேளையும் வயிறார உணவு சாப்பிட்டும் விநாயகர் வழிபாட்டை செய்யலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை.
விநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்கள், காலை 9 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் விநாயகரை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்து விட வேண்டும். செப்டம்பர் 18 ம் தேதி திங்கட்கிழமை என்பதால் காலை 07.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் உள்ளது. அதனால் 9 மணிக்கு மேல் விநாயகர் சிலையை வீட்டிற்கு வாங்கி வருவது நல்லது. விநாயகர் சதுர்த்தி பூஜையை பகல் 12 மணி முதல் 01.30 வரையிலான நேரம் அல்லது மாலை 6 மணிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
செப்டம்பர் 19 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்கள், காலை 7 மணி முதல் 08.45 வரையிலான நேரத்தில் விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டில் வைத்து விட வேண்டும். அன்றைய தினம் செவ்வாய்கிழமை என்பதால் காலை 9 மணி முதல் 10.30 வரை எமகண்ட நேரம் துவங்கி விடும். அதனால் அதற்கு முன்பாக விநாயகர் சிலையை வீட்டிற்கு கொண்டு வந்து வைத்து விட வேண்டும். காலை 10.30 மணிக்கு மேல் பகல் 12 மணிக்குள்ளான நேரத்திலும், மாலை 6 மணிக்கு மேலும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை செய்யலாம்.
விநாயகர் சதுர்த்தி நாளில் விரதம் இருப்பவர்கள் கொழு கொழு பிள்ளையாருக்கு படைக்க பல வீடுகளில் கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, பழங்கள், வசதிக்கு ஏற்ப இனிப்புகள் என பட்சணங்களை தயார் செய்வார்கள். இதுவே பிள்ளையாரை சின்ன பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்துப்போக காரணமாகிறது.
விநாயகர் சதுர்த்தி நாளில் பிள்ளையாருக்கு பிரசாதம் செய்து வழிபடுவதில் ஒரு சூட்சம ரகசியம் உள்ளது. உங்களுக்கு நிறைவேறாத வேண்டுதல் ஏதாவது மனதில் இருந்தால், அதை விநாயகரிடம் சொல்லுங்கள்! அப்படி சொல்லும்போது, ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் விநாயகரின் பாதங்களில் வைத்து விடுங்கள். நீங்கள் வைக்கக்கூடிய அந்த வேண்டுதல் அடுத்த விநாயகர் சதுர்த்திக்குள், நிறைவேற வேண்டுமென்றும் வேண்டுதல் வையுங்கள்.
விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டைகளை 11, 21, 51, 101 இப்படி ஒற்றைப்படையில் தயாரித்து விநாயகருக்கு முன்பு நைவேத்தியமாக படைக்க வேண்டும். உருண்டைகளை பிடிக்கும் போதே உங்களது வேண்டுதலை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.பூஜை முடிந்தவுடன் அந்த உருண்டைகளை, உங்கள் வீட்டில் அக்கம்பக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விட வேண்டும்
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இப்படிப்பட்ட தோஷ நிவர்த்திக்கு கூட சதுர்த்தி விரதம் நல்ல பலனை கொடுக்கும். பிள்ளைகளின் படிப்பில் பிரச்சினை இருப்பவர்கள், பிள்ளைகளின் வாழ்க்கையில் பிரச்சினை உள்ளவர்கள் இந்த விநாயகர் சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டால், அவர்கள் வாழ்க்கையில் தெளிவு பிறக்கும். பெற்றோர்களின் வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications