வேண்டியதை நிறைவேற்றும் விரலி மஞ்சள்.. வியப்பு தரும் விரலி மஞ்சள்.. தம்பதி ஒற்றுமைக்கு எளிய பரிகாரம்
சென்னை: எந்தவொரு குடும்பமாக இருந்தாலும் தம்பதிகளின் ஒற்றுமையே அந்த குடும்பத்தை வழிநடத்தி செல்கிறது.. தம்பதிக்குள் ஒற்றுமை குலையும்போது, உறவுகளுக்குள் விரிசல் ஏற்பட்டு, குடும்பமே சிதறிப்போகவும் வாய்ப்புண்டு.. இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்ய விரலி மஞ்சள் பரிகாரம் கை கொடுக்கிறது.. இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா? விரலி மஞ்சள் ஆன்மீகத்தில் பெற்றுள்ள முக்கியத்துவம் என்னென்ன தெரியுமா? அவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
மஞ்சளில் பல வகைகள் இருந்தாலும், பரிகாரத்திற்கு உதவுவது விரலி மஞ்சள்தான்.. மருத்துவ குணம் நிறைந்த இந்த மஞ்சள் ஆண்டிபயாடிக்காக செயல்படுகிறது..

தொற்றுகளை அண்ட விடாது.. மருத்துவத்தில் மஞ்சளுக்கு தனி முக்கியத்துவம் இருப்பதுபோலவே, ஆன்மீகத்திலும் முக்கியத்துவம் உள்ளது.. காரணம், மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவது இந்த மஞ்சள்தான்.
திருமண தடை நீக்கும் விரலி மஞ்சள்
எந்த காரியத்தை செய்தாலும் தடங்கல் உள்ளதா? திருமண யோகம் கைகூடி வரவில்லையா? இப்படி எந்த செயலாக இருந்தாலும், அவைகளிலுள்ள தடைகளை நீக்கும் சக்தி விரலி மஞ்சளுக்கு உண்டு.. விரலி மஞ்சளை கொம்பு மஞ்சள் என்றும் சொல்வார்கள்.
திருமணத்தடை உள்ளவர்கள், தங்கள் வயது என்னவோ, அந்த எண்ணிக்கையில் விரலி மஞ்சளை எடுத்து கொள்ள வேண்டும்.. அவைகளை சுத்தமான மஞ்சள் நூலில் கோர்த்து, ஒவ்வொரு புதன்கிழமையும் விநாயகருக்கு சாற்றி வழிபட வேண்டும். இதனால், திருமண தடை விரைவில் நீங்கும்.
தீராத நோயை தீர்க்கும் மஞ்சள்
அதேபோல, தினமும் காலையில் குளித்து முடித்ததுமே, பூஜை அறையில் அம்பாள் படத்திற்கு முன்பு ஒரு விரலி மஞ்சளை வைத்து விளக்கேற்றி 48 நாட்களுக்கு பூஜை செய்து வரலாம்.. தினம் ஒன்று வீதம் சேர்ந்த 48 மஞ்சள்களை மாலையாக கோர்த்து, கோவிலுக்கு சென்று அம்பாளுக்கு சாற்றி வேண்டி கொள்ளலாம். இதனால் திருமண தடை மட்டுமல்ல, தீராத நோயும் தீரும் என்பது நம்பிக்கையாகும்.
மஞ்சள் நோய்களை தீர்க்கும் சக்தி இந்த விரலி மஞ்சளுக்கு உண்டு என்பார்கள்.. அதேபோல 108 விரலி மஞ்சள்களை மஞ்சள் கயிற்றில் கட்டி, அம்பாளுக்கு வெள்ளிக்கிழமையில் சாற்றி தரிசனம் செய்து விளக்கேற்றி வழிபடலாம்..
48 விரலி மஞ்சள்கள்
48 விரலி மஞ்சள்களை எடுத்து, ஒவ்வொன்றின் மீதும், குங்குமம் வைக்க வேண்டும். இந்த 48 விரலி மஞ்சளை ஒரு தட்டில் வைத்து தாயார் மகாலட்சுமியின் பாதங்களில் வைத்துவிட வேண்டும்.
தினமும் காலையில் குளித்து முடித்து, பூஜை அறையில் தீபம் ஏற்றி, மகாலட்சுமி தாயாருக்கு 2 ஏலக்காயை நைவேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு தட்டில் உள்ள 48 விரலி மஞ்சளிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து தாயாருக்கு அர்ச்சனை செய்து வரவேண்டும்.
அர்ச்சனை முடிந்ததுமே, அந்த மஞ்சள் கொம்புகளையும், தாம்பூல தட்டிலேயே பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக அர்ச்சனை 48 நாட்கள் பூஜை செய்து முடித்ததுமே, சேர்த்து வைக்கப்பட்டுள்ள 48 விரலி மஞ்சள்களையும் மாலைபோல கட்டி, கோயிலுக்கு சென்று தாயாருக்கு மாலையாக போட வேண்டும். இதனால் உங்களது பிரார்த்தனை விரைந்து நிறைவேறும். உங்கள் மனதிலுள்ள குறைகளும் நீங்கும்..
தம்பதியை சேர்த்து வைக்கும் பரிகாரம்
தம்பதிக்குள் இணக்கமான சூழல் இல்லாமல் தகராறுகள் வெடித்து காணப்பட்டால், கொம்புள்ள 2 விரலி மஞ்சள் செவ்வாய்க்கிழமையன்று வாங்கி வைத்து கொள்ள வேண்டும். தம்பதியின் உடைகளிலிருந்து நூல் அல்லது சிறிய அளவிலான துணியை எடுத்து கொள்ள வேண்டும். இப்போது விரலி மஞ்சளில் ஆணின் துணியையும், இன்னொரு விரலி மஞ்சளில் பெண்ணின் துணியையும் சுற்றிக்கொள்ள வேண்டும்.
பாதி சுற்றியதுமே, 2 விரலி மஞ்சள்களையும் சேர்த்து, தம்பதியின் துணிகளையும் ஒன்றாக சேர்த்து சுற்ற வேண்டும். பிறகு இதனை பூஜையறையில் வைத்து, தீபமேற்றி தம்பதிக்குள் சண்டை சச்சரவுகள் நீங்க வேண்டும் என்று பிரார்த்திக் கொள்ள வேண்டும்.
புற்று அமைந்துள்ள கோயில்
மறுநாள் காலையில் இந்த மஞ்சளை, கோயிலுள்ள புற்றில் போட்டு, அந்த புற்றை சுற்றிலும் மஞ்சள், குங்குமத்தை தூவ வேண்டும். பிறகு உங்களது வேண்டுதலை கூறிவிட்டு, புற்றை சுற்றிலும் கொட்டியிருக்கும் மஞ்சளிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்து வந்து வீட்டு பூஜையறையில் வைத்துவிட வேண்டும்.
மறுநாள் காலையில் தம்பதி இருவருமே இந்த மஞ்சளை, தாங்கள் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும். இப்படி 9 வாரங்கள் செய்து வரும்போது, தம்பதிக்குள் மனைவிக்குள் எப்பேர்ப்பட்ட மனஸ்தாபமாக இருந்தாலும் அவை அனைத்துமே நீங்கிவிடுமாம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications